“நபியே ! எவர் மீது ஏக இறைவன் அருள் புரிந்தானோ, இன்னும் நீங்களும் (நபியும்) அருள் புரிந்தீரோ அவரிடம் -------------------நினைவு கொள்வீராக --------------------------(33:37)
இந்த இறைவசனத்தில் குறிப்பிடப்படுபவர்யார் ? பொருள்,விளக்கம் என்ன ?
விடை
இறையருளும் நபி அருளும் பெற்ற அவர் பெயர் சைது Zayd زَيۡدٌ
சென்ற வார குரான் பதிவில் பார்த்த குரான் வசனம் 33:4 இல் வரும் “உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை அவன் உங்கள் பிள்ளைகளாக ஆக்கவில்லை
என்பது ளிஹார் என்னும் மூடப் பழக்கம் பற்றிய வசனத்தின் பின் பகுதியில் வருகிரது
அதற்கு விளக்கம்தான் சைது பற்றிய பகுதி
விளக்கத்துக்குள் போகுமுன் சை து வின் சிறப்புகள்
நபி அல்லாதா ஆண்கள் 12 பேர்தான் குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படுகின்றனர் . அதில் சை து வும் ஒருவர்
ஏக இறைவழியான இஸ்லாத்தின் துவக்கக் காலத்தில் முழு நம்பிக்கையோடு அதில் இணைந்த முதல் நால்வரில் ஒருவர் சை து . மற்ற மூவர் அன்னை கதீஜா, அலி, அபூபக்ர்
இனி விளக்கம் சுருக்கமாக
அடிமைக் குளத்தில் பிறந்து நபி பெருமான் அவர்களிட்ம் அவர்கள் நபி ஆவதற்கு முன்பே பணி செய்யும் சிறுவனாய் சேர்ந்தவர்சைது .
அவருடைய ஒழுக்கம், நேர்மை கண்டு வியந்த நபி அவர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் அடிமை விலக்கு அளித்து, அதோடு நில்லாமல் தன வளர்ப்பு மகனாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்
உயர் குலத்தைச் சேர்ந்த , நபியின் நெருங்கிய உறவான சைனப் என்ற பெண்ணை இறைவன் கட்டளைப்படி சைதுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்
இதில் சிறிதும் விருப்பம் இல்லாத அந்தப் பெண் நபியின் சொல்லை மீற முடியாமல் , மனம் ஒப்பாமல் சம்மதிக்கிறார்
ஆனால் இருவருக்கும் சிறிதும் ஒத்துப்போகாததால் இறைவன் கட்டளைப்படி மணவிலக்கு செய்து விடுகிறார்
அடுத்து இறைவன் கட்டளை ஜைனபை திருமணம் செய்து கொள்ள நபி அவர்களுக்கு வருகிறது
மகன் என்று தான் அறிவித்த சை துவின் துணைவி தனக்கு மருமகள் முறை ஆகிறதே அப்படியிருக்கும்போது அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொண்டால் ஊர் உலகம் அவதூறு பேசுமே என நபி அச்சம் கொள்ள
அதற்கு மறுமொழியாக இந்த வசனம்
“உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை அவன் உங்கள் பிள்ளைகளாக ஆக்கவில்லை.அது உங்கள் வாய்களால் நீங்கள் சொல்வது. இறைவன் உண்மையைச் சொல்லி நல்ல வழி காட்டுகிறான் “
இதனைத் தொடர்ந்து வசனம் 33:36 iஇல்
“இறைவனும் அவனது தூதரும் தீர்ப்பு சொன்ன ஒரு செய்தியில் சுயமாக முடிவெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது .அப்படிச் செய்வாது இறை வழிக்கு மாறு செய்வதாகும் “
என இறைவன் எச்சரிக்கிறான்
மேலும் வசனம் 33:37 இல்
“வளர்ப்பு மகன் முறைப்படி மணவிலக்கு செய்த பெண்ணை மணம் முடிப்பதிலும் அதை உலகுக்கு அறிவிப்பதிலும் அச்சம் கொள்ளாமல் இறைவனுக்கே அஞ்சுங்கள் “ என்று கட்டளை இடுகிறான்
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு மூட நம்பிக்கயை ஒழிக்க இறைவன் தன் நபியை அழகிய முன் மாதிரியாக உலகுக்குக் காண்பித்து தெளிவு படுத்துகிறான்
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
11022022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment