திருமறை குரான்
24 :27
19012024 வெள்ளி
“பிறர் வீட்டுக்குள் அனுமதி இன்றி நுழையக்கூடாது” என்ற கருத்து வரும் திருமறை வசனம் எது ?
விடை
சுராஹ் 24 *அந்நூர்) வசனம் 27
ஏக இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு முகமன் (சலாம் ) சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)..i24:27
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா லெப்பை –முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத்
ஷிரீன் பாருக் &
ஷர்மதா
விளக்கம்
உலகின் ஒளி -(அந்நூர்) என்ற சுராஹ் 24இல் அன்றாட வாழ்வின் ஒழுங்கு முறைகள் பலவும் சொல்லபடுகின்றன
ஒரு சிலவற்றின் கருத்துக்கள்
(24:2) வரம்பு மீறிய உறவுகளுக்கு ஆணோ பெண்ணோ 100 கசையடி தண்டனை
(24:12, 23ஒழுக்கமான பெண்கள் பற்றி அவதூறு பரபஊவோருக்கு கடும் தண்டனை
. (24:3031) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொண்டு கற்பொழுக்கத்தை பாதுகாக்கட்டும். பெண்கள் தங்கள் உடலை ஆடையால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும் பூமியில் கால்களை தட்டி நடக்கவேண்டாம்
.
12. (24:32) ஆண்களும் பெண்களும் தனித்திருக்காமால் திருமணம் செய்து கொள்ளுங்கள்
(24:58) காலை தொழுகைக்கு முன்பு, .மதிய ஓய்வு நேரம் ,இரவு தொழுகைக்குப்பின் இந்த மூன்று நேரங்களில் குழந்தைகளும்பணியாளர்களும் அனுமதி பெறாமல் அறைக்குள் நுழையக்கூடாது (இந்த நேரங்களில் ஆடைகள் கலைந்திருக்கலாம் )
இவையெல்லாம் வெறும் அறிவுரைகள் அல்ல .இறைவன் கட்டளைகள்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
07 ரஜப் (7) 1445
19012024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment