Saturday, 12 February 2022

ஓராயிரம் பார்வையிலே , Leave this chanting மொழி பெயர்ப்பு

 முணுமுணுக்கும் மந்திரங்கள் ,உருட்டும் மணிகளை விட்டு விடுங்கள்

தனிமையில் இருண்ட மூலையில் கதவுகளை அடைத்து விட்டு யாரை வழிபடுகிறீர்கள்
கண்களைத்திறந்து கடவுள் அங்கே இல்லை என்பதை உணருங்கள்
நிலத்தை உழும் விவசாயி கல்லை உடைக்கும் தொழிலாளி
இவர்களோடு வெயிலிலும் மழையிலும் இறைவன்
தூசி படிந்த உடைகளுடன் இருக்கிறான்
உங்கள் புனிதத்துவத்தை களைந்து விட்டு அவனைப்போல் நீங்களும்
மண் புழுதிக்கு வாருங்கள்
விடுதலை ! அது எங்கே இருக்கிறது ?
நம் தலைவனே படைப்பின் தளைகளில் கட்டுண்டு என்றும் நம்முடன் இருக்கிறான்
தியானத்தை விட்டு வெளியே வாருங்கள் பூக்களையும் நறுமணங்களையும் வீட்டு விடுங்கள்
உங்கள் ஆடைகள் கிழிந்து அழுக்காயிருந்தால் என்ன ?
உழைப்பிலும் வியர்வையிலும் இறைவனை கண்டு அவனோடு இணையுங்கள்
In thousands of looks I recognize yours
By your very steps I infer your love
These mortals love will vanish with death
And the fragrance of those flowers will fade within a day
Our love is immortal and its light will guide us for ever
Mingled in the breeze I embrace your eyes
Flowing in the stream I enjoy the feel of your dress
And wherever I go I see your face in full bloom
என்ன இரண்டையும் படித்தீர்களா ?
என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி அனுப்புங்கள்
விளக்கம்
இரண்டுமே என்னுடைய மொழி பெயர்ப்புகள்
முதலாவது கவி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள Leave this chanting என்ற பாடல்
(ஏழாம் வகுப்பில் படித்தது )எனக்கு மிகவும் பிடித்த கவிதைஅழகு நடை
பாடல் இதோ
Leave this chanting and singing and telling of beads!
Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut?
Open thine eyes and see thy God is not before thee!
He is there where the tiller is tilling the hard ground
and where the pathmaker is breaking stones.
He is with them in sun and in shower,
and his garment is covered with dust.
Put off thy holy mantle and even like him come down on the dusty soil!
Deliverance?
Where is this deliverance to be found?
Our master himself has joyfully taken upon him the bonds of creation;
he is bound with us all for ever.
Come out of thy meditations and leave aside thy flowers and incense!
What harm is there if thy clothes become tattered and stained?
Meet him and stand by him in toil and in sweat of thy brow.
அடுத்தது வல்லவன் ஒருவன்படத்தில்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த மானிட காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூடவரும்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இரண்டையும் சரியாக அறிந்து எழுதிய
சகோ ஹசன் அலிக்கும், கீதாஞ்சலி என்று எழுதிய சகோ கணேச சுப்ரமணியத்துக்கும் நன்றி
பாராட்டு எனக்குத்தான்
. மூலத்தை அறியும் அளவுக்கு என் மொழி பெயர்ப்பு இருந்ததனால்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
13022022 ஞாயிறு
சர்புதீன் பீ
May be an image of 1 person and text
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment