Tuesday, 24 August 2021

தமிழ்( மொழி )அறிவோம் (மற (றை) ந்த) எழுது பொருட்கள்

 தமிழ்( மொழி )அறிவோம்

எழுது பொருட்கள்
இது என்ன ?
விடை பிறகு
பயன்பாட்டில் இருந்து பின் மறந்து மறைந்து போன உரல், உலக்கை ,முறம், ஊதாங்குழல் போன்ற பலவற்றைப் பற்றி முன்பு எழுதியிருந்தேன்
அந்த வரிசையில் பள்ளி,பள்ளி, கல்லூரி. அலுவலகங்களில் பயன்பாட்டில் இருந்து இப்போது மற(றை)ந்து போன சில பற்றி இப்போது எழுதுகிறேன்
எங்கள் ஊர் பள்ளி வாசலுக்கு எதிரே சாவடி என்று ஒரு இடம். மூங்கில் தட்டியால் மூடியிருக்கும் .அங்கு ஏட்டுப்பள்ளிக்கூடம் நடப்பதாக சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரே ஆசிரியர் அவரே நிர்வாகி எல்லாம் . அவர் ஒரு ஞானி என்று சொல்வார்கள் . எறும்புகளோடு பேசுவாராம்
நோட்டு, புத்தகத்துக்குப் பதில் ஓலைச் சுவடி கொடுப்பார்களாம் . அந்தப்பள்ளி இப்போது இல்லை . சாவடி இருக்கிறதா என்று தெரியவில்லை
காலபோக்கில் எழுது பொருட்கள் ,எழுதும் முறையில் எத்தனை எத்தனை மாற்றங்கள் !
ஆர்ம்பப்பள்ளியில் எழுத சிலேட்டும் குச்சியும்தான். குச்சிக்கு இன்னொரு பெயர பல்பம் .சிலேட்டில் கல் சிலேட்டு, தகர சிலேட்டு . ரப்பர் சிலேட்டு என பலவகை
குசசியிலும் கல்குச்சி, மாவுக்குச்சி என பலவகை . கடல் குச்சி என்ற ஓன்று கடலில் விளையும் செடியின் குச்சி . அது நன்றாக எழுதும் என்று சொல்வார்கள் . மயிலிறகு குட்டி போடும் என்று ந்மபுவது போல் இதுவும் ஒரு இனிய நம்பிக்கைதான்
பேனா , பென்சில் , நோட்டு , ரப்பர் எனும் அழிப்பன் எல்லாம் ஆறாம் வகுப்புக்கு மேல்தான் என்று நினைக்கிறேன் .
ரைட்டர் பேனா என்பது தரமான பேனாவாக உலா வந்தது .
வெளி நாடு தொடர்பு உடையவர்கள் ஹீரோ பேனா வைத்திருப்பார்கள் . பைலட் , பார்க்கர் இதெல்லாம் மாணவப் பருவத்தில் கிடைக்காதவை
பேனா மை தீர்ந்து விட்டால் பக்கத்தில் இருக்கும் மாணவனிடம் கடனாகவோ இலவசமாகவோ வாங்கிக் கொள்ளும் பழக்கமும் இருந்தது . அவசரத்துக்கு தண்ணீர் சில சொட்டுகள் ஊற்றியும் எழுதுவதுண்டு
சாம்பல் நிறத்தில் இருக்கும் அழிப்பான் பேனா மையால் எழுதியதை அழிக்கும் என்பது ஒரு கற்பனை ,, நம்பிக்கை . ஆனால் அந்த அழிக்கும் முயற்சியில் நோட்டுத்தாள் கிழிந்து போவதும் உண்டு
பென்சில் சீவ பெரும்பாலும் பழைய கத்தி (பிளேடு)தான் .பென்சில் சீவும் ஷார்ப்பனர் ஒரு அறிய பொருள்
வடிவியல் பெட்டி (ஜியாமெற்றி பாக்ஸ்) யில் உள்ள கருவிகள் தகரம் அல்லது மரத்தில் இருக்கும் . அளவு சரியாக இருக்காது எனவே விடைகள் தவறாக வரும் .சிலரிடம் மட்டும் நெகிழியினாலான கருவிகள் கொண்ட பெட்டி இருக்கும் .
நோட்டில் விஸ்டம் நோட்டு நயமாக இருக்கும் . வெள்ளைத்தாள் வாங்கி வீட்லேயே ஆள் வைத்து நோட்டு தயார் செய்தும் கொடுத்திருகிறார்கள்
இபோதோ வண்ண வண்ண விலை உயர்ந்த நோட்டுகள், பேனாவில் பந்து முனைப்பேனா , ஸ்டிக் பேனா, வரை பேனா எனப்பல பல வகைகள் .இது போக விரலி நினைவம் (பென் டிரைவ் ) கைப்பேசி ,கணினி என பல வி(த்)ந்தைகள் (
நான் வங்கிப்பணியில் சேர்ந்தபோது பந்து முனை பேனாவுக்கு அனுமதி இல்லை . காலபோக்கில் ப மு கட்டாயமாகி இப்போது முழுக்க கணினி மயமாகி
எழுத்து வேலையே இல்லாமல் போய் விட்டது
நேற்று ஒரு படம் போட்டு அது என்ன என்று கேட்டிருந்தேன்
அது மைக்கூடுகளும் பேனா தாங்கியும்( ink pots and pen stand) சேர்ந்து கனத்த கண்ணாடியில் செய்யப்பட்ட அலுவலகக் கருவி .உயர் அதிகாரிகள் அலுவலக மேசையில் காணப்படும் இரண்டு குழிகளில் (மைக்கூடு) இரண்டு வண்ண மை இருக்கும் . மூடியும் இருக்கும் (படத்தில் மூடி இல்லை )
முழுதாகத் திறக்காமல் கட்டைப்பேனாவில் மையைத் தொட்டு எழுதும் அமைப்பிலானது . மைக்கூடுகளுக்கு நடுவில் இருக்கும் சிறிய குழியில் குண்டூசி , பிடிப்பான் (பின், ஜெம் கிளிப்) வைத்துக்கொள்ளலாம்
நீளமான பகுதியில் கட்டைபேனாக்கள் வைத்துக்கொள்ளலாம் .
கட்டைப்பேனா – மரத்தில் ஆனா கைப்பிடியின் முனையில் பேனாவின் எழுதும் பகுதியான நிப் பொருத்தப்பட்டிருக்கும் . மூடி இருக்காது
இன்னொரு பொருள் மை ஒற்றும் தாள்(Blotting Paper, Blotting Pad ) மரம் அல்லது இரும்பினால் ஆன ப்ளாட்டிங்பேட் எதோ கொத்தனார்கள் பயன்படுத்தும் கருவி போல் பெரிதாக இருக்கும்
இப்போது எந்த அலுவலகத்திலும் இதெல்லாம் இருக்காது . மை பேனா, பேப்பர் எல்லாம் வழக்கொழிந்து வரும் நிலையில் மை ஒற்ற வேண்டிய தேவையே இல்லை
கால வெள்ளத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இருந்தாலும் அவ்வப்போது மறந்து போன பழைய பொருட்களை நினைவு கூறுவது ஒரு இனிமை .மேலும் இவற்றை காணும் வாய்ப்புக் கிடைக்காத இளைய தலை முறைக்கு ஒரு அறிமுகம்
நேற்றைய வினாவுக்கு சரியான விடை
மைக் கூடுகளும் பேனா தாங்கியும் (ink pots with pen stand)
சரியான விடை அனுப்பியோர் :
சகோ ராஜேந்திரன் ,,மனோகர், ஜோதி (மும்தாஜ் ),பீர் ராஜா , தல்லத்.,யோக நாயக் , ராஜன் கெ என், ரவிச்சந்திரன்
வாழ்த்துகள், பாராட்டுகள்
ஆர்வத்துடன முயற்சித்தவர்கள்
சகோ ஷேக் பீர் ,ராஜாத்தி, நஸ் ரீன் ,அயுப் நிலோ , இதயத், யாஸ்மின் ,ரபீக்,
நன்றி
சகோ ராஜா எஸ் மணியன் –எங்கள் வீட்டிலும் ஓன்று இருந்தது என்று எழுதியிருக்கிறார் . இப்போது அது இருந்தால் படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் . இணையத்தில் கூட படம் எளிதில் கிடைக்கவில்லை
கிடைத்த ஒரு படத்தில் பழங்காலத்துப் பொருள் (antique) என்று
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
25082021wed
Sherfuddin P
Like
Comment
Share

No comments:

Post a Comment