திருமறை குரான்
29:2 வாய்மொழி இறை
நம்பிக்கை
":இறை நம்பிக்கை கொண்டோம் “ என வெறுமனே சொல்வதால் மட்டும் சோதனைகளில்
இருந்து தப்பித்து விடலாம் “ என்று எண்ணிக்கொண்டார்களா –
குரான்
இடம் பொருள் விளக்குக
விடை
சூராஹ் 29 அல் அனகபுத் (சிலந்தி )
வசனம் 2.
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
ஷிரீன் பாரூக்
ஷர்மதா
முயற்சித்த சகோ சிராஜூதீனுக்கு நன்றி
அவர் அனுப்பிய 2:8, 2:9 என்பது பொருளளவில் சரியாக இருக்கிறது
விளக்கம்
இறை நம்பிக்கை கொண்டோர் மீது கொடுமைகள் கூடிக்கொண்டே போன ஒரு நிலையில் இந்த வசனம்
இறங்கியது
ஏழைகள் , அடிமைகள் என்றால் அடித்து உதைப்பதில் துவங்கி சொல்ல முடியாத
கொடுமைகள்
வணிகர் என்றால் அவர்கள் வணிகம் நசிக்கச் செய்வது
வசதி படைத்தவர் என்றால் அவரை பல விதமாக கேலி,கிண்டல் செய்வது என்று
பலமுனைத் தாக்குதல்
இதனால் அச்சம் கொண்ட பலர், இறை நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்தத்
தயங்கினர்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லி மன உறுதியை வலுப்படுத்தி
தீயவர்களை எச்சரிக்கும் விதத்தில் இந்த வசனமும் தொடர்ந்து வசனம் 3 , 4 கும்
வருகின்றன
“------அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதனைக்கு உட்படுத்தினோம் -------“ 29:3
“தீங்கு செய்வோர் நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா
?—“ 29:4
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
06 ஜமாத்துல் ஆஹிர் (6) 1444
30122022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment