Thursday, 17 February 2022

குரான் - திரை வசனம் (33:53)

 திரை (ஹிஜாப்)வசனம் (The verse of the veil) எனப்படும் இறைவசனம் எது ?

விடை. விளக்கம்
சுராஹ் அல்ஹசப் வசனம் 53 (33:53)
சற்று நீளமான இந்த வசனத்தில் இறைவன் சொல்லும் செய்திகள்
“நபி பெருமானின் அனுமதி இன்றி அவர் இல்லத்தில் இறை நம்பிக்கை உடையோர் நுழையக்கூடாது
அங்கு உணவுக்காகக் காத்திருத்தல் கூடாது
அங்கு உணவு உண்ண அழைப்பு இருந்தால் அப்போது உள்ளே போய் உணவு உண்டதும் பேசிக்கொண்டு இருக்காமல் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும்
தனக்குத் தொல்லையாக இருந்தாலும் நபி பெருமான் சொல்லக் கூச்சப்படும் செய்திகளை, உண்மைகளை சொல்ல இறைவன் வெட்கப்படுவதில்லை
மேலும் இறைநம்பிக்கை கொண்டோர் நபி பெருமானின் துணைவியரிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால் திரைக்குப் பின் இருந்தே கேட்க வேண்டும் .இதுவே உளத் தூய்மைக்கு சரியான முறையாகும்
இறைவனின் தூதருக்கு தீங்கிழைப்பதும், நபி பெருமான் துணைவியரை நபி பெருமான் காலத்திற்குப்பின் வேறோருவர் மணமுடிப்பதும் இறைவனின் பார்வையில் தடை செய்யப்பட்ட ,கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும் .”
இதில் திரை (ஹிஜாப்) பற்றிக் குறிப்பிடப்படுவதால் இது திரை (ஹிஜாப் ) வசனம் என்று சொல்லப்படுகிறது
இந்த வசனத்தில் நபி பெருமானாருக்காக இறைவன் சொன்ன செய்திகள் காலப்போக்கில் பின்னால் வந்த இறை வசனங்களாலும் ,நபி பெருமானை முன் மாதிரியாகக் கொண்ட நம்பிக்கைகொண்டோரின் நடைமுறைகளாலும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான சட்டங்களாகவும் , பழக்கங்களாகவும் மாறி விட்டன
சுராஹ் அந்நூர் வசனம் 27 (24:27) : பிறர் வீட்டுக்குள் முன் அனுமதி இன்றி நுழையக் கூடாது என்பதை விதியாக்கியது
நபி பெருமான் வீட்டில் திரைகள் தொங்க விடுவதைப்பார்த்த மற்ற முஸ்லிம்களும் தங்கள் இல்லங்களில் திரை போடும் வழக்கம் வந்தது
திரையோடு தொடர்பு உடைய இன்னொரு இறை வசனம் 33:59
இதில் திரை (ஹிஜாப்) என்ற சொல் வரவில்லை
பெரிய மேலாடை துணியைக் குறிக்கும் ஜில்பாப் என்ற சொல் பயன் படுத்தப்படுகிறது
“நபியே! உமது மனைவி மாரையும் , பெண்மக்களையும் , இன்னும் இறை நம்பிக்கை கொண்ட பெண்களையும் தங்கள் மேலாடைகளின் ஒரு பகுதியைக் கொண்டு தங்களைச் சுற்றி நன்றாக மூடிமறைத்துக் க்கொள்ளும் படி சொல்வீராக . .அது அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்து தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம் ---------(33:59)
இதற்கு மார்க்க அறிஞர்கள் தரும் விளக்கம்
“பெண்கள் முகத்தை மூடும்படி இந்த வசனம் சொல்லவில்லை என்பது ஒரு தவறான கருத்து
அரபு மொழி இலக்கணப்படி பார்த்தால்
“பெண்கள் தங்கள் மேலாடையால் தங்களை நன்றாக மூடிக்கொண்டு அந்த ஆடையின் ஒருபகுதியை இழுத்து தங்கள் முகத்தின் முன்னாள் போட்டு மூடிக்கொள்ள வேண்டும் “ என்பது மிகத் தெளிவாக இருக்கிறது என அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள்
(Source : Towards understanding Quran )
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கு வாழ்த்துகள் . பாராட்டுகள்
முயற்சித்த சகோ தல்லத்துக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
18022022வெள்ளி
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment