நாணம் தவறாத பெண்ணோவியம் ௦3012024
கவிதை பூங்காவில்
கவிச்சக்ரவர்த்திகம்பனின்கவிதைப்பொங்கல்
பொருந்திய மகளிரோடு வதுவையில்பொருந்துவாரும்.
பருந்தொடுன்நிழல் சென்றன்னஇயல் இசைப்
பயன் துய்ப்பாரும்.
மருந்தினும்இனிய கேள்வி
செவி உறமாந்துவாரும்.
விருந்தினர்முகம் கண்டு. அன்ன
விழா அணிவிரும்புவாரும்.
பொருள் ,விளக்கம
விருந்தினர் எங்கே எங்கே என்று எதிர்நோக்கி அவர்கள் முகங்கள் கண்டதும் அன்னவிழாவாகக்கொண்டாடுவார்கள் .
மேலும்
“தைப்பிறந்தது வழி பிறந்தது” என திருமணங்கள் நடைபெறும். ”பொருந்திய மகளிரோடு
வதுவையில் பொருந்துவர்”
இயலும் இசையும் சேர்ந்து ஆங்காங்கு நடக்கும் காலச்சேபங்களைக்கேட்டு அதன் பயனையும் அடைவார்கள்
“பருந்தொடு நிழல்
சென்றன்ன இயலிசைப்பயன் துய்ப்பாரும் “
தெருவெல்லாம் தமிழ் முழங்கும் .ஆங்காங்கே அறிஞர்கள் தித்திக்கும் செந்தமிழில் சொல் மாரி பொழிவார்கள் .அதைக்கண் மூடி வாய் திறந்து கேட்டு நிற்பர் .”மருந்தினும் இனிய கேள்வி செவியிடை மாந்துவர்
(கம்பன் விரிவாக
சொன்ன பல வரிகளில் ஒரு சில மட்டும்)
அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள்
புத்தாண்டு
வாழ்த்துககள்
No comments:
Post a Comment