திருமறையும் நானும்
குரானைபற்றித்தான் பல விதமான பதிவுகள் நாள்தோறும் நிறைய வருகின்றதே அதில் இவன் என்ன புதிதாக சொல்ல போகிறான் என்ற அலுப்பும் சலிப்பும் உண்டாகிறதா ?
அச்சம் வேண்டாம். இது குரான் பற்றிய பதிவு அல்ல . முழுக்க முழுக்க இல்lலாவிட்டாலும் முக்காலும் என்னைப்பற்றிய பதிவு
இதற்கு குரானே மேல் என்று மேலும் சலிப்படையாமல் மனதை தேற்றிக்கொண்டு படிக்க முயலுங்கள் .
புனித ரமலான் மாதத்தில் நான் குரானை முழதாக ஒரு முறை ஓதி முடித்தேன் , இரு முறை, மூன்று முறை என்றெல்லாம் என் உடன்பிறப்புகள் , உறவுகள், நட்புகள் சொல்லிக் கேட்டதுண்டு
ஆனால் இதை எல்லாம் ஒரு போட்டி மனப்பாங்கோடு அறைகூவலாக நான் என்றுமே எண்ணியதில்லை . ஏனென்றால் என்னைப்பற்றி , எனது வேகம் ,திறமை பற்றி எனக்குத் தெரியும் , மிக நன்றாகத் தெரியும்
“ஐயா நாங்கள் எல்லாம் குரானை ஓதுகிறோம். ஆனால் நீங்களோ குரானை படிக்கிறீர்கள் word by word, verse by verse அதுவும் meaning கோடு வாசிக்கிறீர்கள் “
என என் பேரன் , குரானை இருமுறை ஓதி முடித்த பேரன் குழந்தைத் தன்மான முதிர்ச்சியோடு சொல்வது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும்
இன்னொரு மிகப்பெரிய ஆறுதல் தருவது நபி மொழி “திக்கித்திக்கி குரான் ஓதுபவருக்கு இரட்டிப்பு நன்மை “
ஆம் , எனக்கு குரான் வேகமாக ஓத வராது . இதற்கு ஒரு வலுவான சாக்கு இருக்கிறது .. அடிக்கடி அத்தாவுக்கு பணியிட மாறுதல், எனக்கு ஓதுவதில் பெரிய அக்கறை இல்லாதது போன்றவற்றால் சிறு வயதில் நான் முறையாக குரான் ஓதியதில்லை
இன்னும் சொல்லப்போனால் பணியில் இருந்து ஒய்வு பெற்றபின்தான் முறையாக குரான் பாடம் அளிப் பா விலிருந்து ஓதத் துவங்கினேன்
வயதுக்கேற்ற அலுப்பு, வீடு மாற்றம், ஆசிரியர் இடம் பெயர்ந்து போனது, வெள்ளம் புயல் என பலவும் சேர்ந்து என்னை முழுமையாகப் படிக்க விடாமல் தடுத்து விட்டன
தமிழ் குரான, ஆங்கிலகுரான் இரண்டையும் பலமுறை ஆழமாகவும் ,அகலமாகவும் படித்திருக்கிறேன்
அரபுக் குரானை முழுமையாக வாழ்நாளில் ஒரு முறையேனும் படித்து முடிக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம், ஏக்கம் ஆழ் மனதில் ஓடிகொண்டே இருந்தது
இப்போது ஓரளவு அரபு எழுதக்துக்கள எல்லாம் தெரியும் என்ற எண்ணத்திலும் நல்ல முயற்சிகளுக்க் இறைவன் துணை புரிவான் என்ற நம்பிக்கையிலும் கணினியின் மூலம் குரனைப்படிக்கத் துணிந்தேன்
இவ்வவளவு காலம் கடந்து ஓதுகிறோம் . இனி மீண்டும் ஒரு வாய்ப்பு வருமோ வராதோ இதை சற்று விரிவாக, பொருள் உணர்ந்து ஓதி எழுதியும் பார்க்கலாமே என்று ஒரு எண்ணம் தலை தூக்க என்ன செய்வது, எப்படி ஓதுவது என்ற ஒரு திட்டத்தை மனதுக்குள் வகுத்துக்கொண்டேன்
முதலில் ஒரு நாளில் ஓத வேண்டிய அளவை வரையறை செய்து கொள்வது . அது வசனங்களின் நீளத்தைப் பொருத்துத் ஒரு ருக்கு அல்லது அதை விடக் குறைவாகத்ஹன் இருக்கும்
அரபுக் குர்ஆன் நூலில் இந்த குறிப்பிட்ட அளவை ஓத வேண்டும் . பிறகு அதை ஆங்கிலக் குரான் நூலில் படிக்க வேண்டும்
அடுத்து கணினியில் Towards understanding Quranனில் இந்த வசனங்களை ஓன்று ஒன்றாக அரபி ஒலி வடிவில் ஓதக்கேட்க வேண்டும்
