தமிழ் (மொழி) அறிவோம்
பவள(ழ)ப்பாறைகள்
07 122022புதன்
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெரும்பங்கு வ்கிப்பவவை
பெண்களுக்குப் பிடித்தவை
விடை
பவள(ழ)ப்பாறைகள்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
அஷ்ரப் ஹமீதா – முதல் சரியான விடை
பங்காரு , குமாரசாமி கணேச சுப்ரமணியம்
ராஜாத்தி ,செல்வகுமார் ,ஹிதயத்
சிராஜுதீன் , ஹசன் அலி பாடி பீர்
முயற்சித்த சகோ ஆ ரா விஸ்வநாதனுக்கு நன்றி
பவளம் , பவழம் இரண்டும் வேறுவேறா , என்ன பொருள் என்று பார்க்த்தான் கூகுளுக்குள் நுழைந்தேன்
அங்கே
இலக்கிய, இலக்கணச் சான்றுகள்
வரலாற்று , புவிஇயல் குறிப்புகள் ,பயன்பாடு
என இன்னும் பலவற்றைக் கண்டு வியந்து
அது பற்றியே ஒரு வினா விடை பதிவு செய்தேன்
நான் படித்து தெளிந்ததை சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்
பவளம் பவழம் இரண்டுமே சரிதான்
நவரத்தினங்களில் ஓன்று பவளம்
75ஆண்டு நிறைவை பவள விழா என்று குறிப்பிடலாம்
இது ஒரு வகை கடல் வாழ் பூச்சி இனம் .
கடலில் உள்ள பல சத்துக்களை உறிஞ்சி ஒரு பாறை போல் படிந்து கொடி போல் தோன்றுகிறது
இராமேசுவரம் ஆழிப் பேரலையின் தாக்கத்தில்
பெரும் அழிவில் இருந்து தப்பித்தற்கு இந்தப் பாறைகள் பெரிதும் உதவியதாம்
பவளக் கற்கள் அழகிய சிவப்பு நிறத்தில் இருக்கும் .மோதிரம் , மாலையில் அழகுக்கா சேர்க்கப்பட்கிறது
சூடான பாலில் அசல் பவளத்தை சிறிது நேரம் போட்டு வைத்தால் பால் இளம் சிவப்பு நிறமாக மாறுமாம்
அப்படி மாறாவிட்டால் அது அசல் இல்லை
பவளப் பற்பம் மருத்துவ குணம் கொண்டது
சிலப்பதிகாரம் , சங்க இலக்கியங்கள் என பலவற்றிலும் பவளம் பற்றிய குறிப்பு வருகிறது
எடுதுக்காட்டாக ஒன்றே ஓன்று
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
முத்து. பவளம் ,முக்கனி சர்க்கரை என்ற திரைப்ப்டலும் நினைவில் வருகிறது
பைபிள் , குரானிலும் பவளம் பற்றி வருகிறது
கடலில் முத்து , பவளம் கிடைப்பது பற்றி குர்ஆனில் வருகிறது
குரான் 55:22. --------- முத்தும் பவளமும் வெளியாகின்றன.
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
௦௭ ௧௨ ௨௦௨௨
07 122022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment