Tuesday, 30 January 2024

சொந்த ஊர் 11 சகோ ஜோதியின் பார்வையில் 31 01 2024 புதன்

 





சொந்த ஊர் 11

சகோ ஜோதியின் பார்வையில்
31 01 2024 புதன்
சகோ ஜோதியின் பார்வை :
நம் சொந்த ஊர்திருப்பத்தூர் பற்றி செய்திகளைநினைவுகூறும்போது,நம் நெருங்கிய சொத்தங்களானஅம்மக்களின்வாழ்வியல் முறைதான்எனக்கு பெரும் ஆச்சர்யமளிக்கும்.
ஒரு சில குடும்பங்கள்தவிர அவ்வூரமக்கள் வசதி படைத்தவர்கள் என்றெல்லாம்சொல்லமுடியாதுநான் குறிப்பிடுவதுசிறுவயதில் நான்அங்கு பார்த்ததுஉணர்ந்ததுதான்.
இப்போது, படிப்பு, வெளிநாடு, உள்நாடுகளில் பெரும் உத்யோகம்,வாழ்க்கை வசதிகள்என்று வாழ்க்கைத்தரத்தில் பெரிதுமமாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
நக்கல், நையாண்டிபொருத்தமான பட்டப்பெயர் சூட்டுவது எனஇயல்பிலேயேகவித்துவமாகஅவர்கள் பேச்சு,நடவடிக்கை இருக்கும்.
குளிக்க, துணிதுவைக்க, பைப்,மோட்டார் என்றவசதிகளெல்லாம்கிடையாது.
அரையனா செலவில் வெள்ளை நிறத்தில்இருக்கும் சவுக்காரக்கட்டியில் மூட்டை துணி துவைத்துகுளியல் வேலையையும்முடித்துவிடுவார்கள்,
இன்று டவுன்களில்சிறிய பரப்புநீர் தொட்டியில் மணிக்கு இவ்வளவு என்றுபெரும் செலவு செய்து, சிறியவர். பெரியவர்களுக்குகற்பிக்கப்படும் நீச்சல்கலை, அவ்வூர்சீதேவியில் சர்வசாதாரணமாகஅவ்வூர் மக்களில்பெரும்பாலோர்க்குதெரிந்திருக்கும்..
சிறுவர்கள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல்ஒரு கரையிலிருந்துமறுகரைக்கு நீந்திச் சென்று, தன் கரைக்கு திரும்பி விடுவார்கள்
ரசித்து, ருசித்துசாப்பிடுவதில்அவ்வூர் மக்களுக்குஇணையாக யாரையும் சொல்லிவிட முடியாது
ருசியான சாப்பாடு என்றால் கறி, மீன்என்ற உயர்தரசாப்பாடு மட்டுமல்ல.
கிண்ணம் நிறையபழைய கஞ்சியைவைத்துக்கொண்டுதயிர், மோர்சமாச்சாரமெல்லாம் இல்லாமல் ஒரு அடை மாங்காய்துண்டு, ஒரு சுட்டகருவாடு, சிறு துண்டுதேங்காய் சில்லுவைத்து, லாவகமாகசாப்பிடுவார்கள்.
நம் பெரியம்மாபச்சைப்பயறு (பாசிப்பயிறு) வறுத்துகுழம்பு வைத்துசுண்டவைத்துக்கொடுக்கும்
."அடுப்பெரிக்க முள்ளும், ஆக்கிதிங்ககீரையும் இருந்தால்போதும் என்பதுஅவ்வூரில் வழங்கப்படும் இயல்பானவார்த்தை வழக்கு.
அதற்காக கீரை ருசிஒன்றும் குறைவாகஇருக்காது,
அரிசி கழுவியகழனித் தண்ணியில்வெறும் உப்பு, வரமிளகாய் போட்டுவெந்தகீரை, தாளிப்புசமாச்சாரமெல்லாம் இல்லாவிட்டாலும்அவ்வளவு ருசியாக இருக்கும்.
அசைவம் வாங்கவசதியில்லாவிட்டாலும், தலைக்கறி தூள எலும்பு\\ம்புக்கறி தூள் என்று ஏதாவது வாசத்திற்கு போட்டுஅமிர்த்மாகமைத்துவிடுவார்கள்
ஈகோ, பார்க்காமல் மற்றவர் வீடுகளில்குழம்ப வெஞ்சனம்என்றுகேட்டுவாங்குவதும் ரசனையான விஷயம்தான்.
சீதளிகரையோரம்அமைந்த, கட்டிடம், நம் பெரியத்தா வீடுநம் வீடு, மாமா,கும்பி வீடுஎல்லாம் நினைவு விட்டு மாறாதவை
.எஸ்.ஐ. மன்சில் எனும்கட்டிடம் தவிர மற்றவீடுகள் சிதிலமடைந்துவிட்டன என்றுநினைக்கிறேன்.
எஸ்.ஐ. மன்சில்ஒரு பிரமிப்புக்குரியகட்டிடம்தான்.சுமார் எழுபதுஆண்டுகள் முடிந்தும் கட்டிடத்தின் இயல்புமாறாமல் / விரிசல்விடாமல் அதே பிரிமாண்டத்துடன்இருப்பது பெரும்ஆச்சர்யம்தான்
.எம்.பி.ஏ. என்றபெரிய படிப்பெல்லாம்இல்லாமல் வெறும்ஆரம்பக் கல்லி படித்தஅந்த இனா என்றழைக்கப்படும்,எஸ். இப்றாகிம் ஒரு சமுதாயத்தையேவாழவைக்கும்அளவிற்கு மாபெரும்வியாபாரசாம்ராஜ்யத்தைதன் ஐம்பது வயதிற்குள்நிர்மாணித்தமாமாவின் சாதனைஇன்றளவும் ஆச்சர்யமானதே.
அடுத்ததாக, நம் அத்தா, பெரியத்தாபடித்து பட்டம் பெற்றதும் பெரும் சாதனை,
அத்தாவை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலித்து ஆள்வைத்து அழைத்துகல்லூரியில் சேர்த்தார்களாம்.
ஊர் மெச்சும் ஆணையர் என்ற பெரும் உத்யோகத்தில்அத்தா நம் உறவுகளுக்கு ஆற்றியபணியும் சொல்லில் அடங்காதது
.தாசில்தார் பெரியத்தரஐ.ஜி. ஜாபர் அலி ஏர்போர்ஸ் அஜ்மல், A C Policeசிராஜிதீன்
,சர்புதீன் உட்படநிறைய பேங்க்ஆபீசர்கள்,ஷஹா போன்றஅண்ணா யூனிவர்சிடிபேராசியர்கள் என்றுபுகாத துறை இல்லைஎனும் அளவிற்குஅரசு, தனியார்உத்யோகங்களில்நம் ஊர்மக்கள்இன்று கொடிகட்டி பறக்கின்றனர்.
இறுதியாக குறைந்தவருமானத்திலும்நேர்த்தியாக,செம்மையாக,
எதுகை, மோனைஎன்ற கலைநயப்பேச்சுவழக்குடன்வாழும் நம் திருப்பத்தூர் மக்கள் இன்றும்தனித்தன்மைபெற்றவர்கள்தான்.
சொந்த ஊர் விட்டுஎங்கு சென்றாலும்தன் பேச்சுவழக்குஆளுமை என்று மற்றவர்களிடம் தன்னைநிலை நிறுத்திக்கொள்ளும் ஆற்றல்இயல்பாகப்பெற்றவர்கள் நம் மக்கள்.
சமீபத்தில் மறைந்தசின்னத்திரை நடிகர் மாரிமுத்து என்பவர்,தன் இயல்பானமதுரைத்தமிழ், பேச்சுவழக்கால் சீரியல்உலகில் ஒருமைல்கல்லை நாட்டியவர் சட்டென்றுமறைந்தஅந்த நடிகரின்இடத்தை நிரப்பமுடியாமல் சீரியல்காரர்கள் இன்றளவும்திணறுகிறார்கள்.
நம் வட்டார பேச்சுவழக்கு தான்சீரியல் வெற்றிக்குமுக்கிய காரணம்.
இவ்வாறு நம் திருபின் பெருமையைஇன்னும் நிறையகூறிக்கொண்டேபோக லாம்.
பி(எ)ன் குறிப்பு பிறர் எழுதி அனுப்பும் பதிவுகளை கூடிய மட்டும் edit பண்ணாமல் அப்படியே போடுகிறேன்
அப்படிப் போட்டால்தான் உணர்வுகளின் உயிரோட்டம் தெரியும்
சில செய்திகள் ,கருத்துகள் திரும்பத் திரும்ப வரும்
ஒரே ஊரைப்பற்றி பலமுறை பலரும் எழுதும்போது இது தவிர்க்க முடியாத ஓன்று
இறைவன் நாடினால் நாளை திருமறையிலும் அடுத்த வாரம் சொந்த ஊரிலும் சிந்திப்போம்
31 01 2024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment