Thursday, 27 October 2022

திருமறை குரான் 3: 121—129 உஹதுப்போர்

 திருமறை குரான்

28102022
3: 121—129 உஹதுப்போர்
“இறைவன் இப்படி ஒரு உதவியை உங்களுக்கு செய்வதெல்லாம் ஏக இறைக் கொள்கையை மறுப்பவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வி அடையச் செய்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதற்காகத்தான் “
இந்தக் கருத்துள்ள இறைவசனம் எங்கு வருகிறது ?
விடை
சுராஹ் 3: (ஆலு இம்ரான் ) 127
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா – முதல் சரியான விடை
ஹசன் அலி
விளக்கம்
உஹத் போர் நடந்த பின் இறங்கிய வசனங்கள்
3:121—129 .ல்
உஹதுப் போரின் நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சுருக்கமாக , சொல்லப்படுகின்றன
இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள
உஹதுப் போரின் பின்னணி பற்றிப் பார்ப்போம்
இதற்கு முன்னுரை போல் வசனம் 3:120
“நீங்கள் இறைனை நினைப்பதில் மன உறுதியோடு இருந்தால்
எதிரில்; உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்து விட முடியாது”
உஹத் போரில் முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட இந்த மன உறுதி குறைந்ததுதான் முக்கிய காரணம்
பதுருப் போரில் குறைஷிகள் சந்தித்த தோல்விக்கு பழி வாங்கும் நோக்கத்தில் 3000 ஆயுதம் தாங்கிய போர் வீரர்களுடன் மதீனாவை நோக்கிப் படை எடுத்து வருகிறார்கள்
சில தியாக உள்ளம் கொண்ட இளைஞர்களின் விருப்பப்படி மதினாவுக்கு வெளியே போய் எதிரிகளை சந்திக்க நபி ஸல் அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்
அதன்படி 1000 வீரர்களுடன் நபி ஸல் அவர்கள் அணி வகுத்துச் செல்கிறார்கள்
அதில் 300 பேர் ஒரு கூட்டமாக 'Abd Allah b. Ubayy தலைமையில் படையை விட்டு போர் துவங்கு முன் விலகி விடுகிறார்கள்
இதனால் ஏற்பட்ட குழப்பம், பீதியில் இன்னும் சில குழுவினர் விலக எண்ண, நபி ஸல் அவர்களின் முயற்சியால் அவர்கள் விலகுவது தடுக்கப் பட்டது
மீதமுள்ள 700 வீரர்களுடன் உஹது மலை அடிவாரத்தில் நபி அவர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்
அவர்களுக்கு முன்னால் எதிரிப்படை.
பின்னால் அரண் போல் உஹது மலை
மலையில் ஒரே ஒரு கணவாய் – அதன் வழியாக மட்டுமே எதிரிகள் இஸ்லாமிய வீரர்கள் மேல் திடீர்த் தாக்குதல் நடத்த முடியும்
அதைக் காக்க 'Abd Allah b. Jubayr,தலைமையில்
50 வில் வீரர்கள் நிறுத்தப்பட்டார்கள் .
“எது நடந்தாலும் , என்ன ஆனாலும் அவர்கள் அந்த இடத்தை விட்டு அசையக் கூடாது “ என்று நபி அவர்கள் அந்த 50 பேருக்கும் மிகக் கண்டிப்பாகக் கட்டளை இட்டார்கள்
துவக்கத்தில் போர் இஸ்லாமியர்களுக்கு வெற்றி போல் இருந்தது
ஆனால் தொடர்ந்து போர் செய்து முழு வெற்றியை அடையாமல் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை சேகரிப்பதில் இஸ்ளாமியர்கள் ஈடு பட்டார்கள்
குறைஷிப்படை பின் வாங்கி ஓடுவதையும் ,இஸ்லாமிய வீரர்கள் பொருட்களை சேகரிப்பதையும்
கண்ட கணவாய் காவலர்கள் நபி பெருமான் கட்டளையை மறந்து
தங்கள் பங்குக்கு போர்ப் பொருட்களை சேகரிக்க ஓடினார்கள்
கணவாய் காவலின்றி இருப்பதை அறிந்த குறைஷிகள் குதிரைப் படையினர் மலையைச் சுற்றி வந்து கணவாய் வழியாக வந்து இஸ்லாமிய வீரர்களைத் தாக்கினர்
இதைப்பார்த்து
பின் வாங்கி போய்க் கொண்டிருந்த மற்ற குறைஷி வீரர்களும் திரும்பி வந்து இஸ்லாமியப் படையத் தாக்க
இந்த திடீர் இரு முனைத் தாக்குதலில் இஸ்லாமிய வீரர்கள் நிலை குலைந்து போனார்கள்
இந்த நிலையில் நபி அவர்கள் உயிர் நீத்தார்கள் என்ற வதந்தி பரவ
இஸ்லாமியர்களிடையே இருந்த வீரமும் போர் அறிவும் முழுமையாக மறைந்து போனது
தோல்வி உறுதியான நிலையில் நபி ஸல் அவர்களுக்கு காயம்தான் என்ற செய்தி பெரு நிம்மதியைக் கொடுக்க மிச்சமிருந்த தோழர்கள் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்
இந்த நிலையில் ஒரு இறை அற்புதம்
குறைஷிகளின் வெற்றி நிச்சயம் செயப்பட்ட நிலையில் அவர்கள் இன்னும் சற்று முன்னேறி தாக்கி இருந்தால் ஏற்க னவே நலிந்து மெலிந்த நிலையில் இருந்த இஸ்லாமியப் படையைமிக எளிதாக முழுமையாக வென்று இருக்கலாம்
அவர்கள் ஏன் அப்படிச்செய்யவில்லை என்பதற்கு இறைவன் நாட்டம் என்பதே விடையாக இருக்கிறது
இந்த மாபெரும் உதவிதான் வசனத்தில் இறைவனால் சுட்டிக் காட்டப் படுகிறது
பதிவு சற்று நீளமாகிவிட்டது
இருந்தாலும் நிறைவு செய்ய வசனம் 3:121-129 தின் கருதுக்களை சுருக்கமாகப் பார்ப்போம்
“ இறைவன் எல்லாவற்றையும் கேட்பனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்
இதற்கு முன் பத்ருப் போரில் இறைவன் செய்த உதவியை நினவில் வைத்து , நம்பிக்கை கொண்டோர் இறைவனையே சார்ந்து இருக்க வேண்டும்
நீங்கள் நம்பிக்கையுடன் இறைவனுக்கு அஞ்சி நடந்தால் அவன் உங்களுக்கு உதவுவது உறுதி
வெற்றி என்பது இறைவனிடமிருந்தே வருகிறது
வானங்கள் ,பூமியுள் உள்ள அனைத்தும் இறைவனுக்கெ உரியதாகும் “
இறைவனை முழுமையாக நம்பினால் அவன் உதவி செய்வது உறுதி
என்ற கருத்து மிகத் தெளிவாக்கப்படுகிறது
இந்த நம்பிக்கையோடு எல்லாத் துறைகளிலும் வெற்றி அடைய முயற்சிப்போம்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
-
02 ரபிஉல் ஆஹிர் (4)1444
28102022 வெள்ளி
சர்புதீன் பீ
May be an image of mountain
Like
Comment
Share

No comments:

Post a Comment