ஆயிரம் மலர்களே
15102022 சனிக்கிழமை
ஆயிரம் மலர்கள் இருந்தாலும்
ரோஜாப்பூ தான் என் மனதில் உடனே தோன்றுவது பூ என்றாலே
இளஞ்சிவப்பு நிறம்
மெல்லிய பூங்காற்று போல் மனதை வருடும் நிலைத்து நிற்கும் மென்மையான மணம்
சிவப்பு மஞ்சள் வெள்ளை என பல நிறங்கள்!
ஆனால் எனககுப் பிடித்தது பழைய நாட்டு ரோஜாதான்
ரோஜா என்றால் ரோஜாவின் ராஜாவை நினைக்காமல் இருக்க முடியாது
கனவாகிப் போன பலவற்றில் நல்ல . அழகான தலைவர்களும் சேரந்தது.......
என்ன சொல்வது
மல்லிகை முல்லை
மனதை மயக்கும் நறுமணம்
பூத்துக் குலுங்கும் முல்லைக்கொடி
மல்லிகைச்செடி
கொள்ளை அழகு
நெருங்கினால் மூச்சில் கலந்து உடல் உள்ளத்தில் சிலிர்ப்பூட்டும் வாசம்
வாசமில்லா மலர் தான்
ஆனால் பல பளிச்சிடும் நிறங்களில் அழகூட்டும் காகிதப் பூ
பூத்துக் குலுங்கும் போது தெருவையே அழகு படுத்தும்
மேப்பூக்கள்
கிறங்க வைக்கும் மணம்
மனோரஞ்சிதம்
பூவின் அமைப்பும் மிக அழகு
வெள்ளையாக மலர்ந்து மஞ்சளாக மாறும் மெல்லிய நறுமணம் கொண்ட பாரிஜாதம்
பளீர் சிவப்பு நிறத்தில் காலையில் மலர்ந்து மாலையில் மூடிக்கொள்ளும் செம்பருத்தி
மிக சிறப்பான பூ அமைப்பு
நல்ல குங்கும நிறத்தில் மாலையில் மலரும் அந்தி மந்தாரை சிறிய அழகிய பூ
வேப்பம் பூ. முருங்கைப்பூ எல்லாமே அழகுதான்
வாழைப்பூ தனி அழகு
அலங்கார மலர் பவ்டர் பப் powder puff
இட்லிப்பூ
இதுவும் அலங்காரப் பூ தான்
இப்போது அது மூலிகையாக அறியப்படுகிறது
இதுவரை சொன்ன மலர்கள் எல்லாம்
எங்கள் வீட்டுத் தோட்டத்து மண்ணில் முளைத்து வளருபவை
தேடிப்பிடித்து வாங்கி
வைத்து வளர்த்தவரைத்தான் தேடினாலும் காணோம்
நினைவு வெள்ளத்தை மடை மாற்ற
கொஞ்சம் இலக்கியத்தில்
நுழைவோம்
நிலவு பற்றி பாடிய அளவுக்கு மலர்கள் பற்றியும் கவிதை பாடல்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன
சில திரைப்பாடல்கள் :
என்றும் அழியாத காவியங்கள்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என குழந்தைக்குத் தாலாட்டு
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
உடன் பிறப்புக்கு சீராடடு
இன்னும் சில
மலரும் கொடியும் பெண் என்பார்
தன் இயலாமையை .குறையை எவ்வளவு அழகாக மலரும் கொடியும் நடப்பதில்லை என்று வெளிப்படுத்துகிறார்!
மலர்கள் நனைந்தன பனியாலே
....
அகப்பொருளை
இரவின் இனிமையை
கன்னத்தைப் பார்த்தேன் என்று மென்மையாகச் சொல்கிறார்
பூப்போல பூப்போல பிறக்கும்
.....தாய்மையின் கனவு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே,
செந்தூரப்பூவே
.. கன்னிப் பருவ மனதுக்குள் ஓடும் இனிமையான கனவின் வெளிப்பாடு
மலரே குறிஞ்சி மலரே
..... தலைவி தன்னையே அரிய மலராய் தலைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்
.
தலையைக் குனியும் தாமரையே
..மீண்டும் அகப்பொருளின் மென்மை
நிலவும் மலரும் பாடுது
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இந்தப்பாடலை கேளுங்கள்
காக்ஷ்மீரின் இயற்கை எழிலில்
நிலவும் மலரும் பாடும் இனிமை செவி வழி எண்ணத்தில் பாயும்
அதற்குத் துணையாக
'மாலையில் வரும் மன்னனுக்காக
ஏரியில் நீராடும் காஷ்மீர் ரோஜா"
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா!
பெண்ணின் அழகை வர்ணிக்கத் துவங்கினால்
கவிஞரின் கற்பனைக்கு எல்லை ஏது!
பூவே பூச்சூடவா!
மாம்பூவே சிறு மைனாவே
அந்தி மந்தாரை பூப்போலே
அழகிய குங்குமம் நெற்றியிலே
பூப்போல் மலர மொட்டு வைத்தான்
பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உடன்பிறப்புக்கு
தங்கையின் பாராட்டு
"கோவில் விளக்கொன்று கூடப்பிறப்பென்று பாடும்"
இலக்கியம் எனும் கடலில் இறங்கி விட்டால் மீண்டு வருவது சிரமம்
எனவே திருக்குறளை மட்டும் தொடுகிறேன்
திருக் குறளில் இடம் பெற்றவை
குவளை,
அனிச்ச மலர்கள் மட்டுமே
குவளை பெண்ணின் அழகை வர்ணிக்க
அனிச்சம் விருந்தினரின் மென்மையை எடுத்துக் காட்ட
ஒரு மாறுதலாக இன்று சனிக்கிழமையும் ஒரு வினா
படத்தில் உள்ளது என்ன மலர்?
விடை விரைவில்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
15102022சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment