முத்திரை பதிப்போம் 4
முதுகு முத்திரை
செய்முறை
கழுத்து, முதுகு நேராக இருக்கும்டி சம்மணம் கூட்டி உட்கார்ந்து , கைகளை தொடைகள் மேல் வைத்துக்கொள்ள வேண்டும்
வலது கை ::
பெரு விரல் , நடு விரல், சுண்டு விரல் மூன்றும் ஒன்றை ஓன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆட்காட்டி விரலும் மோதிர விரலும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
இடது கை
பெருவிரல் ஆட்காட்டி விரலின் நகதத்தைத் தொட்டபடி இருக்கவேண்டும்
கண்களை மூடிக்கொண்டு மெதுவாக, ஆழமாக மூச்சு விட வேண்டும்
நான்கு நான்கு நிமிடமாக ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம் . தேவைப்பட்டால் அதிகமாகவும் செய்யலாம்
பலன்கள்
முத்திரையின் பெயரே தெளிவாக்குகிறது இது முதுகு பற்றிய பிரச்சினைகளுக்கான தீர்வு என்று
முதுகு பலம் இல்லாமல் இருப்பவர்கள், தோட்ட வேலை ,வீடு துடைத்தல் போன்ற வேலைகள் செய்யும்போது ஏற்படும் முதுகு வலியை குணப்படுத்தும்
தவறான நிலையில் (wrong posture) நீண்ட நேரம் உட்காருதல் சரியான தூக்கம் இல்லாதது , உடற்பயிற்சி இல்லாதது, மிக பலத்த உணவு, (Heavy diet) , மன அழுத்தம், அச்சம் இவற்றால் ஏற்படும் முதுகு வலியை சரி செய்யும்
முத்திரைகள் மிகவும் எளிதானவை . உடலை வருத்தும் பயிற்சி, கருவிகள் , மருந்துகள் , பக்க விளைவுகள் ,என எதுவும் இல்லாதவை .
உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதால் உங்கள் தேவைக்கு ஏற்ப கால அளவைக் கூட்டியோ குறைத்தோ செய்யலாம்
செலவு ஒன்றும் கிடையாது
ஆனால் உங்கள் மருந்துகளுக்கோ மருத்துவத்துக்கோ முத்திரைகள் மாற்று இல்லை
அவைகளோடு சேர்த்து முத்திரைகளும் செய்யலாம்
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
21082021sat
Sherfuddin P
No comments:
Post a Comment