Tuesday, 17 August 2021

மூன்றா நாலா ?Perception

 மூன்றா நாலா ?





விடை , விளக்கம் நாளை ,இறைவன் நாடினால்







 

காட்சியும் கருத்துகளும்

ஒரு சிறிய படம். மூனா நாலாஎன ஒரு எளிய வினா.

மூன்று என்றும், நாலு

என்றும் , இரண்டுமே சரி என்றும் , இது ஒரு மாய பிம்பம் என்றும் பலவிதமான விடைகள்

எல்லாமே சரியான விடைதான் .

ஏனென்றல் இது ஒரு உளவியல் வினா. உளவியலில் சரி, தவறு என்பதே கிடையாது

Perception என்ற உளவியல் சார்ந்த சொல் –

அதை விளக்கப் பயன்படும் படங்களில் ஒன்றுதான் மூனா நாலா

கண்ணால் காண்பதை , காதால்கேட்பதை , உடலால் உணர்வதை ,நாவால் சுவைப்பதை முகரும் மணத்தை எல்லோரும் ஒரே மாதிரிஉணர்ந்து எதிர் வினை ஆற்றுவதில்லை . அவரவர் மனதில் உள்ள பதிவுகள், அறிந்தவை இவற்றைகொண்டு

உணர்ந்து அறியும் ஆற்றலே perception  

நான் என்ன உளவியல் படித்துதேர்வா எழுதப்போகிறேன் ,எனக்கு எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா ? உளவியல் என்பது உங்களுக்குள்ளேயும்

எனக்குள்ளேயும் கூடவே இருந்து நம்மை இயக்கும் மனம், உள்ளம் பற்றியது . நம்மைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லதுதானே

அதற்காக பெர்செப்ஷன் பற்றிப்பாடம் எடுக்க நான் வரவில்லை . எளிய எடுத்துக்காட்டுகள் , சிறிய கதைகள் மூலம் பெர்செப்ஷன்பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் முடிந்த வரை எளிதாக , சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்

பாதி அளவுக்குப் பால்இருக்கும் கோப்பை ஓன்று. ஒருவருக்கு அது பாதி காலியாகத் தெரிகிறது .இன்னொருவருக்கு அதில் பாதி அளவுக்கு பால் இருப்பதாய் தெரிகிறது . இருவர் கருத்தும்சரிதான் . இதில் ஒருவர் பார்வை எதிர்மறை என்றும் இன்னொருவர்பார்வை நேர்மறை என்றும்சொல்வார்கள் . அதெல்லாம் இப்போது வேண்டாம்

எல்லோருக்கும் தெரிந்த கதை –யானையைப்பார்த்த கண் பார்வை குறை உள்ளவர்கள் கதை . முறமாகவும் , உரலாகவும் ,சுவராகவும் , தூணாகவும் துடைப்பமாகவும்  தெரிவது ஒரே யானைதான் . இது பெர்செப்ஷன் பற்றி மிகத்தெளிவாக்கும் எளிய சிறுகதை

 பன்னாட்டுக் காலணிகள் நிறுவனம் ஓன்று  வளர்ச்சியின் துவக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டில் காலணிகளை சந்தைப்படுத்துவது, விற்பது பற்றி ஆய்வு நடத்த இருவரைஅனுப்பி வைக்கிறது . ஒருவர் போன வேகத்தில் திரும்பி வந்து விடுகிறார் . – அந்தநாட்டில் யாரும் காலணிகள் பயன் படுத்துவதில்லை . எனவே விற்கும் வாய்ப்பு இல்லைஎன்கிறார்

மற்றவர் திரும்பி வரவில்லை

சில நாட்கள் சென்றபின் அவரிடமிருந்து வந்த செய்தி:

“இங்கு யாரும் காலணி விற்பனைசெய்வதில்லை . நமக்கு ஒரு மிகப் பெரிய சந்தை வாய்ப்பு இங்கே கொட்டிக்கிடக்கிறது .முதலில் மிக மலிவான விலை காலணிகள் ஆயிரம் சோடி அனுப்பி வையுங்கள் “

அண்மையில் முக நூலில் வந்தஒரு கருத்துப்படம் – சாலை விபத்து , ஒருவர் மரித்து விடுகிறார் . காவல் துறையினர்வந்து உடலை படம் பிடித்து விட்டு , உடல் இருந்த இடத்தை தரையில் வரைந்து விட்டுஉடலை எடுத்துச் செல்கிறார்கள் . அருகில் நான்கு பேர் நிற்கிறார்கள் . அவர்கள்யாரும் இதைஎல்லாம் பார்க்க வில்லை . காரணம் அவர்கள் கவனம் முழுதும் –கண் காது மனம்எல்லாம் செல்லிடப்பேசியில்  நிலைத்துநிற்கின்றன

அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டால் அவைஎல்லோருக்கும் பயனளிப்பதாக அமையும் .வேறு கருத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வேறுமாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்

உளவியல் வகுப்புகளில் பலமுறை கேட்ட கதை ஓன்று

 கணவன் , மனைவி , இரு குழந்தைகள்என ஒரு அழகான குடும்பம்

ஒருநாள் கணவன் ஓய்வாகஇருக்கும்போது மனைவி தயக்கத்துடன் பேசுகிறார்

“என்னங்க , பக்கத்துவீட்டில் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் குடி வந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா “

கணவன் “ இல்லையே நான் அடுத்த வீட்டை  எட்டிப்பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது “(பச்சைப்பொய்) “ சரி அதற்கென்ன இப்போது “

மனைவி “இல்லை அது வந்து அவர் தினமும் வேலைக்குப்போகுமுன் தன் துணைவியை கொஞ்சிக் குலாவிவிட்டுப் போகிறார் ---------------------------------அது போல ----------------------------நீங்களும் “

கணவன் “ அதெப்படி முடியும் !

அதற்கு அந்தப்பெண் சம்மதிக்க வேண்டும் . அவர் கணவன் சம்மதிக்க வேண்டுமே!”

சற்று A கதைதான் . இருந்தாலும்

தெளிவான விளக்கம்

வினாவுக்கு சரியான விடை

எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறுவோர்

சகோ செங்கை சண்முகம் ,பர்வேஸ் அயுப்நிலோ  (நான்கு)

சந்திர சேகரன் , கோடக் சேகர், டாடா பன்னீர், நஸ் ரீன், பாப்டி, மெஹராஜ் ராஜாத்தி , ஜோதி   ஹாருண்  நிலோபார் அலிமுதீன்   (மூன்று)

 கரம் (கேள்வியில் பதிலும் உள்ளது)


ரவிராஜ் (இது மாய பிம்பம்

 

ஆத்திக்கா (3, 4) - optical illusion ) கணேஷ் சுப்ரமணியன்(theory of relativity). DR Sundaram ஸ்ரீராம் குமார் (படம் தவறு

 உளவியல் புதிர்களில் எல்லாமே சரியான விடைதான் இந்த மாறுபட்ட விடைகளே perception  என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாக அமைகின்றன

இன்னும் நிறைய எழுதலாம் ,பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம் .ஒரு கோடி காட்டியிருக்கிறேன் . விருப்பம்உள்ளவர்கள் இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம்

நிறைவு செய்யு முன் மீண்டும்ஒரு வினா

படத்தில் உள்ள இரண்டு கருப்புக்கோடுகளில் எது நீளமானது ?

விடை நான் சொல்லவில்லை

நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்

 இறைவன் நாடினால் மீண்டும்சிந்திப்போம்

18082021wed

Sherfuddi P

 

 

 



No comments:

Post a Comment