திருமறை குர்ஆன்
22:47
23122022: வெள்ளி
"---இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும் "
குரான் .இடம் பொருள் விளக்குக
விடை
22:47
சூரா ஹஜ்
. ( 47)நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; இறைவன் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை;
மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.(22:47)
சரியான விடை எழுதி
வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
ஷிரீன் பாருக்
மீ மு இஸ்மாயில்
விளக்கம்
இறை நம்பிக்கை இல்லாதோர்
நபி பெருமானை
அவர் உண்மையில் இறைதூதர் என்றால் அவர் அச்சுறுத்தும் இறைதண்டனை எங்கள் மேல் ஏன் இன்னும் இறங்கவில்லை கதை
என்று கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்
அதற்கு மறுமொழியாக
இறைவன் தன் காலக்கணக்கு
மனிதனின் கணக்கோடு ஒப்பிட முடியாதது என்று தெளிவாக்குகிறான்
ஆயிரம் மாதம்
ஆயிரம் ஆண்டு
என்பதெல்லாம் மிகுதியைக் குறிக்கும் சொற்கள்தான்
1000 மாதம் என்றால்
83 +ஆண்டு என்று பொருள் இல்லை
குரானில்
அந்த நாள் 50000 ஆண்டுகளுக்கு சமம் என்றும் வருகிறது (70:4)
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
23122022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment