ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு கிடையாது”
என்று கவிச் சக்கரவர்த்தி கம்பன் வியந்து பாராட்டியதாக ஒரு செவி வழிச் செய்தி உண்டு
இதோடு தொடர்புடைய திரைப்படப் பாடல் ஓன்று இருக்கிறது
அது என்ன ?
விடை
படம் :காட்டு ராணி
பாடல் :மூங்கில் இல்லை மேலே தூங்கும்
விளக்கம்
கம்பர் ஒரு நாள் வயல் வெளியைக் கடந்து நடந்து செல்கிறார்
வயலில் ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாடல் அவர் காதில் ஒலிக்கிறது
“மூங்கில் இலை மேலே : என்று துவங்கி “ தூங்கும் “ என்று பாட அதற்குள் அவருக்குப் பசி எடுத்துவிட்டது
பாட்டை அப்படியே நிறுத்தி விட்டு ஏற்றத்திலிருந்து இறங்கி விடுகிறார்
கம்பருக்கு ஒரு குழப்பம் .
ஆலி லை மேல் உறங்குவது கண்ணன்
மூங்கில் இலை மேல் தூங்குவது யார் என்று மண்டைக்குள் குடைச்சல்
ஏற்றக்கரரரிடம் போய்க் கேட்டிருந்தால் விளக்கம் கிடைத்திருக்கும்
ஆனால் கவிச் கவிச்சக்கரவர்த்தி அல்லவா !
அந்த ஞானச் செருக்கு தடுக்க மீண்டும் ஏற்றப்பாட்டுத் தொடரக் காத்திருக்கிறார்
ஏற்றக்காரர் பசி ஆறி உண்ட களைப்பு, உழைத்த களைப்பு நீங்க சற்று நேரம் கண் அயர்ந்து விட்டு வந்து ஏற்றத்தில் ஏறி பாட்டைத் தொடர்கிறார்
“மூங்கில் இலை மேலே தூங்கும் “
“பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே “ என்று பாடுகிறார்
கேட்டு மகிழ்ந்து வியந்த கவி
“ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்று சொல்கிறார்
காவியமான “மூங்கில் இலை மேலே-----“ என்ற வரிகளில் துவங்கி ஒரு அருமையான கவிதையை திரைப்படபாடலாகப் படைத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்
மரங்கள் காற்றில் ஒன்றோடொன்று உரசிக்கொள்வதை
“ தோளுடன் தோள் சேர்த்து நிதமும் சுகம் பெறும் ” என்று கற்பனை செய்ய அவரைத் தவிர யாரால் முடியும்?
எங்கள் பகுதியில் பேச்சுத் தமிழில் பயன்படும் “ நிதமும்” என்ற சொல்லைகையாண்டு, ஒரு பெண் பிரிவு ஏக்கத்தை
முழுமையாக வெளிப்படுத்தி “ பறவை எனும் தோழி அவனைப் பார்த்தால் வரச்சொல்லடி “ என்று தூது அனுப்புவதாய் கவிதையை நிறைவு செய்திருக்கிறார்
மேலை நாட்டுப் படங்களுக்கு இணையான காட்சி அமைப்பு-
கதிரவன் உதயம் , பனி மேகங்கள் கரைந்து ஓடுதல், நதியும் காடும் இணைந்த பின்னணி
அதிகம் அறியப்பட்டாத திவாகரின் இனிய இசை
(ஒல்லியான கே ஆர் விஜயா ஒரு நீளமான குச்சியை கையில் வைத்துக்கொண்டு கழைக்கூத்தாடுகிறார். )
எல்லாமே சிறப்பாக அமைந்த இந்தப்பாடலை ஒவ்வொரு சொல்லாக, வரி வரியாக பலமுறை கேட்டு, பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்
ஆனால் காட்டு ராணி படம் பார்க்கத் தோன்றியதில்லை
“(ஏற்றம் – ப)ல முறை விளக்கம் முன்பு சொல்லியிருக்கிறேன் எனவே இப்போது விளக்கவில்லை)
(எப்போதோ படித்து, கேள்விப்பட்டு மனதில் பதிந்ததை எழுதியிருக்கிறேன் -.இப்போது இணையத்தில் பல மாறு பட்ட வடிவங்களில் இது உலவுகிறது )
பாடல்- இணையத்தில், குழாயில் (யு ட்யூப்) எளிதில் காணலாம் , கேட்கலாம்
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ ஹசன் அலி(முதல் சரியான விடை )
கணேச சுப்பிரமணியன் , கரம் , ரவிராஜ்
நால்வரும் எங்கள் கனரா வங்கி ஓய்வூதியர்கள் என்பது சிறப்பு, மகிழ்ச்சி பெருமை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௨ ௦௨ ௨௦௨௨ புதன்
02022022
சர்புதீன்பீ
No comments:
Post a Comment