திருமறை
“அப்படி என்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன ?”
என்று (பிர் அவுன் ) கேட்டான்
இது திருமறையில் எந்தப்பகுதியில் வருகிறது ?
விடை
சுராஹ் தாஹா வசனம் 51 (20:51)
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
முத்தவல்லி அக்பர் அலி—முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷிரீன் பாருக்
விளக்கம்
இறைவன் ஆணைப்படி நபி மூஸா அவரகளும் ஹரூன் நபி அவர்களும்
கொடுங்கோல் மன்னன் பிர் அவுனுக்கு ஏக இறைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லப் போகிறார்கள்
அப்போது பிர் அவுனுக்கும் நபி மூஸாவுக்கும் இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி இந்த வசனம் ---மிக நுட்பமான் பொருள் பொதிந்த வசனம்
“உங்கள் இறைவன் யார் /” என்று பிர் அவுன் கேட்க
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி ,பின்னர் நேர்வழி காட்டியிருக்கிறானே அவனே எங்கள் இறைவன் “ என நபி மூஸா சொல்கிறார்
உடனே பிர் அவுன் “மூதாதையரின் நிலை என்ன “ என்று கேட்கிறான்
மிக எளிமையாகத் தோன்றும் இந்த வினாவில் மிகப்பல செய்திகள் அடங்கி உள்ளன
“ மூஸா சொல்வதுதான் இறைவன் என்றால் இது வரை மற்ற பல தெய்வங்களை வழிபட்ட எங்கள் மூதாதையர் எல்லாம் அறிவில்லாதவர்களா , மூடர்களா ,சிந்திக்கும் திறன் அற்றவர்களா ,தீய வழியில் செல்பவ்ர்களா? ”
என பல பொருள்கள் அடங்கிய இந்த வினா மூலம் பிர் அவுன் தன் முன்னோரை அறிவில்லாதவர்கள் போல் சித்தரிக்கும் மூசாநபி மேல் தன் வெறுப்பையும் சினத்தையும் வெளிப்படுதுதுகிறான்
இதே சினத்தையும் வெறுப்பையும் தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் , பணியாளர்கள் , பொது மக்கள் அனைவரின் உள்ளத்திலும் விதைத்து அவர்கள் உணர்வுகளை நபிக்கு எதிராகத் தூண்டி விட எண்ணுகிறான்
உங்கள் முன்னோர்கள் மடையர்கள் என்று சொல்வது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறான்
அவன் எதிரபார்த்த மூசாவின் விடை
“ ஆம் உங்கள் முன்னோர்கள் அனைவரும் அறிவில்லாதவர்கள்
, வழி தவறியவர்கள் . அவர்களுக்கு நரகம்தான் கிடைக்கும்”
என்பது
இது இன்றளவும் உண்மையை, நல்வழியை எதிர்த்துப் போர் தொடுக்கும் தீயவர்கள் கையாளும் ஒரு தந்திரம் –
நுட்பமான உணர்வுகளை மக்களிடையே தூண்டி எரிய விட்டு அதில் குளிர் காய்வது
ஆனால் நபியின் மறுமொழி முற்றிலும் வேறு பட்டு , ஞானம் நிரம்பிய ஒரு விடையாக வருகிறது "
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது
என் இறைவன் தவறு செய்வதும் இல்லை , மறப்பதும் இல்லை “ என்று மூஸா சொல்கிறார் (20:52)
இந்த விடையினால் மக்களைத் தூண்டி விடும் பிர் அவுனின் முயற்சி தோல்வி அடைந்து விடுகிறது
மேலும் “முன்னோர் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் வழியைத் திருத்தி நல வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் பெற முயற்சிப்போம் “ என்ற செய்தியும் வெளிப்படுகிறது
தாஹா சூராஹ் பற்றி ஒரு செய்தி
இஸ்லாத்தின் கடும் எதிரியாக இருந்து பின்இஸ்லாத்தில் முழுமையாக இணைந்து புகழ் பெற்ற கல்பாவாக இருந்த உமர் ரலி அவர்களின் மனமாற்றத்துக்கு இந்த தாஹா சூராஹ் ஓதக் கேட்டதுதான்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
18 ஷவ்வால் (10) 1443
20 052022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment