தமிழ் மொழிஅறிவோம்
வேப்பங்கனி 20
இலக்கணம்,--
பொருள் இலக்கணம்
12102022 புதன்
-
நேற்றைய
பதிவில்
எழுத்து,
சொல்,
பொருள்,
யாப்பு,
அணி என ஐம்பெரும் பிரிவுகள் கொண்டது
தமிழ் இலக்கணம்
என்று பார்த்தோம்
அதன் பின்
கடந்த 18 பதிவுகளில் பார்த்ததை சற்று நினவு படுத்திக் கொண்டோம்
நிறைவாக
இலக்கணம் - 5 பிரிவுகள்
இவற்றில் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பிரிவு எது?
என்று கேட்டிருந்தேன்
விடை
பொருள் இலக்கணம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக். முதல் சரியான விடை
சிராஜுதீன்
தல்லத்
விளக்கம்
பொருள் இலக்கணம்
அகப்பொருள்
புறப்பொருள்
எனஇரண்டு வகைப்படும்
எளிதாகப் புரிந்து கொள்ள
காதல்
வீரம்
என்று சொல்லலாம்
காதல் = அகப்பொருள்
வீரம்=புறப்பொருள்
வீரம் என்பது
போர், , இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது
காதல்.வீரம்
பெரிய விளக்கம் தேவை இல்லை
அக நானூறு போன்ற
சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய திரைப் படங்கள்
வரை பரவலாகப் பின்னிப்பிணைந்து இருப்பது காதல்
காதல் காதல்
அதுபோல வீரமும் புறநானூறு முதல். பாகுபலி.பொன்னியின் செல்வன் வரை வீரம் தமிழர் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கிறதுஷ
்
அகப்பொருள் இலக்கியம் பெரும்பாலும் தலைவன்
தலைவி தூது செல்ல ஒரு தோழி
இவர்கள் பேசிக்கொள்ளும் ஒரு நாடகம் போல் இருக்கும்
அவர்கள் பெயர் குறிப்பிடப்படாது
புறப்பொருள் இலக்கியம்
போர் வீரம் கொடை பற்றி விரிவாகப் பேசும்
மன்னன் மற்றவர்கள் பெயர் சிலவற்றில் சொல்லப்படும்
அகப்பொருள் புறப்பொருள் இரண்டிலும் பல பிரிவுகள் இருக்கின்றன
தேவைப்பட்டால் இணையத்தில் பாருங்கள்
அதில் விளக்கம் தேவைப்பட்டால் சொல்லுங்கள்
தெரிந்த அளவுக்கு சொல்ல முயற்சிக்கிறேன்
இன்றைய வினா
"புணரியல்"
எதைக் குறிக்கிறது?
இறைவன் நாடினால்
விடை விளக்கத்துடன் 18102022 செவ்வாய் அன்று தமிழில் சிந்தித்து வேப்பங்கனியை சுவைப்போம்
12102022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment