பூனைகள்
இலக்கியம் என்றால் சிலருக்குப் புரியவில்லை
இலக்கணம் என்றால் எனக்கே ஒரு தயக்கம்
எனவே கதை எழுதிகிறேன் மிகச்சிறிய கதை
எல்லோருக்கும் தெரிந்த கதை
எதற்கு இந்தப் பழங்கதை என்று கேட்கிறீர்களா ?
கல்லூரியில் படித்த இலக்கியம் இப்போதுதான் சுவையாகத் தெரிகிறது
பள்ளியில் படித்த இலக்கணம் இந்த வயதில்தான் கொஞ்சம் புரிகிறது
அதே போல் எப்போதோ படித்த கேட்ட எளிய சிறு கதைகளுக்கு இப்போது புதுப் புது அர்த்தங்கள் புலப்படுகின்றன
துலாபாரம் – பழைய திரைப்படம் – இரட்டை ஊர்வசி சாரதாவின் நடிப்பில் மிக ஆழமான கருத்து , இனிமையான பாடல்கள் கொண்டது . அதில் ஒரு காட்சி . சொத்துப்பங்கீடு பிரசினைக்காக இருவர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க ,வழக்கு பல ஆண்டுகள் நீளும் .
வழக்கின் ஆரம்பத்தில் கட்சிக்காரர்கள் இருவரும் நீதி மன்றத்துக்கு மகிழுந்தில் வருவார்கள் . அவர்கள் வழக்க்கறிஞர்கள் ரிக்சாவில் வருவார்கள் . காலம் செல்லச செல்ல நிலைமை தலைகீழாய் மாறி வழக்க்கறிஞர்கள் மகிழுந்திலும் கட்சிக்காரர்கள் ரிக்சாவிலும் வருவார்கள்
இந்த உண்மையை எளிதாக விளக்கும் ஒரு சிறிய கதைதான் இப்போது சொல்லப்போகிறேன் .
இரண்டு பூனைகள - மிகவும் நட்பாகவும் ஒற்றுமையாகவும்தான் இருந்தன – ஒரு சுவயான அப்பம் கிடைக்கும் வரை . இருப்பது ஒரு அப்பம். ஆனால் இரண்டுமே தனக்கு பெரிய பங்கு வேண்டும் என்று எண்ணின
கொஞ்ச நேரம் பேசிப்பார்த்தும் சண்டை போட்டும் தீர்வு கிடைக்கவில்லை . எனவே பெரியவர்கள் யாரையாவது அணுகி சம பங்காகப் பிரித்து வாங்கலாம் என்று முடிவு செய்து ஒரு பெரிய பூனையை –கடுவன் பூனையை அணுகின .
கடுவன் பூனை மிகவும் சலித்துக்கொண்டது . எனக்கு ஆயிரத்தெட்டு வேலை . இருந்தாலும் வந்து விட்டீர்கள் , நான் பங்கு பிரித்துத் தருகிறேன் ஈன்று ஒத்துக்கொண்டு ஒரு தராசை எடுத்து வந்தது
அப்பத்தை இரண்டாகாப் பிரித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் வைத்தது . ஒரு தட்டு கீழே போனது .அந்த்த்தட்டில் இருந்த அப்பத்திலிருந்து ஒரு பகுதியைப் பிட்டு தன வாயில் வைத்துக்கொண்டது .
அப்பம் கொண்டு வந்த பூனைகளுக்கு சற்று அதிர்ச்சிப. பிய்த்த அப்பத்தை அடுத்த தட்டில் வைக்காமல் வாயில் போட்டுக்கொண்டதே கடுவன் என்று
பார்த்து கொண்டிருக்கும்போதே கடுவன் பல முறை இது போல் பிட்டுப்பிட்டு வாயில் போட்டுக்கொண்டது
நமக்கு எதுவும் மிஞ்சுமா என்ற அச்சத்தில் பூனைகள் மிஞ்சி இருக்கும் சிறிய
துண்டையாவது எங்களுக்குக் கொடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்தன
கடுவனோ அதெப்படி , நான் செய்த வேலைக்கு , உழைப்புக்கு ஊதியம் வேண்டாமா என்று அந்த மிஞ்சிய அப்பத்தையும் வாயில் போட்டுக்கொண்டது
பூனைகள் ஏமாற்றத்துடன் ஓடி விடுகின்றன
இந்தத் துவக்கப்பள்ளிக் கதை இப்போது எதற்கு -? நல்ல கேள்வி
துவக்கப்பள்ளியில் படித்த அறம் செய விரும்பு, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் எல்லாம் இன்றும் நம் வாழ்க்கைக்கு வழி காட்டுகின்றன
அதுபோல் சற்று சிந்தித்துப் பார்த்தால் இந்தக் கதை சொல்லும் பாடங்கள் நமக்குப் புலப்படும்
எத்தனை அரசியல் வாதிகள , அதிகாரிகள் ஊழல் செய்து பெரும்பணம் சொத்து சேர்த்து மாட்டிக்கொண்டால் பாதுகாப்புக்காக யாரிடமாவது தஞ்சம் அடைந்து சம்பாதித்ததில் பெரும் பகுதியை சில நேரம் முழுவதுமே இழப்பதோடு சுய மரியாதை இழந்து இழி நிலை அடைகிறார்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
14082021sat
Sherfuddin P
No comments:
Post a Comment