Friday, 4 February 2022

பெண் மனம்

 பெண் மனம்

நிலவை அளந்தோம் இன்று பெண்கள் நெஞ்சை அளப்பது என்று
என்ற பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது
ஒரு தலைப்பில் எழுத துவங்கி விட்டால் எண்ணங்கள் நெஞ்சில் வந்து குவியும் அதை அப்படியே கணினியில் எழுத்தாக்கி விடுவேன்
ஆனால் பெண் மனதில் தோன்றி எண்ணங்களும் அலை அலையாய் வந்து மோதுகின்றன . ஆனல் எழுத்தில் வடிக்க முடியாமல் சொற்கள முட்டுகின்றன
இறைவன் அருளால் இன்று துவங்கி, நிறைவு செய்து வெளியிட எண்ணுகிறேன்
முதலில் என்னை , என் மனதை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஒரு சிறுகதை
இணையத்தில் படித்தது அண்மையில்தான் –ஆனால் அப்போது கதையாகப் படித்த ஒன்றில் செறிந்துள்ள பொருள் இப்ப்போதுத்ன் புலப்படுகிறது
போரில் தோற்ற மன்னனுக்கு கருணை உள்ளம் கொண்ட வெற்றியாளன் உயிர்ப்பிச்சை அளிக்கிறான்
“எல்லாப்பெண்களுக்கும் எப்போதும் பிடித்தது எது ?”
இந்த வினாவுக்கு மூன்று நாட்களுக்குள் சரியான விடை அளித்து விட்டால் , தோற்ற மன்னனின் நாடு ஆட்சி எல்லாம் அவனுக்குத் திருப்பி கொடுத்துவிடுவதாய் வாக்குக் கொடுக்கிறான்
தோல்வி அடைந்தவனுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பு .எங்கெங்கோ சுற்றி அலைந்து யார் யாரிடமோ கேட்டுப்பார்த்தும் சரியான விடை கிடைக்கவில்லை
சிலர் சொன்னபடி குடிசையில் வசிக்கும் ஒரு சூனியக் கிழவியிடம் போகிறான் . கிழவி தன்னால் அவனுக்கு உதவமுடியும் என்று சொல்லி விட்டு “ உனக்கு உயிர், நாடு, ஆட்சி எல்லாம் கிடைக்கும் . இதில் எனக்கு என்ன கிடைக்கும் ?” என்று கேட்கிறாள்
“என்ன கேட்டலும் தருகிறேன் “ என மன்னன் ஒப்புக்கொள்ள
“உலகத்தில் எல்லாப்பெண்களும் எல்லாக்காலங்களிலும் விரும்புவது தங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தாங்களாகவே முடிவு செய்து கொள்வது “
இதைச் சொல்லி நீ வெற்றியடன் திரும்பி வா , பிறகு நான் விரும்பியதைச் சொல்கிறேன்
என்கிறாள்
இந்த விடையை ஒப்புக்கொண்டு நாடு, ஆட்சி அனைதையும் திருப்பிக் கொடுத்து விடுகிறான் கருணையும் பெருந்தன்மையும் கொண்ட அந்த மன்னன்
தோல்வியைத் தோற்கடித்து வென்ற மன்னன் மீண்டும் கிழவியிடம் போகிறான்
கிழவியோ “ என்னை நீ மணமுடிக்க வேண்டும் “ என்கிறாள் . கொஞ்சம் திடுக்கிடுகிறான் மன்னன் . ஆனால் வேறு வழி தெரியாததால் ஒப்புக் கொள்ள உடனே கிழவி ஒரு தேவதை போலா அழகான இளம்பெண்ணாகி மான்னனை மகிழ்விக்கிறாள்
அடுத்து அந்தப் பெண் சொல்கிறாள் :
“ஓன்று நான் வீட்டில் இருக்கும்போது கிழவியாகவும் வெளியில் வரும்போது இளம் பெண்ணாகவும் இருப்பேன்
அல்லது வெளியே கிழவியாகவும் வீட்டுக்குள் இளம் பெண்ணாகவும் இருப்பேன்
இதில் எது உனது விருப்பம் ?’:
சற்று சிந்தித்த மன்னன் , “ உன் சம்பந்தப்பட்ட இதில் நீயே ஒரு முடிவு செய்து கொள்”
என்கிறான்
இந்த விடையில் மனம் மகிழ்ந்த அந்தப்பெண் தான் எப்போதும் –உள்ளேயும் வெளியேயும் இளமைத் தோற்றத்துடன் இருக்க தீர்மானிக்க இருவரும் மகிழ்ச்சியாகவாழத் துவங்கி , தொடர்கின்ற்றனர்
முன்பு புரியாதது இப்போது எனக்குப் புரிந்தது .உங்களுக்கும் புரிந்திருக்கும்
அடுத்து நீண்ட காலம் முன்பு ரீடர்ஸ் டைஜெஸ்ட் டில் படித்த ஒரு துணுக்குச் செய்தி – மிக நன்றாக நினைவில் இருக்கிறது
“ திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆணும் பெண்ணும் தேவாலயத்தில் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்
அப்போது பாதிரியார் ஆண் பெண் இருவரிடமும் சில கேள்விகள் கேட்பார் .
அதில் மிக முதன்மையான ஓன்று
“எவ்வளவு நாளாக பையனை உங்களுக்குத் தெரியும் ?” என பெண்ணிடம்
அதே போல பையனிடம் “ எவ்வளவு நாளாக இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியும் ?”
கேள்வியில் ஒன்றும் புதுமையும் இல்லை வியப்பும் இல்லை . ஆனால் அவர்கள் சொல்லும் மறு மொழியில்தான் ஒரு வியப்பான ஒற்றுமை, செய்தி இருக்கிறது
பெண் சொல்லும் கால அளவு ஆண் சொல்வதை விட இரண்டு மூன்று ஆண்டுகள் கூடுதலாக இருக்கும்
ஆண் அந்தப் பெண்ணை எனக்கு மூன்று ஆண்டுகளாகத் தெரியும் என்று சொன்னால் பெண் சொல்வது ஐந்தாறு ஆண்டுகள் என்று இருக்கும்
இது ஓன்று இரண்டில் இல்லை, பெரும்பான்மையிலும் இல்லை . முழுக்க முழுக்க 100% இதே போல்தான் இருக்குமாம் . “invariably “ என்று டைஜெஸ்ட்டில் படித்த நினைவ
இது மதம் ,மொழி , நாடு கடந்த ஒரு உண்மை . இதில், கடற்கரை காதல் எல்லாம் கிடையாது
பெண்மையின் உள்ளுணர்வு கொடுக்கும் பாதுகாப்பு வளையம் இது ,
பெரும்பாலும் பெண்கள் ஆற அமர சிந்தித்து, நன்கு தெரிந்த ஒருவனைத் தேர்வு செய்து மனதில் வரித்துக்க் கொள்வார்கள் அது இறைவன் ஆருளால் நிறைவேறி விடும் .
அப்படி ஒரு சிலருக்கு நிறைவேறாமல் போனால் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கிடைத்த வாழ்கையை நிறைவாக வாழ முயற்சிப்பார்கள்
இருந்தாலும் --------------அடிமனதில் ஒரு ஏக்கம் , வெற்றிடம் இருந்து கொண்டே இருக்குமாம்
அரிதிலும் அரிதாக வெகு சிலருக்கு வாழ்க்கையே பொருளற்றதாகி விடுமாம்
நான் முதலில் சொன்ன கதை , அடுத்துச் சொன்ன துணுக்கு இரண்டும் சேர்ந்து சொல்லும் நீதி இதுதான்
பெண்களின் உணர்வுகளை எண்ணங்களை அறிந்து புரிந்து அதன் படி செயலபட பெற்றோர் உற்றார் முயல வேண்டும்
எனக்குத் தெரிந்ததை, மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்
இது எவ்வளவு தூரம் சரி என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05022022 சனி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment