திருமறை
“திண்ணமாக உங்கள் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான் “
இந்தத் திருமறை வசனம் வரும் இடம் எது ?
விடை
சுராஹ் 108 அல் கவ்ஸர் வசனம் 3 (108:3)
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலி- முதல் சரியான விடை
முத்தவல்லி அக்பர் அலி
பர்ஜானா
மூவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
விளக்கம்
குர்ஆனின் மிகச் சிறிய சுராஹ்
மூன்றே வசனங்கள்
பொருளோ மிக விரிவானது
நபி ஸல் அவர்களுக்கு ஆறுதல் கூற இறைவன் இறக்கிய சூராஹ்
“நபி ஸல் அவர்கள் தன் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட நிலை
உதவிக்கு யாரும் இல்லை
அவர்களின் வணிகம் சிதைந்து விட்டது
நபியின் சொற்களை, அறிவுரையை திருமறை வசனங்களை காது கொடுத்துக் கேட்க ஆளில்லை
இதற்கெல்லாம் மேல் நபி பெருமானின் ஆண் குழந்தைகள் மறைவு
எனவே அவர் வாழ்நாள் முழுதும் இப்படித் தோல்வி மயமாகவே இருக்கும்
அவர் காலத்துக்குப்பின் அவர் பெயரைச் சொல்லக்கூட வாரிசுகள் யாரும் இல்லை “
இதுதான் எதிரிகளின் எண்ணம், ஆசை, நம்பிக்கை
இப்படி ஒரு சிரம நிலையில் நபி ஸல் அவர்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக வருகிறது இந்த சூராஹ்
குறிப்பாக இந்த மூன்றாவது வசனம் நபி ஸல் அவர்கள் பெயர் வாரிசு இல்லாததால் வேரற்றவராகி விட்டார் என்ற எதிரிகளின் எண்ணத்திற்கு இறைவன் விடை அளிப்பது போல் இருக்கிறது
நபி ஸல் அவர்களின் பெயர் இன்றளவும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகை , தொழுகை அழைப்பு இன்னும் மற்ற மதச் சடங்குகளிலும் இடைவிடாமல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
பெயர் சொல்லப் படும்போதெல்லாம்
ஸல்லல்லாகு அலா முகம்மது ஸல்லலாகு அலைகுவஸல்லம்
(சுருக்கமாக ஸல் )
என்று நபி அவர்களுக்கு வாழ்த்து (ஸலவாத்து) சொல்லப்படுகிறது
இதன் பொருள்
“இறைவன் நபி அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக “
என்பதாகும்
உலகம் உள்ளவரை இது தொடரும்
மனித குலத்தில் வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பை நபி ஸல் அவர்களுக்கு இறைவன் அருளியிருக்கிறான்
முதல் வசனத்தில் வரும் அல் கவ்ஸர் என்ற சொல் இந்த சுராவின் பெயராக வருகிறது
கவ்ஸர் என்பது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றைக் குறிக்கிறது என்பது நபி மொழி
வற்றாத, அள்ள அள்ளக் குறையாத வளத்தைக் குறிக்கும் கவ்ஸர் என்ற சொல்லின் முழுப் பொருளை சொல்லும்படி எந்த மொழியிலும் ஒரு சொல் இல்லை என்பது அறிஞர்கள் கருத்து
நபி ஸல் அவர்களுக்கு இறைவன் அருளிய
நெறி தவறாத வாழ்க்கை முறை
நபித்துவம்
திருமறை
அறிவும் ஞானமும்
உலகம் உள்ளளவும் அவர் பெயர் போற்றவும் வாழ்த்தவும் படுதல்
இவை எல்லாம் இறைவன் அள்ளிக்கொடுத்த அருட்கொடையில் உள்ளவை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
11 ஷவ்வால் (10) 1443
13 05 2022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment