மும்முனைப் போராட்டம்
241220220, சனிக்கிழமை
நக்கல்
ஆதங்கம்
பெருமை
கலந்த குரலில்
"அதிகாலை முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரை தொழுகை ,குரான் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது
தொலைக்காட்சி , திரைப்படம் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது
வேலையில் இருந்ததை விட இப்போது அதிகமாக உழைக்கிறீர்கள்"
துணைவி அடிக்கடி சொல்லுவது
உண்மைதான்
பணி நிறைவு என்பதை ஒரு புதிய வாழ்க்கையின் துவக்கமாக எடுத்துக்கொண்டேன்
பல படிப்புகள் ,மனப்பயிற்சிகள் மறை ஓதுதல் என திட்டமிட்டு இறை அருளால் நிறைவேற்றி வருகிறேன்
எழுத்துப்பணியும் சேர்ந்து
இன்று வரை
பொழுது போகவில்லை
என்ற சலிப்பு இல்லாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன
ஹிண்டுவிலிருந்து தந்திக்கு மாறி விட்டேன்
பிறகு எங்கு திரைப்படம் தொலைக்காட்சிக்கு நேரம்
பணி நிறைவுக்குப்பின் வாழ்க்கை பற்றி விரிவாக பல பதிவுகள் எழுதி விட்டேன்
இப்போது சொல்ல வருவது ஒரு மனப்போராட்டத்தின் உரத்த சிந்தனை
"இந்த வயதில் இவ்வளவு உழைப்பு தேவையா ?
எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வாக இருக்கலாம்"
என்ற எண்ணம் ஒரு பக்கம்
"அதெல்லாம் விடக்கூடாது
விட முடியாது " என்று மறுபுறம்
"என்ன பெரிதாக வெட்டி முறிக்கிறோம்
இறைவன் அள்ளிக் கொடுத்திருக்கும் நலன்களுக்கு இன்னும் பலமடங்கு கூடுதலாக உழைக்க வேண்டும் "
என மூன்றாவது குரல்
இந்த மனப்போராட்டம் கொஞ்ச நாளாக அடிக்கடி வருவது போல் இருக்கிறது
எந்தப் பணியையும் விட்டு விலக முடியாது என்பதும் தெரிகிறது
குறிப்பாக எழுத்துப்பணிதான் இந்த உலகுக்கு என்னை அறிமுகம் செய்து வெளிச்சம் போட்டுக் காட்டியது
பெரும்பாலும் வெளியூர் பணி காரணமாக தொடர்பில்லாமல் இருந்த பல உறவுகளும் நெருக்கமானது எழுத்தால் தான்
இழப்பில் உடைந்து போன என்னை மூழ்கி விடாமல் மீட்டதும் எழுத்துத்தான்
வாழ்க்கை,வங்கி அனுபவங்களோடு இணைந்து
எழுத்துக்கு உறுதுணையாக இருப்பது படிப்பு, பயிற்சி திருமறை
இறைவன் நாடினால் புத்தாண்டில் ஏழுத்தில் சில மாற்றங்கள் செய்ய எண்ணம்
பழைய பதிவுகளை திரும்ப வெளியிடுதல்
புகைப்படங்கள் போடுதல்
இதற்கெல்லாம் மேல் குழுவில் உள்ள சகோக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் எழுத்துக்களை வெளியிடவும் எண்ணம்
இது தொடர்பாக சில மாதங்கள் முன்பு பொதுவாக ஒரு அழைப்புக் கொடுத்தேன் யாரும் முன்வரவில்லை
அடுத்து சிலரை தொலைபேசி
கட்செவி வழியே தனித்தனியாக தொடர்பு கொண்டு கேட்டேன்
பெரும்பாலும் எல்லோரும் உடனே ஒத்துக் கொண்டனர்
அந்தப் பத்துக்கு மேற்பட்டவர்களில் ஒரே ஒருவர்தான்
சகோ இதயத்
மட்டும்தான் உடனடியாக ஒரு பதிவும் பிறகு ஒன்றும் அனுப்பி வைத்தார்
சிறிது நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும்
இன்னும் புத்தாண்டுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில்
சகோ அனைவரும் விரைந்து ஒருசில பதிவுகள் அனுப்பினால்தான் புதிய திட்டத்தை துவங்க முடியும்
நம்மையெல்லாம் கேட்கவில்லையே என்று யாரும் தயங்க வேண்டாம்
என்ன எழுதுவது என்றும் குழம்ப வேண்டாம்
வாழ்க்கை,பணி,பயணம் , வெளிநாட்டு வாழ்க்கை , இலக்கணம் இலக்கியம் தமிழ் ஆங்கிலம் என எது பற்றியும் எழுதலாம்
Short sweet interesting and informative ஆக இருக்க வேண்டும்
வினா விடையாக எழுதினால்
எளிதாக பலரையும் சென்றடையும்
அரசியல் ,திரைப்படம் வேண்டாம்
தமிழ் சரியாக எழுத வராது
என்றால் ஆங்கிலத்தில் எழுதலாம்
அதுவும் சிரமம் என்றால் குரல் செய்தி voice message அனுப்பவும்
Content is important than language
மருத்துவம் மருந்துகள் பற்றி
விரிவாக எழுத வேண்டாம் வேண்டாம்
இதற்கு மேல் பெரிதாக guidelines தேவையில்லை என நினைக்கிறேன்
முன்பு தனியாக சொன்னவர்கள் அதற்கு பொதுவாக சொல்லப்பட்டவர்கள் அனைவரும் உடன் செயல்படும் படி கேட்டுக்கொள்கிறேன்
நான் நினைத்ததை விட இந்த புதிய பணி சிரமமாகவும் time consuming ஆகவும் இருக்கும் போலும்
அதற்காக முயற்சியை விடமுடியாது
தான் கற்று கற்றதை பிறருக்கு எடுத்துரைப்பவர் மிகவும் நல்லவர் என்பது திரு மறைக்கு மட்டும் அல்ல
எல்லாவற்றிற்கும் பொருந்தும்
Sharing is caring
Let us share our knowledge and join the group of good people
இறைவன் நாடினால் புதிய பரிமாணத்தில் புத்தாண்டில்
சிந்திப்போம்
அதே இறைவன் நாட்டத்தில் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
,24122022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment