Thursday, 11 January 2024

திருமறை குரான் 10 :16 12012024 வெள்ளி

 



திருமறை குரான்

10 :16
12012024 வெள்ளி
“----------நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன்---------”
குரானில் எந்த இடத்தில் வசனத்தின் இந்தப் பகுதி வருகிறது ?
விடை
சூராஹ் 10 (யூனுஸ்) வசனம் 16
"(இதை நான் உஙக்ளுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) ஏக இறைவன் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்;
மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்;
நிச்சயமாக நாம் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் –
இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக
(10:16)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா --முதல் சரியான விடை
தல்லத்
ஹசன் அலி
ஷிரீன் பாரூக்
கதீப் மாமுனா லப்பை &
சலீமா பானு
விளக்கம்
“திருமறை இறைவனிடமிருந்து வந்தது அல்ல
இது நபி ஸல் அவர்கள் இயற்றியது . அதை பொய்யாக இறைவன் அனுப்பியதாக சொல்லித் திரிகின்றார் “
என்ற பரப்புரையில் ஈடுபடும் இறை மறுப்பாளர்களுக்கு மறுமொழியாக திரு மறையில் வரும் பல வசனங்களில் ஓன்று இது
நபி பெருமான் பிறந்தது , 40 ஆண்டுகள் வாழ்ந்தது ,வணிகம் ,இல்வாழ்க்கை எல்லாம் அவர்களுடன்தான்
இந்த நாற்பது ஆண்டுகளில் சிறப்பான ஆன்மீகப் படிப்போ பயிற்சியோ அவருக்குக்கிடையாது
ஒரு நபி ஆகப் போகிறோம் என்ற அறிகுறி பேச்சிலோ ,செயலிலோ தெரிந்ததில்லை
பொய் , துரோகம் , ஏமாற்று என்று ஒரு சிறு துளி களங்கமும் இல்லாத வாழ்க்கைதான்
அதனால் நம்பிக்கைக்கு உரியவர் “அல் அமீன் “என்று அடையாளம் காணப்பட்டவர்
பல பிரச்சினைகளில் அவர் சொல்லும் எந்தத் தீர்வும் மக்களால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளபட்டது
இதற்கு ஓர் எடுத்துகாட்டாக :
புனித காபாவை போர் மேகங்கள் சூழ்ந்தான . வெளியிலிருந்து யாரும் படை எடுத்து வரவில்லை
இது உள்ளூர் பூசல்
பெருமழை வெள்ளத்தால் சேதமடைந்த புனித காபாவை சீர் செய்யும் பணிநடை பெறுகிறது
சுவனத்தின் கல் ஹஜ்ரி அஸ்வத் Hajr-i-Aswad என்ற கருப்புக்கல்லை உரிய இடத்தில் பொருத்தி வைக்கவேண்டும்
இந்தபெருமை எங்களுக்கு வேண்டும் என எல்லாக் குலத் தலைவர்களும் உரிமை கோரினர்
அது சண்டையாக , போராகா மாறும் ஒரு இறுக்கமான சூழ்நிலை
இதை மாற்ற
அடுத்த நாள் அதிகாலையில் யார் காபாவுக்குள் முதலில் நுழைகிறாரோ
அவர்சொல்லும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது என்று எல்லோரும் ஒத்துக்கொண்டனர்
அப்படி முதலில் வந்தது முகமது என்பதை அறிந்து எல்லோரும் ஒட்டு மொத்தமாக மகிழ்ச்சி அடைத்தனர்
.அவ்வளவு நம்பிக்கை அவர் மேல்
இது நடந்தது நபித்துவம் பெற ஐந்து ஆண்டுக்கு முன்பு
இந்த அளவுக்கு எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவர் பொய் சொல்வாரா
என்ற சிந்தனையை நம்பிக்கையற்றோர் உள்ளத்தில் விதைக்கிறான் இறைவன் இந்த வசனத்தின் மூலம்
இறைவன் நாடினால் நாளை தமிழில்
சிந்திப்போம்
29ரஜபுல் ஆகிர் (6) 1445
12012024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment