கிறுக்கல்கள்
08102022 சனிக்கிழமை
To be or not to be
That is
not the question
அதையும் மீறி
இருக்கிறேனா இல்லையா
என்று ஒரு வினா.ஐயம்
பொதுவாக குழுக்கள் எனக்கு ஒத்து வராது
முகநூல் கட்செவி எதுவாக இருந்தாலும் குழுவில் சேருவதோ பதிவு செய்வதோ கிடையாது
இப்படித்தான் ஒரு முகநூல் குழுவில் சில காலம் அமைதி உறுப்பினராக இருந்தேன்
அதில் வரும் சில தரமான பதிவுகளைப் பார்த்து நானும் பதிவுகளை அனுப்பத் துவங்கினேன்
அது ஒரு தனிப்பட்ட குழு (private group)
நிர்வாகி அனுமதிக்கும் பதிவுகள் மட்டுமே வெளியிடப்படும்
நான் அனுப்பிய பதிவுகள்--
தமிழ் ஆங்கிலம் குரான் மருத்துவம்--
புதிய பதிவுகள்
பழைய பதிவுளின் நினைவுப் பகிர்தல்கள்--
எல்லாம் வெளியிடப்பட்டன
ஓரளவு விருப்புகளும் பாராட்டுகளும் வந்தன
26092077 அன்று முகநூலில் வெளியான
உப்பும் சால்ட்டும்
என்ற என் பதிவின் நினைவுப் பகிர்வு இந்த 26 09 அன்று வந்ததை குழுவுக்கு அனுப்ப அன்றுதான் துவக்கம் தடை .விலக்கல்
வழக்கமாக முக நூல் சொல்லும்
Community standard
மீறப்பட்டது என்ற காரணம்
அந்தப் பதிவு முழுக்க முழுக்க தமிழ் மொழி எப்படி எழுத்திலும் பேச்சிலும் சிதைக்கப் படுகிறது என்பது பற்றித்தான்
அதில் எங்கு எப்படி விதி மீறல் என்று புரியவில்லை
இதன் தொடர்ச்சியாக நான் அதன்பின் அனுப்பிய எந்தப் பதிவும் குழுவில் வெளிவரவில்லை
ஆனால் ஒரு சில பதிவுகள் நீக்கப்பட்டதாக மட்டும் செய்தி வந்தது
போடாத பதிவை எப்படி நீக்க முடியும்?
இதுதான் என் குழப்பத்துக்கு காரணம்
குழுவில் இருக்கிறேனா இல்லையா என்ற தெளிவில்லை
இவ்வளவு விரிவாக இதை எழுதக் காரணம்
Community standard
என்பது முகநூல் பதிவுகளை தடை செய்யவும் நீக்கவும் பயன்படுத்தும் காரணம்
இதனால் பாதிப்பு பலருக்கு
நீதி மன்றத் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய முடியும்
ஆனால் முகநூல் தீர்ப்பு சொன்னால் சொன்னதுதான்
ஒன்னரை பக்க நாளேடு
என்பது நான் சொன்ன முகநூல் குழு
இந்தப் பதிவின் விளைவு என்ன என்று எனக்கு தெரியாது
அந்தக் குழுவை விட்டு---
ஏன் முகநூலை விட்டே நிரந்தர நீக்கம் செய்யப் படலாம்
இறைவன் நாடினால் நாளை
சிந்திப்போம்
08102022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment