தமிழ் (மொழி )அறிவோம்
“மன்னவனும் நீயோ{ –கம்பர்
21 01 2024 ஞாயிறு
விடை
குலோத்துங்கச் சோழனுக்கும்
கம்பருக்கும் மனக்கசப்பு உண்டானது
தன்னை மதிக்காத சோழன் மீது
மனம் வெறுத்து கம்பர்
“மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதுவோ?
உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
காதம் இருபத்து நான்கொழியக் காசினியை
ஒதக் கடல்கொண் டொளித்ததோ - மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா!நீ முனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம்?”
இவ்வாறு கூறிவிட்டுச் சோழனின் விடையையோ, மறுமொழியையோ கூட எதிர்பார்க்காமல் விடுவிடென்று மேலாடையை உதறிக் கொண்டு அவையிலிருந்து நடந்து வெளியேறினார் கம்பர். ‘உலகம் பரந்தது!’ என்று அவர் கூறிவிட்டுச் சென்ற அந்த வார்த்தை கணீரென்று வெகு நேரம் வரை அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது
எளிய நடையில்அமைந்த பாடல்
விளக்கம் தேவை இல்லை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா லெப்பை – முதல் சரியான விடை
&
ஹசன் அலி
இருவர்தான்
நிறைய எதிர் பார்த்தேன்
ஆர்வத்துடன் முயற்சித்த சகோ நஸ் ரீனுக்கு நன்றி
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சந்திபபோம்
-
௨௧௦௧௨௦௨௪
21012024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment