விழியே விழியே
ஐம்புலன்கள் ஐம்பொறிகள் –இதில் பார்வைப்பொறி கண்
இதன் மகத்துவம் பற்றி எல்லோருக்கும் தெரியும்
கொஞ்ச நாளாக காடராக்ட் என்னும் கண் புரை நோய் பற்றி அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன
எனவே இது பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம்
உள்நுழையுமுன் சில செய்திகள்
இந்தப்பதிவு பெரும்பாலும் இணையம், விகிப்பீடியாவின் அடிப்படையில் அமைந்தது
பல ஆங்கில சொற்களை மொழி பெயர்க்காமல்
அப்படியே கொடுத்திருக்கிறேன் . இது போன்ற நுட்பான செய்திகளில் தனித்தமிழை விட தெளிவு மிக அவசியம்
வங்கி மேலாளர் என்ற முறையில் சில ஊர்களில் சுழல் கழக (ரோட்டரி கிளப்) ) உறுப்பினராய் இருந்ததுண்டு . அங்கு அடிக்கடி நடத்தப்படும் கண்முகாம்களில் இந்த காடராக்ட் நோயுற்ற பலருக்கு முற்றிலும் இலவசமாக வைத்தியம் – அறுவை சிகிச்சை உட்பட – செய்யப்படும் அப்போதெல்லாம் இதற்கு செலவு மிகவும் குறைவாகத்தான் இருக்கும் என் நினைப்பு
ஆனால் இப்போதோ ,மருத்துவமனை, பொருத்தப்படும் லென்சைப் பொருத்து 25000/த்தில் துவங்கி பல லட்சங்கள் வரை செலவு ஆகும் என்கிறார்கள்
சிலருக்கு ஒரு கண் முன்பு மட்டும் ஒரு சிறிய பசசைத்துணி திரை போல் தொங்குவதைப்பார்த்திருக்கிறேன் `. இப்போது அதெல்லாம் காணாம்
சரி இனி காட்ராக்ட் பற்றி
அதற்கு முன் கண்ணின் அமைப்பு பற்றி – அது ஒரு மிக நுட்பமான மிகவும் துல்லியமான , latest technology உடைய ஒரு படக்கருவி camera என்று வைத்துக்கொள்வோம் அதன் அமைப்பு, விந்தைகள் வியப்புகள் பற்றி வேறொரு பதிவில் விரிவாகப் பாப்போம் –இறைவன் நாடினால்
காடராக்ட் –காரணங்கள்
மிகப் பரவலான, எல்ல்லோருக்கும் தெரிந்த காரணம் – முதுமை
முதுமையின் தோழர்களான சர்க்கரை, குருதி அழுத்தம் இரண்டும் சேர்ந்தால் கண் லென்சில் உள்ள புரதச்சத்து (புரோட்டின்) தன் நிலை மாறி சீரழிவை வேகப்படுத்துகிறது
அடுத்து அதிர்ச்சி - - மிக பலமான காயங்களால் ஏற்படும் blunt trauma எனப்படும் அதிர்ச்சி – இதனால் கண் லென்ஸ் தசைநார்கள் வீங்கி, தடித்து அகன்று அவை வெளுத்துப் போகின்றன .குறிப்பாக கண் பகுதியில் காயம் உண்டானால் லென்ஸ் வீங்கி ஒளிக்கதிர்கள்
விழித்திரை எனப்படும் ரெட்டினாவை அடையாமல் தடுத்து பார்வைத் திறனைக் குறைக்கிறது
தோல் நோயும் காடராக்டுக்கு ஒரு காரணம், சொறி சிரங்கு வருபவர்கள் சற்று கவனாமக இருக்க வேண்டும் .
கண் லென்சும் தோலும் ஒரே கருவில் இருந்து உண்டாகிறதாம்
இது போக குடி, புகை போன்றவையும் காட்ராக்டிதில் பெரும் பங்கு வகிகிக்ன்றன . குறிப்பாக புகைப்பவர்களுக்கு மற்றவர்களை விட இரண்டு, மூன்று பங்கு இந்த நோய்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது
வைட்டமின் சி , சீரம் (serum) குறைபாடுகள் பெருமளவில் காடராக்டுக்கு காரணமாகின்றன
ஆனால் மாத்திரை மருந்து வடிவில் வைட்டமின் சி சேர்ப்பதால் பெரிய அளவில் பலன் ஒன்றும் தெரியவில்லை
முழுமையைக உடல் நலத்தை பாதிக்கும் குருதி அழுத்தம், ,ஃப்ளு சுரம் போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் –systemic medicines
வெப்ப நாடுகளில் எளிதாகப் பரவும் மலேரியா, எய்ட்ஸ் , டி பீ போன்ற நோய்களுக்கான மருந்துகள் Tropical medicines
மூக்கில் உறிஞ்சப்படும் சில ஸ்டெராயிட்ஸ் – corticosteroids
இவையும் காடராக்டை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு
சரி வராமல் தடுக்க என்ன வழி ?
கண்களைபாதுகாக்க சூரியக் கண்ணாடிகள் (சன் கிளாசஸ்) பெரிய தொப்பி hat அணியலாம்
நிறைய பசசைக் கீரைகள் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம்
ஆரம்ப நிலை என்றால்தகுந்த கண்ணாடி அணிந்து சரி செய்யலாம்
நோய் சற்று முற்றி விட்டால் பழுதடைந்த லென்சை எடுத்து விட்டு செயற்கை லென்ஸ் வைப்பதுதான் ஒரே வழி
கண் லென்சில் ஒரு புகை படிந்தது போல் பார்வைத்திறன் குறைவதுதான் கண் புரை நோய் எனப்படும் காட்ராக்ட் என படிக்க எளிதாக இருக்கும் மிக எளிதாக சரிப்படுத்தி விடுகிறார்கள்
ஆனால் உலக அளவில் பார்வைத்திறன் முழுமையாக இழந்தவர்களில் பாதிப்பேரும் , பார்வைத் திறன் குறைந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினரும் காடராக்ட் நோயால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எனும் புள்ளி விவரம் அச்சம் தருகிறது
தலைமை மருத்துவருக்கெல்லாம் தலைமை மருத்துவனாகிய ஏக இறைவன் நம் அனைவருக்கு குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வைக் கொடுத்து நலமுடன், வளமுடன் வாழ அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
க(இ)டைச் செருகல்
விக்கிப்பீடியாவில் பத்துப் பக்கங்களுக்கு மேல் உள்ளதை சுருக்கமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறேன் .முழு விவரம் தேவைப்படுவோர் பார்த்துக்கொள்ளுங்கள்
26022022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment