வல்லின மெல்லின இடையின ஒலி எழுத்துக்கள் இணைந்த 3 எழுத்துச் சொல் எது?
விடை
பல சரியான விடைகள் இருக்கின்றன
நான் நினைத்தது ,எதிபார்த்தது எல்லோருக்கும் தெரிந்த சொல்
தமிழ்
த –வல்லினம் மி— மெல்லினம் ழ்- இடையினம்
இந்த விடையை ஐந்து பேர் அனுப்பியது மகிழ்ச்சி
யாரும் தவறான விடை அனுப்பாதாது இன்னொரு மகிழ்ச்சி
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெரும் தமிழ் அறிஞர்கள்
சகோ மனோகர் பாலகிருஷ்ணன் – முதல் சரியான விடை
இவர் அனுப்பிய விடை “பழம் “
அஷ்ரப் ஹமீதா (கனல்) ,டி ஆர் சுந்தரம் (ஞ்சயிறு) என் ஆர் வசந்தா (சணல் )
தமிழ் என்ற விடையை முதலில் அனுப்பியவர்
சகோ ஜபருல்ல கான்
அவரைத் தொடரந்து தமிழை அனுப்பியவர்கள்
சகோ அகிலா ரமேஷ் , பீர் ராஜா, கணேச சுப்ரமணியம் மெஹராஜ் ,அயுப் ஷர்மதா.ராஜாத்தி
அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
நிறைவு செய்யுமுன் இரு சிறு விளக்கம் – வல், மெல்,இடை இனம் பற்றி :
தமிழ் மொழியில் அ, ஆ ,இ ஈ -----ஔ என 12 உயிரெழுத்துக்கள் .
மேலே புள்ளி உள்ள க் ங் ,ச்----------என 18 மெய்யெழுத்துகள்( மெய் என்றால் உடம்பு )
உடம்பும்(மெய் எழுத்தும் ) உயிரும் (உயிர் எழுத்தும்) சேர்ந்தால் உயிர் மெய் எழுத்து – 12x18= 216 க, கா, சி ,சு - போன்றவை
இந்த 18+216= 234 எழுத்துக்களும் ஒலி- (sound) யின் அடிப்படையில் வல்லினம் , மெல்லினம் இடையினம் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்ற
ஒவ்வொரு குழுவிலும் மெய்யெழுத்து ஆறு, அதைச் சேர்ந்த உயிர் மெய் 6x12 =72 மொத்தம் 78 எழுத்துக்கள்
இந்த மூன்று பிரிவுகளை எளிதில் நினையில் நிறுத்த ஒரு திரைப்பாடல் வரிகள் :
“இனங்களில் என்ன இனம் பெண் இனம் ?
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள் தோன்றும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்குப் பிடித்ததெல்லாம் இடை யினம்”
என்ன செய்வது இலக்கணம் என்பது என்போல பலருக்கும் இன்னும் எட்டிக்காயாகக் கசக்கத்தான் செய்கிறது
இப்படி இனிப்பை தடவி மண்டையில் புகுத்த வேண்டிஇருக்கிறது
மூன்று பிரிவுகளில் வரும் எழுத்துக்கள் எவை ?
அதற்கும் ஒரு பழைய திரைப்பாடல் இருக்கிறது
கசடதபற வல்லினமாம்
ஙஞ ன ண ம ந மெல்லினமாம்
யரலவழள இடையினமாம்
இவ்வளவு விளக்கம் போதும் என எண்ணுகிறேன்
தமிழ் எழுத்துக்கள
உயிர் 12, மெய் 18 ,உயிர் மெய் 216, ஆயுதஎழுத்து 1 மொத்தம் 247
சொல்வதை கூடிய மட்டும் முழுமையாக, தெளிவாகச் சொல்லத்தான் இவ்வளவு விளக்கம் .தவறாக எண்ண வேண்டாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
இ(க)டைச் செருகல்
இலக்கணம் ,தலைக் கனம் இரண்டையும் இணைத்து ஒரு நகைச் சுவைத் துணுக்கு – முக நூலில் படித்தது
இலக்கணம் – மண்டையில் ஏறவே ஏறாது
தலைக்கனம் – மண்டையிலிருந்து இறங்கவே இறங்காது
௨௩௦.௨௨௦௨௨ புதன்
23022022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment