தமிழ் (மொழி) அறிவோம்
மடல்
14122022புதன்
தாவரங்களின் சில பகுதிகளைக் குறிக்கிறது
ஒரு விதமான குதிரையையும் குறிக்கிறது
அந்த மூன்றெழுத்துச் சொல் எது ?
விடை
மடல்
•
• பொருள்
1. வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி, 2. பனங்கருக்கு, 3. சோளக்கதிர், வாழைப்பூ முதலியவற்றின் மேலுறை,
• 2.செவி மடல்
3.தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட துணியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர்.
தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான்.
பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் 'மடல்' ஆகும்.
மடலேறுதல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று.
சரியான விடை எழுதிய
ஒரே சகோ
கனகராசுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
பங்கேற்ற சகோ
அஷ்ரப் ஹமீதா, சோமசேகர் , மீ மு இஸ்மாயில்
சிராஜுதீன் சுராஜ் ,, ஷர்மதா ,ஹசன் அலி
குமாரசாமி
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
Sorry
ஒரு பிழை – ஒருவிதமான குதிரை
ஒரு விதமன குதிரையாக பதிந்து விட்டது
சற்று முன்புதான் சகோ சிராஜுதீன் இதைச் சுட்டிக்காண்பித்தார்
அவருக்கு நன்றி
மனம் மானமாகி இருந்தால் இன்னும் பல சரியான விடைகள் வந்திருக்கலாம்
Really sorry
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
௧௪௧௨௨௦௨௨
14 12 2022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment