கிறுக்கல்கள்
29102022
மாலையும் இரவும் சங்கமிக்கும் அந்திப் பொழுது
வானத்தில் வண்ணக் கோலங்கள்
மின்கம்பியில் ஒற்றையாக
இரட்டை வால் குருவி
நிலைகொள்ளாமல் தவிக்கிறது
சில நொடிகளுக்கு ஒருமுறை பறந்து போகிறது திரும்பி வருகிறது
துணையை எதிர்நோக்கி காத்திருக்கும் பரபர(ற)ப்பு
கந்தசஷ்டி கவசம் காற்றில் கலந்து வருகிறது
தொலைவில் ஒரு சிறிய மின்னல் கீற்றின் ஒளி
இடியின் ஒலி
ஐப்பசியை நினைவூட்டுகிறது
வெறிச்சோடி கிடக்கும் சாலை
ஒரு ஸ்கூட்டர் மட்டும் மெதுவாகப் போகிறது
இருள் கவ்வும் வேளையில் பாங்கின் ஓசை
தொழுகப் போகிறேன்
29102022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment