Tuesday, 4 October 2022

தமிழ் மொழி அறிவோம் வேப்பங்கனி 18 குற்றியலுகரம்- என் புரிதல்

 தமிழ் மொழி அறிவோம்


வேப்பங்கனி 18


குற்றியலுகரம்-

என் புரிதல் 


05102022 புதன்




ழ 

தமிழுக்கு உள்ள சிறப்புக்களில் ஒன்று என்பார்கள்


நான் அறிந்த இன்னும் ஒரு சிறப்பு:


காகம்

இதை வாய்விட்டு சொல்லிப் பாருங்கள்


காஹம்

Kaaham

என்று வரும்


K h g c என க வுக்கு பல எழுத்துக்கள் 


இந்தி .அரபு மொழியிலும் இப்படித்தான்


ஆனால் தமிழில் ஒரே க இடத்துக்கேற்றார் போல் பல ஒலிகளில் வரும் 


இது இயல்பாக நம் பேச்சு வழக்கில் வருவது


இதே போல் உச்சரிப்பில் வேறுபாடுதான் 

குற்றியலுகரம்


கு து சு டு து பு று


இந்த ஆறு எழுத்துக்களும் ஒரு சொல்லின் இறுதியில் வரும் போது உச்சரிப்பில் இயல்பாக வரும் ஒலி வேறுபாடு கு.லுகரம்


சில எடுத்துக்காட்டுகள்

ஃபார்முலா எனும் விதிகள்


இரண்டுக்கு மேல்  எழுத்துக்கள் இருக்கும் ஒரு சொல்

கு சு டு து பு று 


இந்த எழுத்துக்களில் முடிந்தால்

அது கு.லுகரம்


எ டு


பட்டு நுங்கு வெற்று வெறுப்பு 


இதே


படு வெறு என்ற இரண்டு எழுத்து உள்ள சொற்களில் வரும்போது


குற்றாதா குன்றாத    முற்றியலு கரமாக 

ஒலிக்கும்


சற்று சத்தமாக சொல்லிப் பாருங்கள்

வேறுபாடு தெரியும்


அடுத்த விதி


இரண்டு எழுத்துச் சொற்களில்

முதல் எழுத்து நீண்ட ஓசையுள்ள


நெடிலாக இருந்தால் மேலே சொன்ன ஆறு வல்லின. எழுத்துக்கள்(கசடதபற வல்லினமாம் காதல் மன்னன்

சொன்னது என்கிறார் நெ.ராஜா)

கு .லுகரமாகும்


எ டு

பாடு ஆறு  காசு காது


அதாவது

பட்டு

பாடு

இரண்டும்

கு.லுகரம்


படு என்பது மு.லுகரம்


சரிதானே!


கொசுறாக ஒரு செய்தி


"மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே


தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே


கவிச்சக்கரவர்த்தி கம்பன் வியந்து பாராட்டிய இந்த வரிகள்

இலக்கணம் இலக்கியம் படிக்காத ஒரு விவசாயியின் படைப்பு 


அன்றாடம் நாம் பேசும் பேச்சு

நடை உடை. நாகரிகம்

இவற்றை ஒப்பனை செய்து அழகூட்டி காட்டும் கண்ணாடி தான் இலக்கியம்


அந்த இலக்கியத்கில் இருந்து உண்டானது இலக்கணம்


இதைப் புரிந்து கொண்டால்

இலக்கணம் ஓரளவு எளிதாகப்

புரிந்தது போல் இருக்கும்

இலக்கியம் சுவைக்கும்


நிறைவாக

தமிழ் இலக்கணத்தின்

ஐம்பெரும் பிரிவுகள் எவை?


மிக எளிதான அடிப்படை வினா


இறைவன் நாடினால் 11102022

செவ்வாய் அன்று தமிழில் சிந்தித்து வேப்பங்கனியை சுவைப்போம் 


05102022 புதன்


சர்புதீன் பீ

No comments:

Post a Comment