Friday, 9 December 2022

கண் படுமே

 கண் படுமே

10122022


வாரா வாரம் வியாழன் மாலை (வெள்ளிக்கிழமை ரவ்வு என்று சொல்வார்கள் ) சுற்றிப்போடும் பழக்கம் எங்கள் குடும்பத்தில் இருந்தது
பிள்ளைகள் எல்லொரையும் ஒன்றாக உட்கார வைத்து எங்கள் அம்மா சுற்றிப்போடுவார்கள்
இதில் பல வகைகள் உண்டு
காய்ந்த (சிவப்பு வர) மிளகாயைக் கையில் வைத்துக்கொண்டு சுற்றி மிளகாயை அடுப்பில் ( அப்போதெல்லாம் விறகடுப்பு தானே ) போடுவார்கள்
சில நேரங்களில் மிளகாய் காரம் .நெடி எதுவும் வராது ,
நிறை ய கண்ணேறு இருப்பதன் அறிகுறி இது என்று சொல்வார்கள்
வெள்ளைத்துணியில் செய்த மூன்று திரிகளை எண்ணெயில் நனைத்து தீப்பற்ற வைத்து சுற்றி ஒரு குவளை நீரில் போட்டு அதை வாசலில் ஊற்றுவது ஒரு முறை
பெருநாள் தொழுகை முடிந்து வீடு திரும்பும்போது வாசலில் நிற்க வைத்து ஆரத்திஎடுப்பார்கள்
காலப்போக்கில் இந்தப் பழக்கங்கள் குறைந்தாலும் மறைந்து விட்டது என்று சொல்ல முடியாது
இன்றும் இந்த ஆரத்திப் பழக்கம் எங்கள் குடும்பத்தில் தொடர்கிரது
அது போல சுற்றிப்போடுவது வார வாரம் இல்லாவிட்டலு அவ்வப்போது நடக்கிறது
இதெல்லாம் சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நான் நுழையவில்லை
மூட நம்பிக்கை என மிகத் தீவிரமாக எதிர்த்த சிலர் ஒரு கட்டத்தில் சரிதான் என்று ஏற்றுக்கொண்டதை நான் அறிவேன்
கண்ணேறு , கண்ணுறு கண் திருஷ்டி என பல பெயர்கள் (ஆங்கிலத்தில் evil eye)
பொதுவாக பொறாமைக்கண் கொண்டு ஒரு சிலர் பார்க்கும் பார்வை சில தீய விளைவுகளை உண்டாகுக்கும் என நம்பபப்டுகிறது
சிலர் கண்களுக்கு இந்த சக்தி அதிகமாக இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை
நாம்மூரில் மட்டுமா உலகளவில் இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது
ஈவில் ஐ என்ற சொல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்ததாம்
Touch wood என்று சொன்னால் தீய பார்வையின் விளைவு மட்டுப்படும் என்பது ஒரு நம்பிக்கை
யாரவது ஒருவரைப்பார்த்து உங்களுக்கு எவ்வளவு அடர்த்தியான முடி என்று வியந்தால அருகில் உள்ள பெரியவர்கள் அப்படிச் சொன்னவரிடம்
உன் காலில் எதோ அழுக்கு ஒட்டியிருக்கிறது என்று சொல்வார்கள்
இதன் மூலம் சொன்னவர் கவனம் திரும்பி கண்ணேறு மாறி விடுமாம்
சிறு குழந்தைகளைப் பிறர் பார்க்க வரும்போது குழந்தையின் கன்னத்தில் மையினால் பெரிய திருட்டிப் பொட்டு வைப்பது வழக்கம்
வீடு கட்டுமானம் நடக்கும்போது மனித உருவம் போல ஒரு பொம்மை செய்து கட்டுவது,
கட்டி முடித்தும் எல்லோர் கண்ணில் படும் ஒரு சிறு பகுதியை வண்ணம் பூசாமல் விடுவது
புதுமனை புகு விழா போன்ற நிகழ்வுகளில் பூசனிக்காயைத் தொங்க விடுவது,
வாசலில் மிளகாய், எலுமிச்சை கட்டுவது போன்றவை பரவலாகக் காணப்படும் திருட்டிப் பரிகாரங்கள்
கண்ணேறு பில்லி சூனியம் போன்றவற்றை நம்புவது ஏக இறை நம்பிக்கைக்கு எதிரான கொடிய பாவங்கள் என்றொரு கருத்து முன் வைக்கப்படுகிறது
ஆனால் கண்ணேறுக்குப் பரிகாரமாக ஒதிப்பார்க்கும்படி நபி பெருமான் சொன்னதாக பல கூற்றுக்கள் இருக்கின்றன
மேலும் திரு மறையின் நிறைவு சூராக்கள் இரண்டும் “பாதுகாப்புத் தேடும் சூராக்கள் “ என்று அழைக் காப்படுகின்றன
அவற்றில் உள்ள வசனங்கள் பில்லி சூனியம் செய்வோரிடமிருந்தும் பொறாமை கொண்டோரிடமிருந்தும் இறைவனின் பாதுகாப்பைத் தேடும் விதமாக அமைந்துள்ளன
நிறைவாக ஒரு சில படித்த , காதில் விழுந்த உண்மை,நிகழ்வுகளும் கதைகளும்
எட்டு என்பது ஒரு ராசி இல்லாத எண். என்று ஒரு நம்பிக்கை சில விடுஜ்திகளில் எட்டாம் எண் அறை, தளம் இருக்காதாம்
அதேபோல் செவ்வாயோ வெறுவாயோ என அந்த நாளில் நல்ல நிகழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன ஆனால் வட மாநிலங்களில் மங்கல் வார் என பெயர்கொண்ட அந்த நாள் சுப தினமாகக் கருதப்படுகிறது
வெள்ளிக்கிழமை , எண் 13 இவை இரண்டும் மிகவும் ராசி இல்லாத நாட்கள் என்பது மேநாட்டு நம்பிக்கை
குறிப்பாக ஆங்கிலேய மாலுமிகள் வெள்ளிக்கிழமை என்பதை மிகவும் அஞ்சித் த்தவிர்ப்பார்கள்
இதை மாற்றும் ஒரு முயற்சியைக Friday என்ற ஒரு கப்பல் கட்டத் தீர்மானித்த அரசு கப்பல் கட்டும் பபணியின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் வெள்ளிக்கிழமை வருமாறு திட்டமிட்டு வெள்ளிக்கிழமை அன்று வெள்ளோட்டம் விடப்பட்ட அந்தக்கப்பல் எந்தக் கிழமையிலும் திரும்பி வரவேஇல்லையாம்
அப்போலோ 13 என்ற அமெரிக்க விண்கலப் பயணம் தோல்வி அடைந்ததற்கு 13 என்ற எண்தான் காரணம் என்று சொல்வதுண்டு
நமக்கு முடிந்த அளவு, தெரிந்த அளவு இறைவணக்கம் , மறை நூலை பொருளுணர்ந்து ஓதுதல் நோன்பு நோற்றல், தான தருமங்கள் புனிதப்பயணம் இவற்றில் முழுமனதோடு ஈடு பட்டால் நம்முடைய பிழைகளை அளவற்ற அருளும் நிகற்ற அன்பும் உடைய இறைவன் மன்னித்து விடுவான் , அவன்தான் திரும்பத் திரும்ப மன்னிப்பவனாயிற்றே
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
10122022 சனிகிழமை
சர்புதீன் பீ
May be an image of 1 person
4 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment