Tuesday, 3 August 2021

தமிழ் - ஆழக்கடலும் சோலை ஆகும்

 ஆழக் கடலும் சோலையாகும்

எண்ணம்போல் வாழ்வு என்பதற்கு மேல் எண்ணமே வாழ்வு என்று
அருமையான
நூல் . ஆசிரியர் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதியது
எண்ணமே வாழ்வு என்பது ஒரு உளவியல் கோட்பாடு .
உளவியல் என்றாலே எதோ ஒரு புரியாத புதிர் ஒரு குறுந்தாடி வைத்த மனோதத்துவ மருத்துவர் வட்டவட்டமாய்க் அலைகள் என்றெல்லாம் நினைத்து ஒதுங்க வேண்டாம் . உடல் போல் மனமும் நம்மில் ஒரு பகுதி சொல்லப்போனால் உடலை விட மனதுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள்
ஒரு எளிய எடுத்துக்காட்டின் வழியாக இதை விளங்கிக்கொள்ளலாம் .
இரு மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள் ,ஒருவர் மிக நன்றாகப் படிக்கக் கூடியவர் . முழுமையாகப்படித்து திரும்பவும் படித்து தேர்வை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார் .இன்னொருவரோ மிகக் குறைவாகவே படித்திருக்கிறார் .எழுதினால் தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை .
இருவருக்கும் தேர்வுக்கு முதல் நாள் உடல் நலம் குன்றி காய்ச்சல் வந்து விடுகிறது
முதலாமவர் நன்கு படித்திருப்பதால் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் தேர்வு எழுதி வெற்றியும் அடைகிறார்
அடுத்தவரோ உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்வைத் தவிர்த்து விடுகிறார்
முதலாமவரின் மன நிலை , மன வலிமை உடலை வென்று விடுகிறது
அடுத்தவருக்கு மனதில் உறுதி இல்லாததால் உடல் இயங்க முடியவில்லை
“பலே பாண்டியா “ என்று ஒரு திரைப்படம் .படம் எப்படியோ சில பாடல்கள் அருமை அதில் ஒன்றில் வரும் வரிதான் தலைப்பில் வருகிறது
“ஆழக்கடலும் சோலையாகும் “ ஒருவரின் மன நிலைக்கேற்ப இருககுமிடம் எப்படி மாறும் என்பதை அழகாகக் கவிதை வடிவில் சொல்கிறார் கண்ணதாசன் . வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலில்
இது போன்ற பல திரைபாடல்கள் உள்ளன . எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் “ ஒவ்வொரு பூக்களுமே “
“ ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் “ உள்ளத்தின் வலிமையை விளக்கும் அழகான வரிகள்
இலக்கியம் என்பது காலத்தை , மக்களின் வாழ்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி .எனவே இலக்கியங்களிலும் உளவியல் கோட்பாடுகள் பலவற்றைக் காணலாம்
சங்க இலக்கியப்பாடல்கள் குறிப்பாக அகப் பொருள் பாடல்கள் உளவியல் அடிப்படையில் அமைந்தவை என்று சொல்லும் தமிழ் அறிஞர்கள் . உளவியல் உத்தி , தனிமனக் கூறு , முன்னம் போன்ற பல சொற்களை பயன்படுத்துகிறார்கள்
அதற்குள் எல்லாம் நுழைந்து நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம்
ஒரு சில எடுக்துக் காட்டுகள் மட்டும் பார்ப்போம்
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னேடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னேடுங் குன்றம் பாடிய பாட்டே
குறி சொல்லும் பெண்ணைப் பார்த்து வீட்டில் இருக்கும் பெண் பாடுவதாய் அமைந்த பாடல் .
இதில் வரும் அவர் (அவர் நன்னேடும்குன்றம் பாடிய பாட்டே ) என்ற சொல்லை வைத்து பெண்ணின் தாய் தன மகள் யாரையோ மனதில் எண்ணிப் பாடுகிறாள் எனபதை அறிந்து கொள்கிறாராம் . எவ்வளவு நுட்பமான உளவியல்
இன்னொரு பாட்டு திருமணம் ஆகி சில காலம் கழித்து தாய் வீட்டுக்கு வரும் பெண் தன் தோழியிடம் சொல்வது போல் தன தாய்க்கு சொல்கிறாள்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய, அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே!
இங்கு தாய் வீட்டில் கிடைக்கும் பால் ,தேன் சுவையுடைய நீரை விட துணைவன் ஊரில் கிடைக்கும் காய்ந்த இலைகள் விழுந்து கிடக்கும் தண்ணீர் எனக்கு இனிமையாகத் தெரிகிறது
என்று சொல்லும்போது தன் துணைவன் மேல் அவள் கொண்டுள்ள அன்பு பாசம் பற்று வெளிப்படுகிறது
இலக்கியம், உளவியல் இரண்டுமே சற்று கடுத்தமான பொருட்கள்
எனக்குப் புரிந்த அளவுக்கு , என்னால் முடிந்த அளவுக்கு இறைவன் அருளால் எளிய மொழியில் எழுத முயற்சித்திருக்கிறேன் . படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும் – என் முயற்சியில் சிறிதளவாவது வெற்றி கிடைத்ததா என்பதை
நாளை இதன் தொடர்ச்சியில்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
03082021tue
Sherfuddin
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment