Thursday, 15 December 2022

திருமறை குரான் 15:51

 திருமறை குரான்

15:51
16122022 வெள்ளி
குரான் வசனம்
---, இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
இடம், பொருள் விளக்கவும்
விடை
சுராஹ் அல் ஹிஜ்ர 15:51
“இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக”!(15:51)
இந்த சிறிய வசனத்துக்குள் பொதிந்திருக்கும் செய்திகள் ஏராளம்
விளக்கத்துக்கு முன்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
தல்லத் பீர் ராஜா சிராஜுதீன்
அஷரப் ஹமீதா ஹசன் அலி
விடையோடு விளக்கமும் அனுப்பிய
சகோ தல்லத் , சிராஜுதீன் ஹசன் அலிக்கு நன்றி
விடை காண முயற்சித்த
சகோ ஷர்மதாவுக்கு நன்றி
விளக்கம்
விருந்தினர்கள் என்று வானவரைக் குறிப்பிடுகிறான் இறைவன்
நபி இப்ராஹீமின் இருப்பிடத்திற்கு இரண்டு வானவர்கள் மனித உருவில் வருகிறார்கள்
பொதுவாக மனித உருவில வானவர்கள் பூமிக்கு வருவது ஒரு இயல்பான நிகழ்வு இல்லை
பெரிதாக எதோ ஓன்று – நல்லதோ அல்லதோ நடக்கவிருப்பதன் அறிகுறி இது
இதனால் அச்சம் கொண்ட நபி இப்ராஹீமிடம் அந்த முதுமையில் இறைவன் அருளால் அவருக்கு ஒரு ஞானம் மிக்க ஆண் குழந்தை (நபி இஷ்ஹாக் ) பிறக்கவிருக்கும் நம்ப முடியாத நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
அதோடு பல எச்சரிக்கைகளுக்குப் பின்னும் திருந்தாமல் தீய வழியில் செல்லும் லூத் நபியின் கூட்டத்தினரை இறைவன் ஆணைப்படி லூத் நபியின் குடும்பம் தவிர அழிக்கப்போவதாகவும் சொல்கிறார்கள்
இந்த நிகழ்வு நம்பிக்கை கொள்ள மறுக்கும் மக்கா வாசிகளுக்கு ஒரு எச்கரிக்கையாக இங்கு சொல்லப்படுகிறது
“ நபி என்று உங்களைநீங்களே சொல்லிக்கொள்ளும் உங்களுக்குத் துணையாக ஏன் இறைவன் வானவர்களை அனுப்பவில்லை” ?
என கிண்டல் செய்யும் நம்பிக்கை மறுப்போருக்கு மறுமொழியாக
“வேடிக்கை =விளையாட்டாக அவர்களை அனுப்புவதில்லை “(15:8)
என்று சொல்லும் இறைவன்
சத்தியம், உண்மையுடன் அவர்கள் இறங்கி தீமையை , அழிக்கத் துவங்கினால் தீயோருக்குத் திருந்த நேரமே இருக்காது என எச்சரிக்கிறான்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
21 ஜமாதுல் அவ்வல் 1444
16122022 வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment