திருமறை குரான் 2:122 பனி இஸ்ராயில்
“
“இஸ்ராயிலின் வழித் தோன்றல்களே !
நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும்
உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள் “
திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை , விளக்கம்
, 2:40 , 2:47, 2:122, 45:16
என திரு மறையில் பல இடங்களில்
இஸ்ராயிலின் வழித் தோன்றல்கள்- ( பனி இஸ்ராயீல்) பற்றியும்
அவர்களுக்கு வழங்கப்பட்ட மேன்மை பற்றியும்
வருகிறது
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாரட்டுப்பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஹசன் அலி
ஷர்மதா
பர்ஜானா
இது பற்றி ஒரு விளக்கம் – நீண்ட விளக்கம் , சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்
நுஹ் நபிக்குப்பின் ஏக இறைக் கொள்கையை மனிதகுலத்துக்கு எடுத்துச் சொல்ல இறைவன் அனுப்பியது நபி இப்ராஹீம் அவர்களை
இந்தபணியில் நபி இபராஹீம் அவர்கள் அரபு நாட்டின் பல பகுதிகளுக்கும் சிரியா, பாலஸ்தீனம் இராக், எகிப்து என பல இடங்களுக்கும் பயணம் செய்தார்கள்
பின்னர் இந்தப்பணியில் துணைவர்கள்பலரை ஈடுபடுத்தினார்கள்
காபா எனும் புனித ஆலயத்தை மக்காவில் அமைத்தார்கள்
மகன் இஸ்மாயிலை அரபு நாட்டுக்கும்,
மகன் இஷஹாக்கை சிறியா, பாலஸ்தீனத்துக்கும் ,
உறவினர் லூத்தை ட்ரான்ஸ்ஜோர்டான் பகுதிக்கும் அனுப்பினார்கள்
(
இப்ராஹிமின் சந்ததி
இஸ்மாயிலின் மக்கள்,
இஷ்ஹாக்கின் மக்கள் என இரண்டு கிளைகளாய்ப் பிரிந்தது
இதில் இஸ்மாயிலின் கிளை மக்கள் அரபு நாட்டில் வாழ்ந்தார்கள்
இஷ்ஹாக்கின் மக்கள் என்ற கிளையில்
யாகூப், யூசுப் , மூஸா , தாவுத் , சுலைமான் , யஹ்யா ஈசா என
மிகப்பல நபி மார்கள் தோன்றினார்கள்
(இப்ராஹீம் நபி மகன்
இஷ்ஹாக் நபி மகன்
யாகுப்நபி மகன்
யூசுப் நபி )
யாகூப் நபி இஸ்ராயில் என அழைக்கபட்டார்
எனவே அவரது வழிதோன்றல்கள்
பனி இஸ்ராயில் இஸ்ராயிலின் மக்கள் என்று சொல்லப்பட்டனர்
இப்ராகிம் நபி குடும்பக் கிளையில் இருந்து யூத மதமும் கிறித்தவ மதமும் தோன்றின
தனி மனிதனையும் சமுதாயத்தையும் இறைவழி நடத்துவதே இப்ராகிம் நபியின் நோக்கம்
தானும் அவ்வழியே நடந்து மக்களுக்கு வழி காட்டியாய் விளங்கியவர் இப்ராகிம் நபி
அதனால்தான் உலக மக்கள் அனைவருக்கும் இறைவழி நடத்தும் தலைவராய் இறைவன் அவரை நியமித்தான்
அவர் காலத்துக்குப்பின் அந்தத் தலைமைப் பொறுப்பு அவர் வழிதோன்றல்கள் இப்ராகிம் மகன் இஷ்ஹாக்,
இஷ்ஹாக் மகன் யாகுப் போன்றோர் உள்ள கிளையிடம் கொடுக்கப்பட்டது
இந்தக் கிளை பனிஇஸ்ராயில் – இஸ்ராயிலின் மக்கள் என்று அழைக்கப்பட்டது
முன்பே குறிப்பிட்டது போல் இந்தக் கிளையில் பற்பல நபி மார்கள் தோன்றினர்
இந்தக்கிளைக்கு ஞானத்தையும் நேர்வழியையும் அருளிய இறைவன் உலக மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தான்
இந்த பொறுப்பை இறைவன் அருளியதால் இவர்களை மிகவும் மேம்படுத்தப்பட்ட சமுதாயம் என இறைவன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான் , நினைவூட்டுகிறான்
ஆனால் காலப்போக்கில் அவர்களே வழி தவறி மக்களுக்கு வழிகாட்டும் தலைமைப்பொறுப்பை இழக்கிறார்கள்
தலைமைப் பொறுப்பு இப்ராஹீம் வழித்தோன்றல் என்பதால் மட்டும் வந்து விடாது
இப்ராகிம் நபியைப்போல் உண்மையும் நேர்மையும் பொறுமையும் உடையவ்ருக்கே தலைமைப் பதவி உரியது என்பதை இறைவன் எடுத்துரைக்கிறான்
மேலும் நபித்துவம் பனி இஸ்ராயில் கூட்டத்தின் தனி உரிமை அல்ல என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இஸ்மாயில் வழித் தோன்றல்களில் நபி முகமது ஸல் அவர்களை தோற்றுவித்து தலைமைப் பொறுப்பு முகமது நபி ஸல் அவர்களிடமும் அவர் கூட்டத்தாரிடமும் ஒப்படைக்கப் படுகிறது
அதன் பின் கிப்லாவும் ஜெருசலத்தில் இருந்து நபி இப்ராகிம் இறைவன் கட்டளைப்படி அமைத்த காபாவுக்கு மாற்றபடுகிறது
முடிந்த வரை சுருக்கமாக விளக்கியிருக்கிறேன்
தவறுகள், விடுதல்கள் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25ஷவ்வால் (1௦)1443
27மே2022வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment