திருமறை குரான்
3:117
21102022
என்று வரும் திருமறை வசனம் எது ?
விடை
சுராஹ் ஆலு இம்ரான் (3) வசனம் 117
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் –முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
சிராஜுதீன்
விளக்கம்
வேதம் அருளப்பட்டும் அதை மறுத்து ஒதுக்கும் போக்கு கொண்டோர் பற்றி இறைவன் சொல்கிறான்
‘இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவிடுவதற்கு உவமை கடும் குளிர் காற்றாகும்
அது த்மதுக்குத் தாமே தீங்கு செய்து கொண்டோரின் விளை நிலத்தை தாக்கி விளைச்சலை சேதப் படுத்துகிறது
இறைவன் அவர்களுக்கு தீங்கு செய்யவில்லை
உண்மையில் அவர்கள் தமக்குத் தாமே தீங்கு செய்து கொண்டார்கள் “ 3:117
இங்கு விளைநிலம் என்பது இவ்வுலக வாழ்வைக் குறிக்கிறது
விளைச்சல் – மறுமை வாழ்வின் பயன்கள்
காற்று --வெளித்தோற்றத்துக்காக அவர்கள் செய்யும் தருமங்கள்
குளிர் ---அவர்கள் செயல்களில் உண்மை இல்லை என்பதைக் காண்பிக்கிறது
பொதுவாக காற்று விளையும் பயிருக்கு பயன் தருவது
அதே காற்று குளிர் காற்றாய் வரும்போது விளைச்சலை அழித்து விடுகிறது
இந்த எளிய உவமையின் வழியே, எண்ணத்தில் உண்மை இல்லாதோரின் தருமம் பயன் அற்றது என்று இறைவன் தெளிவு படுத்துகிறான்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
24 ரபி உல் அவ்வல் (3) 1444
21102022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment