திருமறை குர்ஆன்
3:7
முக்கம் ,"
14102022வெள்ளி
"முக்கம் ,"
"முதஷாபிஹாத் ™
திருமறையில்
இடம் சுட்டிப் பொருள் விளக்குங்கள்
விடை விளக்கம்
சூரா 3ஆலு இம்ரான் வசனம் 7
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான்.
இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.
மற்றவை ( மறைவான பொருள்கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்;
எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்.
கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று கூறுவார்கள்.
அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லறிவா பெறமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 3:7 )
விளக்கமான.தெளிவான=
مُّحْكَمٰتٌ
மறைவான பொருள் கொண்ட=
مُتَشٰبِهٰتٌؕ
முதஷாபிஹத் தான வசனங்களின் முடிவான அர்த்தத்தை இறைவன் மட்டுமே அறிவான்.
எடுத்துக்காட்டாக
மறுமை நிகழ்வு, தஜ்ஜாலின் வருகை, மறுமையின் அடையாளமான தாப்பதுல் அர்ழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சில அறிஞர்கள் சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் ‘அலிப் லாம் மீம்’… போன்ற எழுத்துக்களை அல்லாஹ் மட்டும் அறிந்த முதஷாபிஹத்தான வசனங்களாகக் குறிப்பிடுவர்
குரான் வசனம் 3:7தெளிவான இருக்கிறது
எனவே மேற்கொண்டு விளக்கம் தேவை இல்லை
சரியான விடை அனுப்பிய
சகோ
சிராஜுதீன். -முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
ஷர்மதா
அனைவருக்கும்
வாழ்த்துகள்
பாராட்டுகள்எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிய
சகோ நௌசாதுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
.
17ரபிஉல்அவ்வல் (3)1444
14102022வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment