Wednesday, 21 December 2022

தமிழ் (மொழி) அறிவோம்- குப்பல்

 தமிழ் ( மொழி)அறிவோம்


குப்பல்


21122022 புதன்



 மேடு

கூட்டம்

குழந்தைகள் விளையாட்டு


என பல பொருட்கள்

"குவிந்திருக்கும்"

ஒரு நான்கெழுத்துச் சொல்


முதல் எழுத்து க வரிசையில் குறில்


என்ன அந்தச் சொல்?


இதுவரை சரியான விடை எதுவும் வரவில்லை


புகழ்பெற்ற ஒரு புதினத்தில் கண்ட சொல்


மிகப் பரவலாக பயன்படும் எளிய சொல் சிறு மாற்றத்துடன்


வினாவிலேயே 

"குறிப்பு"

இருக்கிறது


நேர நீட்சி இல்லை


விடை


குப்பல்


விளக்கம் 


பொன்னியின் செல்வன்

இரண்டாம் அத்தியாயத்தில்

ஆடிப்பெருக்கு விழாவை வருணிக்கும்போது


"அவல் பொரி முதலியவற்றை

சிலர்

குப்பல் குப்பலாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள்"

என்று வருகிறது 


University of Madras Lexicon

குப்பல்


s. [vul. from குப்பம்.] A heap or collection--as of manure, &c., குவியல். 2. A multitude, a company, கூட்டம்.

குப்பல்குப்பலாய், adv. In crowds; in torrents.

குப்பல்குப்பலாய்க்கூட்ட--குப்பல்குப் பலாய்க்குவிக்க, inf. To heap up, to lay on heaps.

குப்பல்விளையாட்டு, s. A play of chil dren in sand.


குப்பல்

kuppal n. cf. id. [T. kuppa,K. kuppe.] 1. Heap, as of manure; குவியல் 2. High ground, mound; மேடு (திவா.) 3.Multitude, company; கூட்டம் (W.)  


ஆர்வத்துடன் பங்கெடுத்த

சகோ

அ ரா விஸ்வநாதன்

 கணேச சுப்பிரமணியம்

கனகராஜ் ஷர்மதா

சிராஜுதீன். ஷிரீன் பாருக்

பாடி பீர்

அனைவருக்கும்

நன்றி 


இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்


21122022 புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment