Thursday, 25 January 2024

திருமறை குரான் 45:5 26012024 வெள்ளி

 



திருமறை குரான்

45:5
26012024 வெள்ளி
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மழையை இறைவன் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு சான்றுகள் இருக்கின்றன. 45:5
திருமறையில் எங்கு வரும் வசனம் இது.?
விடை
சுராஹ் 45 (ஜஸ்ஸியா –(முழந்தாளிட்டுப் பணிதல் Kneeling down )
வசனம் 5
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா லெப்பை முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத்&
சிராஜுதீன்
ஷர்மதா
வசனம் 2:164
என்ற விடையை அனுப்பிய சகோ
மெஹராஜ், சிக்கந்தர் இருவருக்கம் நன்றி
பொருள் ஒத்துப்போனாலும் சில சொற்கள் மட்டும் மாறுபடுகின்றன
விளக்கம்
இது போன்ற பொருள் கொண்ட பல வசனங்கள் குர்ஆனில் வருகின்றன
இறைவனின் மாட்சிமைக்கு சான்றுகளை தேடி நாம் எங்கோ போக வேண்டாம்
நம் கண் முன்னால், அன்றாட நிகழ்வுகளில் நிறையவே சான்றுகள் இருக்கின்றன
அறிவுடையவர்கள் சிந்திப்பவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் .
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
14 ரஜப் (7) 1445
26012024வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment