திருமறை குரான்
8:22
09122022 வெள்ளி
என பொருள் படும் குரான் வசனம் எது ?
விடை
சுராஹ் அன்பால் வசனம் 22 (8:22)
. நிச்சயமாக இறைவனிடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம் (8:22)
சரியானவிடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
மீ மூ இஸ்மாயில் – முதல் சரியான விடை
ஷர்மதா, சிராஜுதீன் , ஷிரீன் பாருக்
,ஹசன் அலி தல்லத்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
விளக்கம்
மனிதனுக்கு இறைவன் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறான்
இருந்தும் சொல்லப்படும் உண்மையை, நன்மையை காதில் பட்டாலும் கருத்தில் உணர மறுத்து , பொய்மையை நம்பி தீமை வழியில் செல்வோரை இறைவன் கடுமையாகச் சாடி எச்சரிக்கை செய்கிறான் சுராஹ் அன்பால் வசனம் 20 முதல் 28 வரை
உண்மையை செவி ஏற்கவும் பேசவும் மறுப்பவர்கள் செவிடர்கள் ஊமைகள் என்கிறான் இறைவன்
ஏக இறைவன், இறைதூதர் மறுமை நாள் இவற்றில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் தீய வழியில் செல்லமாட்டார்கள் என்கிறான்( வசனம் 24 )
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
(Interruption in network connection .Hence delayed posting)
14 ஜமாதுல் அவ்வல் 1444
09122022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment