Thursday, 3 February 2022

குரான் 33:4 ளிஹார் மண விலக்கு


குரான் 33:4 ளிஹார் மண விலக்கு 


 இறைவன் படைப்பில் ஒரு மனிதனுக்கு ஒரு இதயம் (உள்ளம்) மட்டுமே”

என்ற கருத்தைச் சொல்லும் குரான் வசனம் எது ?
விடை
சுராஹ் அல் அஹ்சாப் (குலங்கள்) வசனம் 4
“இறைவன் ஒரு மனிதா உடலில் இரண்டு
இதயங்களை (உள்ளங்களை) அமைக்கவில்லை
நீங்கள் மணவிலக்கு(ளிஹார்) செய்கின்ற உங்கள் துணைவிகளை உங்கள தாய்களாக அவன் ஆக்கவில்கை
உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை அது உங்கள் வாய்களால் நீங்கள் சொல்வதாகும்
இறைவன் உண்மையைக் கூறுகின்றான், நல்ல வழி காட்டுகிறான் “
(குரான் வசனம் 33:4 )
சற்று நீளமான வசனம்தான்
மிகவும் பொருள் பொதிந்த இந்த வசனத்துக்கு விளக்கமும நீளம்தான் .. முடிந்த அளவுக்கு சுருக்கமாக் விளக்குகிறேன்
அரபுநாட்டில் உலவிய பல மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை இஸ்லாம் ஒழித்துக்கட்டியது .
அதில் ஒன்றுதான் ளிஹார் எனும் மண விலக்கு முறை . இந்த முறையில் துணைவியைப் பிடிக்காத ஒருவன், “ உன் பின்(முதுகுப்) புறம் என் அம்மாவின் பின்புறம் போல் இருக்கிறது “ என்று சொல்லிவிடுவான்
உடனே துணைவி அவனுக்கு அம்மாவாகி விடுவதால் மண விலக்கு பெறுவது எளிதாகி விடுகிறது
இது சமுதாயம் ஒப்புக்கொண்ட ஒரு நடை முறையாக இருந்தது .
இதை ஒழிக்கத்தான் இந்த இறை வசனம் இறங்கியது .
ஒருவனுக்கு இதயம் (உள்ளம் ) ஒன்றுதான், துணைவி தாயாகி விட்டாள் என்பது மனிதர்கள் வாயில் வருவது
இறைவன் உண்மையைக் கூறி நல்வழி காட்டுகிறான் என்று இந்த ளிஹார் எனும் மண விலக்கு முறைக்கு முடிவு கட்டுகிறது
மனிதர்கள் என்றுதானே குரான் குறிப்பிடுகிறது . அப்படி என்றால் பெண்களுக்கு இரண்டு இதயமா என்று அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வினா எழுப்பி, குரான் ஒரு தெளிவான நூல் இல்லை என்று சொல்ல முற்படுகிறார்
இதற்கு சரியான மறு மொழி , பதிலடி கொடுக்கிறார் ஒரு இஸ்லாமிய மாணவர்
“ ஆம் பெண்களுக்கு இதயம் இரண்டு- கருவுற்றிருக்கும் காலத்தில் “ என்று சொல்லி குரான் மிகத்தேளிவான் ஒரு நூல், வழிகாட்டி என்பதை நிலை நிறுத்துகிறார்
இந்த செய்தியை அனுப்பிய சகோ பர்ஜானா (ஹபீபா)வுக்கு நன்றி
வளர்ப்புப் பிள்ளைகள் – விளக்கம் இறைவன் நாடினால் வேறொரு பதிவில்
சரியான விடை அனுப்பியோர்
சகோ ஹசன் அலி- முதல் சரியான விடை
பர்ஜானா(ஹபீபா)
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
04022022வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Ayubkhan Khan
2 comments
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment