Saturday, 7 August 2021

கிறுக்கல்கள் - நாற்பது

 நாற்பது நாளாகி விட்டதா என்று திகைப்பு .

அடுத்த நொடியே
நாற்பது நாள்தான் ஆகியிருக்கிறதா என்ற மலைப்ப்ப்பு
(Theory of Relationship?)
இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ ஆண்டுகளோ !
இறுதி வரை துணை என்று நான் எண்ண
தன் இறுதி வரை என் துணை அவருக்குப் பெருமை என்ற
தன் எண்ணத்தை எளிதாக நிறைவேற்றிக் கொண்டு
பறந்து விட்டார் மறைந்து விட்டார் மறந்து விட்டார்
எனக்கோ இருப்பது மறக்கவில்லை
மறைந்தது மனதில் நிலைக்கவில்லை
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
துணையாய் ,நட்பாய் நல்லமைச்சாய் தாயாய் சேயாய் நாலு மாமாங்கம்
நலந்தானா என்கிறார்கள்
விடை தெரியவில்லை
எனக்கே என்னைப் புரியவில்லை
வாழ்வென்பது கனவா கற்பனையா நிஜமா !
ஏதேதோ கேட்கத் தோன்றுகிறது
எப்படிக்கேட்பது
இது என் தனி மொழி , உளறல் கிறுக்கல்
சுமையை இறக்கி வைக்கும் முயற்சியில் ஒரு பகிர்வு
ஒட்டகத்தில் இருந்து சிறிய மூட்டையை தூக்கி எறிவது போல்
படித்தவுடன் மறந்து விடுங்கள்
07082021sat
Sherfuddin P
May be a black-and-white image
Like
Comment
Share

No comments:

Post a Comment