திருமறை குரான்
2:44
02122022 வெள்ளி
நீங்கள் சிந்திக்க வேண்டாமா ?”
இது குரானின் எந்தப்பகுதியில் வருகிறது ?
விடை
சூராஹ் 2 அல் பகரா வசனம் 44
“வேதம் படித்துக்கொண்டே உங்களை மறந்து விட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா ?
நீங்கள் சிந்திக்க வேண்டாமா ?” (2:44)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
பீர் ராஜா
விளக்கம்
சுருக்கமாக
“ஊருருக்குத்தான் உபதேசமா ? “ என்பதுதான் பொருள்
“இஸ்ரவேல் “( பொருள் இறைவனின் அடிமை ) குர்ஆனில் பல இடங்களில் வரும் இந்த சொல்
நபி இப்ராகிம் அவர்களின் பேரனும்
, நபி இஸ்ஹாக்கு மகனுமாகிய
நபி யகூபுகுக்கு இறைவனே சூட்டிய பெயராகும்
இப்படி நபி பரம்பரையில் வந்த யாகூப் நபியின்வழிதோன்றல்கள் “இஸ்ராயீலின் மக்களே “ என்று அழைக்கப்படுகிரார்கள்
வேதம் அருளப்பெற்ற இவர்கள் நாளடைவில் வேதத்தை பின்பற்ற மறட்ந்து தங்கள் சொந்த நலன்களுக்கு அவற்றைப் பயன்படுத்தத் துவங்கினார்கள்
இது பற்றி இறைவன் பல இடங்களில் கடுமையாகப் பல வசனங்கள் வழியே எச்சரிக்கிறான்
அப்படிப்பட்ட வசனத் தொகுப்புஒன்றில் வரும் வசனம்தான்
:2:44
இஸ்ரவேலர்களுக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைகள மனித குலம் அனைத்துக்கும் பொருந்தும்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
07 ஜமாதுல் அவ்வல்(5) 1444
02122022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment