Friday, 27 August 2021

மூலிகை அறிமுகம் கீழா நெல்லி

 மூலிகை அறிமுகம்

கீழா நெல்லி
இது ஒரு சிறிய செடி . வயல் வரப்பு ,வாய்க்கால் கரை என எல்லா இடங்களிலும் தானாக வளரும்
சிறிய இலைகள் , புளிய இலை போல் இரண்டு வரிசையாக . இலைகளுக்குக் கீழே சிறிய பூக்களும் சின்னஞ்சிறு உருண்டையாக காய்களும் பார்க்க அழகாக இருக்கும்
மிகக் கசப்பான சுவை கொண்டது
பயன்கள்
மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்கள் இவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக அறியப்படுகிறது
கண் நோய்கள், தலைவலி, உடல் சூடு, தோல் நோய்கள் , தலை முடி பராமரிப்பு இவற்றிற்கும் பயன்படும்
சிருநீரைப்பெருக்கி சிறுநீரகம் தொடர்பான நோய்களை சரி செய்யும்
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
மலட்டுத் தன்மையைப் போக்கும்
இந்தப்பதிவு ஒரு மருத்துவக் குறிப்பு அல்ல.
அங்கிங்கு கண்ணில் படும் செடி கொடிகளை மூளிகைகளாக அறியர்ச் செய்யவே இந்தப்பதிவு
தகுதிவாய்ந்த, அனுபவம் மிக்க மருத்துவர்களைக் கலந்தாலோசித்து அவர்கள் அறிவுரைப்படி மருத்துவம் செய்து கொண்டு நலமுடன் வளமுடன் வாழுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28082021sat
Sherfuddin P
.
Like
Comment
Share

No comments:

Post a Comment