திருக்குரான் 33:72,73
மனிதன் தன் அறியாமையினால்
வானங்களும் , பூமியும், மலைகளும் ஏற்றுக்கொள்ள மறுத்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் “
என்ற பொருள் படும் வசனம் திருகுரானில் எங்கு வருகிறது ?
விடை
சுராஹ் அல் அஹ்சப் வசனம் 72
இறைவன் சொல்கிறான்
“நிச்சயமாக நாம் அமானிதத்தை (மார்க்கக் கட்டளையை ) வானங்கள், பூமி ,மலைகள் மீது சுமத்தினோம் . அவை அச்சத்தில் அதை சுமக்க மறுத்து விட்டன
ஆனால் மனிதன் அதை சுமந்து கொண்டான் . நிச்சயமாக அவன் அறியாமையில் தவறு செய்கிறான் “(குரான் 33:72)
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலி (முதல் சரியான விடை )
முத்தவல்லி அக்பர் அலி
இருவருக்கும் வாழ்த்துகள் , பாராட்டுகள்
இந்த வசனத்திற்கு அறிஞர்கள் கூறும் விளக்கம்
இந்த வசனத்தின் மூலம் மனிதனின் உண்மை நிலையைஇறைவன் விளக்குகிறான் . குறிப்பாக இந்த உலக வாழ்வை வேடிக்கை விளையாட்டாக தவறாக எண்ணி ஒரு கவனமற்ற வாழ்க்கை வாழ்வது மனிதனுக்கு பேரழிவைத் தேடித் தரும் என்று எச்சரிக்கிறான்
அமானத் என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கிய இவ்வுலகத்தின் ஆட்சிப் பொறுப்பை, தலைமைப் பதவியைக் குறிக்கிறது .
உலகில் எண்ணற்ற வளங்களையும் , உயிரனங்களையும் மனிதனிடம் ஒப்படைத்து நல்லது கெட்டதை முடிவு செய்யும் பொறுப்பையும் மனிதனிடமே இறைவன் விட்டு விடுகிறான்
ஆனால் அவ்வளவு வளங்களையும் அருளிய ஏக இறைவன் முன் தன் நடத்தைக்கு விளக்கம் , விடை சொல்லவேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது
உருவத்திலும் வலிமையிலும் மிகப் பிரமாண்டமான வானங்கள்,பூமி, மலைகள் பற்றிக்குறிப்பிடுவதன் மூலம் இந்த அமானிதம் எனப்படும் பொறுப்பின் பிரமாண்டத்தை இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
உருவிலும் வலிமையிலும் மிகச்சிறியவனான மனிதன் இந்த அமானித்தை ஏற்றுக் கொண்டான்
விளைவை இறைவன் அடுத்த வசனத்தில் குறிப்பிடுகிறான்
அதன் கருத்து :
“தீய வழியில் சென்று இறைவனுக்கு மாறு செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேதனையைக் கொடுப்பதும்
இறை நம்பிக்கை உடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவ மன்னிப்பை வழங்குவதும் இந்த அமானிதம் என்னும் பொறுப்பை மனிதன் ஏற்றுக்கொண்டதன் விளைவு :
என மன்னிப்பவனும் கருணை உள்ளவனுமாகிய இறைவன் அடுத்த வசனத்தில் சொல்கிறான் (33:73)
வானம் பூமியெல்லாம் பேசுமா என்பது படைத்தவனுக்கு மட்டும் புரிந்த ஒரு நுட்பம் ,
(Source- Towards understanding Quran )
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25022022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment