Tuesday, 25 October 2022

தமிழ் (மொழி) அறிவோம் தையல் இலை

 தமிழ் (மொழி) அறிவோம்

தையல் இலை

26102022 புதன்
படத்தில் இருப்பது என்ன?
எதிர் பார்த்ததை விட அதிகமாக
பல்வேறு விடைகளை 20க்கு மேற்பட்டவர்கள் அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி
மேலும் இதுவரை பங்கேற்காத பல புது முகங்கள் வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி
வந்த விடைகளில்
தையல் இலை
மந்தார(ரை) இலை
இரண்டையும் சரியான விடையாக எடுத்துக்கொண்டேன்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
ஜெயராமக்கிருஷ்ணன், சிராஜூதீன் ,ஹிதயத்
ஹசன் அலி, சுராஜ், அஷ்ரப் ஹமீதா
ஷர்மதா, பாப்டி, ராஜேந்திரன்
பங்காரு, முகமது ரைபுதீன் , இளங்கோவன் நரசிம்மா
ஆ ரா விஸ்வநாதன், பீர் ராஜா, ஸ்ரீதரன் ரங்கநாத்ன்
ஹபீபூர் ரஹ்மான், வேதாந்தம் கோபாலன்
விடை அளித்த பலருக்கும் இளமை நினைவுகள் திரும்பியது இன்னொரு சிறப்பு
வந்த வேறு விடைகள்
தாமரை இலை,வாதா இலை.தென்னை ஓலை, பூவரசஇலை ஆல், குங்கிலியம் பனை ஓலை , புரா இலை, தேக்கு இலை,
பட்டை தொன்னை
பங்கேற்ற சகோ
கணேச சுப்ரமணியன் ,ராஜாத்தி, ஸ்ரீநிவாசன் ,
சர்மா, யோக நாயக்
அனைவருக்கும் நன்றி
விளக்கம்
இந்த இலைகளை நான் அதிகமாகப் பார்த்தது வேலூர்,, வாணியம்பாடி பகுதிகளில்
உணவு விடுதிகளிலும் , சிற்றுண்டிக் கடைகளிலும் உணவு பரிமாறவும் பொட்டலம் படவும் பயன் பட்டது
மந்தாரை இலையை பக்குவப்படுதத் காய வைத்து மூன்றாகப் பிளக்கப்ட்ட ஈர்குச்சியை வைத்துத் தைப்பார்கலாம்
தென்னை, பனை ஓலைகளின் நடுவே இருக்கும் மெல்லிய நரம்பு போன்ற குச்சிதான் ஈர்க்குச்சி
இதைக் கொண்டுதான் வீடு கூட்டும் விளக்குமாறு செய்கிறார்கள்
இவ்வளவு மெல்லிய குச்சியை எப்படி மூன்றாகப பிளக்க்கிறார்கள் என்று தெரியவில்லை
மந்தார இலைக்கு ஒரு தனிப்பட்ட மெல்லிய மணம் உண்டு
மருத்தவ குணங்களும் உண்டு என்கிறார்கள்
சுற்றுச் சூழலுக்குத் தீங்கு செய்யாது
இந்த இலையை கிண்ணம் போல் ஆக்கினால் அது
தொன்னை
ஆலயங்களில் சுண்டல் கொடுக்க தொன்னை பயன்படும்
மந்தாரை இலை, பூ எல்லாம் பல மருத்துவ குணங்கள் கொண்டவை என்கிறார்கள்
படத்தில் உள்ளது காயாத மந்தார இலை
பங்கெடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௨௬௧௦௨௦௨௨
26102022 புதன் வ்
சர்புதீன் பீ
May be an image of outdoors and text
Like
Comment
Share

No comments:

Post a Comment