அரபுக்குக் கீழே ஆங்கிலதில் பொருளும் அதை அடுத்துஆங்கிலத்தில் விளக்கமும் இருக்கும் . சில விளக்கங்கள் மிக மிக நீளமாக இருக்கும்
அதையெல்லாம் படித்து தேவையாதை தனியாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்
ஆங்கிலத்தில் புதிய சொற்கள் எதாவது கண்ணில் பட்டால் அவற்றையும் பொருளுடன் குறித்து வைக்க வேண்டும்
அடுத்து Quran .com
இது பலதரப்பட்ட வசதிகளை வழங்கும் ஒரு versatile package
அரபு மூலம் . அதன் ஒலி வடிவம்- பத்துக்கும் மேற்பட்ட குரல்களில் ), ஒவ்வொரு சொல்லாக ஒலியும் ஆங்கிலப் பொருளும் கேட்கும் , பார்க்கும் வசதி , ஒலி பெயர்ப்பு (transliteration பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில மொழி பெய்ரப்புகள் ,உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்ப்பு, (தமிழில் மூன்று ) ஆறு வகையான எழுத்துருக்கள் (fonts) , எழுத்துக்களின் அளவை மாற்றிக்கொள்ளும் வசதி என எண்ணற்ற வசதிகள் . உச்சரிப்புக்கு தகுந்தவாறு வண்ணத்தில் உள்ள colour Quran கூட இருக்கிறது
நமக்குத் தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்
நான் தேர்வு செய்தவை ஒரு தமிழ், இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஒலி பெயர்ப்பு
முதலில் வசனத்தின் அரபு மூலத்தை வசித்து விட்டு ,பின் அரபு ஒலி வடிவத்தை கேட்பேன் பிறகு ஆங்கிலம் , தமிழ் மொழி பெயர்ப்புகளை படித்து விட்டு அதன்பின் ஒவ்வொரு சொல்லாக ஒலி வடிவம், ஆங்கிலப்பொருள் . பிறகு அரபு மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிப் பார்த்தல்
ஒவ்வொரு அத்தியாயம் (சூரா( துவங்கு முன் அதற்கான் Wikipedia வைபடித்து தேவையானவற்றை குறித்துக் கொள்வேன் AA
ஆகா இவன் குர்ஆனில் பெரிய மேதை ஆகி இருப்பானே என்ற வீண் கற்பனை எல்லாம் வேண்டாம்
குரான் என்பது முழுக்க முழுக்க ஏக இறைவன் படைப்பு . எத்தனை முறை படித்தாலும் ஒவொரு முறையும் புதிதாகப் படிப்பது போல் இருப்பது குரானின் தனிச் சிறப்பு .
எனக்கு உள்ள குறைபாடுகள் –ஓன்று நான் முன்பே சொன்னது போல் வேகமாக ஓத வராது . அடுத்து எழுத்து – ஓரளவு வேகமாக எழுத நுடியும் . ஆனால் வேகமாக எழுதினால் என் எழுத்து எனக்கே புரியாது
வெளியூர் பயணங்களில் இந்த ஓதுதல், எழுதுதல் எல்லாம் வீட்டு விடுவேன்
இறைவன் அருளால் ஒரு சுற்று ஓதி, எழுதி நிறைவு செய்து விட்டேன் .
இந்த அளவுக்கு வாழ்நாள், உடல் நலம், மன நலம் வசதி எல்லாம் அருளிய ஏக இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை .
சொல்லாவிட்டால் என்ன, அவன்தான் நம் உள்ளத்தை , நம் எண்ணங்களை நன்கு அறிந்தவ்னாயிற்றே
ஒரு வழியாக்அவன் மேல் பொறுப்பை சுமத்தி விட்டு இரண்டாவது சுற்று துவங்கி இருக்கிறேன், . இறைவன் நாடினால் இதுவும் நிறைவேறலாம் .
நிறைவாக
நான் மேலே சொன்ன முறையில் ஓதி எழுத எடுத்துக்கொண்ட கால அளவு எவ்வளவு தெரியுமா ?
இதற்கு விடை நான் சொல்லப்போவதில்லை .
உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19022022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment