Tuesday, 18 October 2022

தமிழ் மொழிஅறிவோம் வேப்பங்கனி 21 சந்தி இலக்கணம்

 தமிழ் மொழிஅறிவோம்

வேப்பங்கனி 21
சந்தி இலக்கணம்
12102022 புதன்
சென்ற பதிவில்
பொருள் இலக்கணம் பற்றிப் பார்த்தோம்
-
நிறைவு வினா
"புணரியல்"
எதைக் குறிக்கிறது?
விடை விளக்கம் மிகச் சுருக்கமாக
தமிழ் இலக்கணம் 5 பெரும் பிரிவுகள் கொண்டது என்று பார்த்தோம்
அதில் முதலாவது எழுத்து இலக்கணம்
இந்த எழுத்து இலக்கணத்தின் மிகப்பெரியதும் முக்கியமானதும்
சந்தி இலக்கணம் ஆகும்
சநதி இலக்கணத்தின் இன்னொரு பெயர்
புணரியல் , புணர்ச்சி இலக்கணம்
சந்தி – வடமொழி
புணர்ச்சி - தமிழ்
முன்பே சொன்னது போல் சந்தி இலக்கணம் பற்றி தொல்காப்பியம் போன்ற நூல்களில் மிக விரிவாக எடுத்துச் சொல்லப்படுகிறது
மேலும் சந்தி இலக்கணத்தின் அடிப்படையான எழுத்து இலக்கணமும் மிக மிக விரிவாகப் பேசப்படுகிறது
அவற்றையெல்லாம் பின்பொரு நாள் தேவைபட்டால் , இறைவன் நாடினால் பார்ப்போம்
சுருக்கமாக
இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் பற்றியது சந்தி இலக்கணம்
அது நான்கு அடிப்படை வகைகள் கொண்டது
ஏடுதுக்காட்டுகளோடு அவற்றைப் பார்ப்போம்
கதவு + மூடியது = கதவு மூடியது
இப்படி எந்த மாற்றமும் இல்லாமல் இரு சொற்கள் இணைவது
ஒரு வகை (இயல்பு)
மாலை+ பொழுது = மாலைப்பொழுது
ஒரு மெய்யெழுத்து தோன்றியது (தோன்றுதல்)
மரம் +நிழல் = மர நிழல்
ஒரு எழுத்து கெட்டது (மறைந்தது) (கெடல் )
கல்+சிலை =கற்சிலை
ல், ற் ஆக மாறியது (திரிந்தது) (திரிதல் )
இப்படி
.
இயல்பு, தோன்றுதல் ,கெடல் திரிதல் என நான்கு வகைகள்
சந்தி இலக்கணத்தில் இருக்கின்றன
இன்னும் நிறைய வகைகள் இருக்கின்றன
மேலும் சந்திப்பிழைகள் –
இப்போது மிகப் பரவலாக பேச்சிலும் எழுத்திலும் வருவது ‘
நாம் எழுதுவது சரியா இல்லை தவறா என நினைக்க வைக்கும் அளவுக்கு சந்திப்பிழைகள் மலிந்து விட்டன
இவை பற்றி பின்பு ஒரு நாள் இறைவன் நாடினால் பார்ப்போம்
இன்றைய எளிய வினா
“கட்டுதல் “
என்ற பொருளில் வரும் இலக்கணப் பிரிவு எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை தமிழில் சிந்தித்து வேப்பங்கணியை சுவைப்போம்
பி கு
சில காரணங்களால் இன்றயை பதிவு மிகவும் தாமதமாக வருகிறது
அதே காரணங்களால் சென்ற பதிவுக்கு சரியான விடை அனுப்பியவர்கள் பெயரை வெளியிட முடியவில்லை
Sorry
சரியான விடை அனுப்பிய அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
௧௮௧௦௨௦௨௨
18102022 செவ்வாய்
May be an image of text
4 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment