Friday, 30 December 2022

புதியதோர் உலகம்

 புதியதோர் உலகம்

31122022

புதிய காற்றுத்கான்
ஒவ்வொரு மூச்சிலும்
புதிய விடியல்தான்
ஒவ்வொரு நாளுமே
பிறகென்ன தனியாக புத்தாண்டுக் கொண்டாட்டம் !
கண், காது மனகை விரிவாகத் திறந்து வைத்தால் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை அள்ளித்தரும் பாடங்களுக்கு அளவே இல்லை
நிமிடம், மணி , நாள் வாரம் போல் ஆண்டும் ஒரு காலக்கக் கணக்கு
நம் செயல்களை திட்டமிட
செய்தவற்றைத்திரும்பிப் பார்க்க
திரும்பிப் பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை
கூடிய மட்டும் வாரம் தவறாமல் நான்கு பதிவுகள் என்று 200க்கு மேல் பதிவுகள் வழக்கம் போல் போட்டேன்
கூடுதலாக சில முகநூல் குழுக்களுக்கு பதிவுகளை அனுப்பினேன் ஓரளவு எதிர்பார்த்ததுக்கு மேல் இறைவன் அருளால் நல்ல வரவேற்பு இருந்தது
ஈகைத் திருநாளுக்கு முந்தைய 30 நாட்களும், தியாகத் திருநாளுக்கு முந்தைய10 நாட்களும் இஸ்லாம் பற்றிய பதிவுகள் வெளியிட்டேன்
இந்த ஆண்டு முகநூல் என் பதிவு எதற்கும் தடை விதித்த நினைவில்லை
ஆனால் பல ஆண்டுகள் முகநூல் வெளியிட்ட நினைவுப் பகிர்வுக்கு ஒரு குழு தடை விதித்ததன் காரணம் வழக்கம் போல் புரியவில்லை
வரும் ஆண்டில் ?
எழுத்துப் பணியில் சில மாற்றங்கள்
குழுவில் உள்ள அனைவரின் திறமை வெளிப்படும்படி எல்லோரையும் எழுதத்தூண்டி உற்சாகப் படுத்தி வருகிறேன்
இது ஒரு புதிய முயற்சி
பழைய பதிவுகள் மீண்டும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது
எப்படி, எப்போது என்பதெல்லாம் இன்னும் மனதில் உதிக்கவில்லை
கதவடைப்பால் படிப்பு தொடர முடியவில்லை
இறைவன் நாடினால் எல்லாம் சரியாகும்
நல்லவை நாடி இனிய சொல்லி, செய்து அறம் பெருக்குவோம் ஒவ்வொரு நொடியும்
இறைவன் நாடினால் நாளை புதுப்பொலிவில் சிந்திப்போம்
31122022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be an image of text that says "கிறுக்கல்கள்"
Like
Comment
Share

Thursday, 29 December 2022

திருமறை குரான் 29:2 வாய்மொழி இறை நம்பிக்கை

 

திருமறை குரான்

 

29:2 வாய்மொழி இறை நம்பிக்கை

 

 

":இறை நம்பிக்கை கொண்டோம் “ என வெறுமனே சொல்வதால் மட்டும் சோதனைகளில் இருந்து தப்பித்து விடலாம் “ என்று எண்ணிக்கொண்டார்களா –

 

குரான்

 

 இடம் பொருள் விளக்குக

 

விடை

 

சூராஹ் 29 அல் அனகபுத் (சிலந்தி )

வசனம் 2.

 

சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்

சகோ

 

ஹசன் அலி – முதல் சரியான விடை

 

ஷிரீன் பாரூக்

ஷர்மதா

 

முயற்சித்த சகோ சிராஜூதீனுக்கு நன்றி

 

அவர் அனுப்பிய 2:8, 2:9 என்பது பொருளளவில் சரியாக இருக்கிறது

 

 விளக்கம்

 

இறை நம்பிக்கை கொண்டோர் மீது கொடுமைகள்  கூடிக்கொண்டே போன ஒரு நிலையில் இந்த வசனம் இறங்கியது

 

ஏழைகள் , அடிமைகள் என்றால் அடித்து உதைப்பதில் துவங்கி சொல்ல முடியாத கொடுமைகள்

வணிகர் என்றால் அவர்கள் வணிகம் நசிக்கச் செய்வது

வசதி படைத்தவர் என்றால் அவரை பல விதமாக கேலி,கிண்டல் செய்வது என்று பலமுனைத் தாக்குதல்

 

இதனால் அச்சம் கொண்ட பலர், இறை நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்தத் தயங்கினர்  

 

அவர்களுக்கு ஆறுதல் சொல்லி மன உறுதியை வலுப்படுத்தி

தீயவர்களை எச்சரிக்கும் விதத்தில் இந்த வசனமும் தொடர்ந்து வசனம் 3 , 4 கும் வருகின்றன

 

 

“------அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதனைக்கு உட்படுத்தினோம் -------“  29:3

 

“தீங்கு செய்வோர் நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா ?—“  29:4

 

இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்

 

06 ஜமாத்துல் ஆஹிர் (6) 1444

30122022 வெள்ளி

சர்புதீன் பீ



May be an image of text that says "THE TEST DO PEOPLE IMAGINE THAT THEY WILL BE LEFT ΤΟ SAY WE BELIEVE, AND WILL NOT BE TESTED? (29:2)"

5 shares
Like
Comment
Share

Tuesday, 27 December 2022

தமிழ் (மொழி) அறிவோம் தடல்

 தமிழ் (மொழி) அறிவோம்

தடல்
28122022 புதன்
வாழைமடல்
விலங்கின் தோல்
மேட்டு நிலம்.
என பல பொருட்கள் கொண்ட மூன்றெழுத்துச் சொல் எது?
விடை
தடல்
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கணேச சுப்பிரமணியம் --
முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்
முயற்சித்த சகோ கிரஸண்ட் ஷேக்குக்கு நன்றி
(நன்றி சகோ சோமசேகர்
10102022 அன்று வந்த அவரது கவிதையில் இந்தச் சொல்லைக் கண்டு
பொருள் தேடும்போது இன்னும் சில புதிய சொற்கள்
பொருளோடு அறிந்தேன்)
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
28122022புதன்
சர்புதீன் பீ
No photo description available.
3 shares
Like
Comment
Share

English QUIZ Nag

 English QUIZ

Nag
26122022 mon
A word of 3 letters with a vowel in the middle with many meanings:
- sound of men and animals
- a man of unpleasant behaviour
What is it?
Answer
Nag
Greetings and congratulations to
Mr . Sirajuddin
For correct answer
He is the only person to have sent the correct answer
Nag is not the word I selected
As it matches with all the clues I have taken it as correct answer
Thanks to
M,/S A R Viswanathan
Nazima Feroz Ashraf Hameeda and
Sharmatha
For attempting
Cad moo rut cur & cad are the other answers recieved
Irrelevant answers like
Bad and mad may please be avoided
Let's meet tomorrow in Tamil
ISA
26122022mon
Sherfuddin P
May be an image of one or more people and text
2 shares
Like
Comment
Share