Friday, 13 May 2022

பொடிக் கறி ஆணம்

 பொடிக் கறி ஆணம்

சொன்னாலே,
ஏன் நினைத்தாலே வாய் ஊறும் பலருக்கு
இது எங்கள் திருப்பதூரின் சிறப்பு உணவு ,
மிகச் சிறந்த உணவு
தாளிச்சொறு , (நெய்ச் சோறு?) ,பொடிக் கறிக்குழம்பு ,காய்க் குழம்பு
வேறு எந்த பக்க உணவும் கிடையாது இதுதான்- கல்யாணம் காச்சி என எந்த விருந்தாக இருந்தாலும் செல்வந்தர் முதல் எளியவர் வரை
மதிய உணவு
பிரியாணியை மிஞ்சிய சுவை,
திகட்டாமல் நிறைய சாப்பிடலாம்
தரையில் உட்கார்ந்துதான் சாப்பாடு .
யாருக்கும் மூட்டு வலி இல்லை
வைக்கோல்தான் சாப்பாட்டு விரிப்பு
பிறகு பிரியாணி , மேசை ,நாற்காலி என்று காலத்தின் மாற்றம்
அதென்ன பொடிக் கறிக் குழம்பு ?
அதற்கு முன்- ஆணம் – குழம்பைக் குறிக்கும் ஒரு சங்கத் தமிழ் சொல்
இன்றும் எங்கள் ஊரிலும் சில கடற்கரைப் பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ள சொல்
ஒரு சிறப்பான தனியான மசாலாப்பொடி
வீட்டிலேயே வறுத்து அரைத்தால் இன்னும் சிறப்பாம்
நிறைய கறி (மட்டன் )
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்த வரை
எங்கள் ஊர் கறிக்கு ஒரு தனிச் சுவை இருப்பதாய்ச் சொல்வார்கள்
ஒரிஜினல் கறி இதுதான் என்று சொல்பவர்களும் உண்டு.
அவர்கள் யாரும் இப்போது எங்கள் ஊரில் இல்லை
போன இடத்தில் என்ன கறி சாப்பிடுகிறார்கள் ?
அவர்கள்தான் சொல்ல வேண்டும்
ஆனால் முன்போல் சுவையாய் நெயச் சோறு பொடிக குழம்பு செய்ய இப்போது யாரும் இல்லை என ஒரு பரவலான கருத்து
(என்னுடைய முதல் தேர்வு நெயச் சோறு குருமா, , சாம்பார் – அதிலும் அம்மா நெயச் சோறுக்கு வைக்கும் சிறப்பு சாம்பார்
அதற்கப்புறம்தான் பொ க )
திருப்பத்தூரின் இன்னொரு சிறப்புச் சுவை ரொட்டி குழம்பு
நாலைந்து (பரோட்டா) ரொட்டியை பிச்சுப்போட்டு நிறைய குழம்பு ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடுவது –
அந்தச் சுவை சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
முன்பு மாதவன் ஹோட்ட்ல்தான் ரொட்டி குருமாவுக்கு பேர் போன இடமாக இருந்தது . அதற்கப்புறம் ராசாக்கிலி ஹோட்டல்
நெய்புரோட்டா இதன் சிறப்பு உணவு .
நெய் புரோட்டா வேண்டும் என்று சொன்னபிறகுதான் நெய் வாங்க ஆள் அனுப்புவார்கள்
இப்போதும் ஹோட்டல் இருக்கிறது ரொட்டியும் இருக்கிறது குழம்பும் இருக்கிறது பிச்சுப் போட்டு ஊற வைத்தும் தருகிறார்கள்
ஒன்றே ஓன்று காணாமல் போய் விட்டது ---
பழைய சுவை
இருந்தாலும் கூட்டத்துக்குக் குறைச்சல் இல்லை
இப்போது எதற்கு திரு . புராணம் ?
காரணம் இருக்கிறது
தாவன்னா பெரியத்தா மகன் முகமதலி அண்ணனின் மகள் வழிப் பேத்தி திருமணம் திறப்பத்தூரில்
எங்கள் மகள் குடும்பம் உட்பட உறவினர்கள் பலரும் அங்கே கூடியிருக்க
கடந்த சில நாட்களாக தொலை பேசியிலும் கட்செவியிலும் நிறைய சுவையான செய்திகள் திருப்பத்தூர் பற்றி .
மிகச் சிறப்பான் ஒரு ஹாலிடே ரிசார்ட் , ஹெல்த் ரிசார்ட் என்று எண்ண வைக்கும் பதிவுகள் – போனவர்கள் போகாதவர்கள் எல்லோரிடமிருந்தும்
அத்தா , அம்மா , துணைவி க்கு சொந்த ஊர் ; இரண்டு பிள்ளைகளும் பிறந்த ஊர்
நான் அங்கு பிறக்கவில்லை அதிக நாள் வாழ்ந்ததும் இல்லை
என்றாலும் சொந்த ஊர் , சொந்த மண் என்ற பாசப்பிணைப்பு
அதனால் என்னை அறியாமல் மனதில் ஏற்படும் உற்சாகம்
அதன விளைவு, விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் மனதில் தோன்றும் நினைவுகள் ,
இன்னும் ஒரே ஒரு சுவை பற்றி
கொட்டிக்கிழங்கு
திருப்பதூர் , தவிர வேறெங்கும் இதை பார்த்த சுவைதத நினைவில்லை
சுவை கூட இப்போது மறந்து விட்டது . ஆனால் நல்ல சுவை
இந்தக் கொட்டிக் கிழங்குக்கு ஒரு சுவையான இலக்கியப் பின்னணியும் உண்டு
கம்பன் , அவர்மகன் அம்பிகாபதி இருவரும் சோழ மன்னன் அரண்மனையில் இருக்கும்போது அங்கு மன்னன் மகள் அமராவதி வருகிறார்
அம்பிகானபதியின் மனதில் உள்ள காதல் கவிதையாய்ப் பெருக்கெடுத்து வருகிறது
''இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசைய....''
என பாடினான்.
இதைக் கேட்ட மன்னன் சினம் கொள்ள , அதைக் கண்ட கம்பன்
மகனை இடை மறித்து
“கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்
தந்நாவில் வழங்கோசை வையம் பெறும் “
என்று பாடி நிறைவு செய்கிறான்
அப்போது வீதியில் கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவியபடி பெண் ஒருத்தி செல்ல, அதைப்பார்த்த மன்னன் சினம் தணிகிறான்
கவிச் சக்ரவர்த்தியைக் காப்பாற்ற கலைமகளே கிழங்கு விற்கும் பெண் உருவில் வந்தார் எனச் சொல்லப்படுகிறது
ஏற்கனவே திருப்பத்தூர் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்
எனவே இத்துடன் இந்தப் பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
14052022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of food
Like
Comment
Share

No comments:

Post a Comment