இந்த வாரமும் ஒரு எளிய வினா—
திரைப்பாடலையும் பண்டை இலக்கியத்தையும் இணைக்கும் வினா
“பார்வையின் வழியே வார்த்தைகள் ஆட
பாவலன் கம்பன் பாட்டினில் பாட
நான் அதுபோலே காதலில் விழுந்தேன்
நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன் “
காதலனை நினைத்து உள்ளம் உருகி காதலி பாடும் பாட்டின் வரிகள் இவை
பாடல் என்ன எந்தப்படம் என்பதுதான் இன்றைய வினா
விடை
படம் தேன் மழை
பாடல் நெஞ்சே நீ போ
கவிஞர் வாலி
இசை டி கெ ராமமூர்த்தி
வெற்றிகரமாக ஓடிய இந்தப்படத்தில், நாகேஷ், சோ நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்
இனிமையான இந்தப்பாடல் சுசீலா குரலில்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெரும் தமிழ் அறிஞர்கள்
சகோ ஹசன் அலி- முதல் சரியான விடை
விஸ்வநாதன்
முயற்சித்த
சகோ கரம், ராஜாத்தி
இருவருக்கும் நன்றி
பாடல் இதோ
நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல
நானும் வருவேன் மீதியைச் சொல்ல
வாழ்வே நீ வா வாசலில் மெல்ல
மாலை வராமல் இரவு வராதோ
மாலை இடாமல் உறவு வராதோ
தூது விடாமல் ஆசை விடாதோ
துணைவன் இல்லாமல் தூக்கம் வராதோ
ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்டேன்
விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன்
பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க
நூலிடை இளைக்க நாடகம் நடக்க
நெஞ்சே -------சொல்ல
மாளிகை வெளியில் ஜானகி நின்றாள்
மாமணி மன்னன் ராமனைக்கண்டாள்
பார்வைகள் வழியே வார்த்தைகள் ஆட
பாவலன் கம்பன் பாட்டினில் பாட
நான் அதுபோலே காதலில் விழுந்தேன்
,நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன்
நால்விழி ஒன்றாய்ப் பொருந்திடும் தேதி
நான் ஒரு பாதி அவன் ஒரு பாதி
நெஞ்சே -----------சொல்ல
இதே போல் கம்பன் கண்ட சீதையை நம் கண் முன்னே நிறுத்தும் இன்னொரு அருமையான பாடல்
படம்: ரோஜாவின் ராஜா
இசை: எம்.எஸ்.வி
கவிஞர் :புரட்சிதாசன்
(நான் அறியாத பெயர்)
குரல்: பி.சுசீலா
————————-.
படம் பார்த்த நினைவு இல்லை .
ஆனால் பாடல் முழுதும் எனக்கு மிகவும் பிடிக்கும்
பாடல் வரிகள்:, சொற்கள் ஒவ்வொன்றும் இலக்கியமாக மின்னுகிறது
அதிலும்
“நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்
கண்களை மறைக்கவில்லை –
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை”
என் நெஞ்சில் பதிந்து நினைவில் நிற்பவை
பாடல் இதோ
ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்-
ராஜா ராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார்.
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்- இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனை தேடி நின்றாள்!!
நாணம் மறுபுறம் ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம்-அவள் நிலைமை திரிபுரம்…!!!
கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே.!
-அவள் கூந்தலில் சூடிய மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே…!!
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை –
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை.! முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் சீதை தனியிடம் – அவள் சிந்தை அவனிடம்…!!
மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்துவிட்டார்-
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கிவிட்டாள்…!!!!
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௧௬௦௨௨௦௨௨புதன்
16022022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment