Sunday, 28 January 2024

கருப்பு நிலா 28012024 ஞாயிறு





கருப்பு நிலா
28012024 ஞாயிறு
நீங்கள் பாரத்திருக்கிறீர்களா
கருப்பு நிலாவை ?
நான் பார்த்திருக்கிறேன்
இந்தக் கதை கருப்பு நிலாவைச் சுற்றியே நகர்கிறது
போக்குவரத்து சந்தடி நிறைந்த வணிகச் சாலை அதை ஒட்டி ஒரு குறுகிய சந்து
வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி சந்தை நோக்கி நடக்கின்றன கால்கள்
எதற்கு வந்தோம் இங்கு ?
புரியவில்லை
நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணம் அருகில் உள்ள ஊரில்
நீண்ட இடைவெளிக்குப்பின் நான வண்டியை ஓட்டினேன் வேறு வழியில்லாததால்
இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை அந்த அளவுக்கு சுவையான விருந்து, நண்பனின் தனிப்பட்ட கவனிப்பு
மூன்றாவது நாள் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கபோனோம் . பளிங்கு போல் தண்ணீர் தரை தெரியும் அளவுக்கு தூய்மை
ஆசை தீர நன்றாகக் குளித்து விட்டு மீண்டும் நண்பன் வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேர வேண்டும் என்று புறப்பட்டு விட்டேன்
ஆனால் என்னை அறியாமல் மனம்போன போக்கில் கால் (கார்) போய் இப்போது இந்த நகரின் சந்தில் நிற்கிறேன்
சந்துக்குள் கொஞ்சதூரம் நடந்ததும் சந்தின் மறுமுனையில் உள்ள கோயில் கண்ணில் பட்டது
உடனே மின்னல் அடித்து போல் பழைய நினைவுகள் -60 ஆண்டுகள் பின்னோக்கி வேகமாக்ப் பயணித்து எண்ணப் பறவை சிறகடித்துப்பறந்து இப்போது அரை ட்ரவுசரில் 10 வயதுப் பையனாகி விட்டேன்
இந்தச் சந்தில்தான் எங்கள் ஓன்று விட்ட சித்தப்பா வீடு இருந்தது எங்கள் வீட்டுக்குவந்த சித்தப்பா கோடை விடுமுறையில் இருந்த என்னை அவருடன் கூட்டிக் கொண்டு போனார்
ஒருமாசம்அங்கே அவர்களின் அன்பையும் பாசத்தையும் அனுபவித்தேன்
குளத்தில் குளியல் ,அவ்வவ்ப்போது சினிமா
அருகில் உள்ள j கோயிலில் தேவாரம் திருவாசகம் குறள் என பலவும் பாடம் நடத்துவார் தமிழாசிரியர் ஒருவர்
கணீரென்ற குரலில் மிகத் தெளிவாக விளக்க்கமாக சொல்லிக்கொடுப்பார்
சிறுவர் சிறுமிகள் மொத்தம் 20 பேர் இருப்போம்
ஆசிரியர் அளவுக்கு ஈடுபாடு எனக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் வரவில்லை
அப்படியும் ஒரு சில வரிகளாவது மனதில் பதிந்து விட்டன
“தென்னாடுடைய சிவனே போற்றி “
“ஒருமையுடன் நினது திருமலர் அடி “
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் “
சியாமளா என்றொரு சிறுமி
நேர்த்தியான உடையில் வருவார
உடை என்றால் பாவாடை சட்டை மட்டும்தான் அந்தக் கால நாகரீகமாக இருந்தது
களையான முகம் ,அழகிய கண்கள்
பெரிய கருப்பு விழிகள்
கண்ணுக்குள் கருப்பு நிலவோ எனத் தோன்றும்
ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டோம்
காதல் போன்ற உணர்வுகள் வரும் அளவுக்கு முதிர்ச்சி அடையாமல் சிறுவர்கலாகவே இருந்தோம் (இருந்தேன்)
நாட்கள் போனதே தெரியவில்லை
பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி விட புதிய வகுப்பு, பழைய நண்பர்கள் என்று எண்ணங்கள் தாவி அந்த உற்சாகம் பற்றிக் கொண்டது
ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள்
கோயிலில் ஒரு இடம் மரம் செடி நிறைந்து குளிர்ச்சியாக இருக்கும்
தென்றல் வீசுவது போன்ற ஒரு மென்மை அங்கு இருக்கும்
அங்கு உட்கார்ந்து அப்படியே கண் அயர்ந்து விட்டேன்
அருகில் யாரோ நிற்பது போல் உணர்வு
கனவா நனவா என்று புரியாத அரை விழிப்பு நிலை
கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தால்
சியாமளா!!
உட்கார்ப் போனவர் நின்றபடியே என் கன்னத்தில் விரலால் செல்லமாகத் தட்டி விட்டு சிட்டாகப் பறந்து விட்டார்
உடம்பும் மனதும் சில்லிட்டுப் போனது ஒரு நொடி
மற்றபடி நினைவுகள் தொடரவுமில்லை , கனவுகள் தோன்றவமில்லை
சித்தப்[பாவோடு ஊருக்குப் புறப்பட்டு விட்டேன்
இந்த அறுபது ஆண்டுகளில் பலமுறை சித்தப்பா வீட்டுக்கு வந்தும் சியாமளாவை மனதோ கண்களோடு தேடவில்லை
பின் எதற்காக இங்கு வந்தேன் ?
சித்தப்பா வீடும் அங்கு இல்லை
பிறகு யாரைத்தேடி வந்தேன் ஊர் விட்டு ஊர் ?
என்னை அறியாமல் என் மனதில் அந்தக் கருப்பு நிலவு பதிந்து பதுங்கி
இருந்ததா ?
இப்போது ஏன் அது உதித்து மேலே வந்தது ?
இப்படி பல ஏன்கள்
விடையில்லா வினாக்கள்
நிறைவில்லாமல் நிறைவு செய்கிறேன்
நிறைவுப் பகுதிஉங்கள் கற்பனைக்கு
தோன்றியதை எழுதி அனுப்பங்க்ள் நானும் தெரிந்து கொள்கிறேன்
(குரான் தமிழ் ஆங்கிலம் சொந்த ஊர் என்று ஒரே மாதிரி அட்டவணையில் சலிப்புத் தட்ட அந்த சலிப்பின் விளைவாக தோன்றிய திடீர் கதை இது
இதற்கு மேல் ஜற்பனைகுதிரை ஓடவில்லை }
28012024 ஞாயிறு
தொடரந்து
ஒரு வழியாக சண்டித்தனம் செய்த கற்பனைக் குதிரையை உசுப்பி எழுப்பியதில்
மெதுவாக நடந்து ஓடத் துவங்கியது
(நிறைவில்லாமல் அரை குறையாக எதையும் விடுவது தவறு என்பது என் எண்ணம் )
கோயிலில் முன்பு நான் உட்கார்ந்த இடத்தில் போய் அமர்ந்தேன்
அதிக மாறுதல் இல்லாமல் அப்படியே தென்றல் தவழ இருந்தது
அப்படியே கண்ணை மெல்ல மூடி கற்பனை
கிறுக்குத தனமான கற்பனை – மீண்டும் சியாமளா அதே பாவாடை சட்டையில் வருவது போல்
அந்த கற்பனை சுகத்தை கலைப்பது போல்
“அண்ணா “
என்று ஒரு குரல் அழைக்க திடுக்கிட்டு கண் விழித்தேன்
நம்ப முடியவில்லை
மீண்டும் சியாமளா பாவாடை சட்டையில் இல்லை
நல்ல காஞ்சி பட்டில் தலை நிறைய பூவுடன்
60 ஆண்டு இடைவெளி அவர் முகத்தில் ,உடலில் அதிகமாக் முதுமைக் கோடுகளை வரையவில்லை
அதே களையான முகம்
கருப்பு நிலவு கொஞ்சமும் மாற்றமின்றி
நெஞ்சில் ஒரு சிலிர்ப்பு
சிறிய வலி அண்ணா என்றதில்
மிகவும் இயல்பாகப் பேசினார்
“என்னைத் தெரிகிறதா அண்ணா “
எப்படி வெட்கத்தை விட்டு “உன்னைத் தேடித்தான் வந்தேன் “என்று சொல்ல முடியும் !
“தெரியலியே “ என்று சுரத்தில்லாமல் முனகினேன்
“ஆமாம் , ஐம்பது அறுபது ஆண்டுக்கதை மறந்திருக்கும் “
என்றவர் தொடர்ந்தார்
“கோடை விடுமுறையல் கோயிலில் வகுப்பில் பார்த்தது
எனக் கென்னவோ பாசம் அப்போதே உங்கள் மேல் இனம் புரியாத பாசம்
கூடப் பிறந்த அண்ணன் தம்பி யாரும் இல்லை எனக்கு
பெயர் கூட தெரியாத நீங்கள் என் அண்ணன் என்றே ,மனதில் பதிந்து விட்டது
இதற்கு காரணம் எனக்குத் தெரியவில்லை
முற்பிறவி பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது
உங்களுடன் பேச வேண்டும் ,பழக வேண்டும் என்று எனக்கு மனதுக்குள் அளவற்ற ஆவல்
ஆனால் இன்று போல் அன்று ஆணும் பெண்ணும் எந்த வயதிலும் இயல்பாகப் பேசிப் பழக முடியாது
வாழ்நாளில் எப்போதவது உங்களை சந்திப்போம் பேசுவோம் என்ற நம்பிக்கை மட்டும் என மனதின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது
கடவுள் அருளால் இன்று அது நிறைவேறி விட்டது “
என்று மடை திறந்த வெள்ளம் போல் பேசிவிட்டு
“இப்போது என் நினைவு உங்களுக்கு வருகிறதா ?” என்று கேட்டார்
“ ஆம் ,லேசாக வருகிறது
பெயர சர்மிளா தானே “
மீண்டும் நெஞ்சறிந்த பொய்
சர்மிலா இல்லை யண்ணா சியாமளா “
என்று சொன்னபடி
“ வாங்க வீட்டுக்குப் போகலாம் “
என்று கையைப் பிடித்து அழைத்தார்
“ இல்லை இல்லை , சந்து முனையில் என் வண்டி நிற்கிறது
நான் இரவு வருவேன் என்று வீட்டில் துணைவி எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் “ என்றேன் (இதில் பொய் ஏதும் இல்லை )
“அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்
வீட்டுஉகு வந்து இரவு தங்கி விட்டு காலை உணவுக்கு முன் உங்களைப் போக விட மாட்டேன்” என்று உறுதியாச் சொன்னார்
எனக்கும் இவ்வளவு நேரம் ஆனபிறகு இரவில் வண்டி ஓட்டத் தயக்கம்
நடக்கும் தொலைவில் விசாலமான வசதியான பெரிய வீடு
அங்கு ஒருவரிடம் சாவியைக் கொடுத்து என் வண்டியை வீட்டுக்குக் கொண்டுவரச் செய்தார்
என் துணைவியிடம் கைபேசியில சொன்னதை நன்றாகப் புரிந்து கொண்டு சரி என்று சொல்லி விட்டார்
எதையும் தூண்டித் துருவிக் கேட்கும் பழக்கம் கிடை யாது
தேவை இல்லாமல் சந்தேகிக்கவ்ம் மாட்டார் என் துணைவி
என் மேல் ,என் ஒழுக்கத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை
அந்த நம்பிக்கையை இது வரை காப்பாற்றி வருகிறேன்
ஒரு முழுமையான புரிதல் எங்களுக்கிடையே இருந்தது
ஒளிவு மறைவு என்று எதுவும் கிடையாது
சியமளா தன துணைவரிடம் ஒரு VIp போல ,நெருங்கிய உறவினர் போல என்னை அறிமுகம் செய்து வைத்தார்
அவரும் நல்ல கலகலப்பானவராக இருந்தார்
இரவு மாடியில் நிலா ஒளியில் வெகு நேரம் பெசிகொண்டே இடையில்
காபி , சிற்றுண்டி இரவு உணவு எல்லாம் சாப்பிட்டோம்
நாளிரவு தாண்டி ஒரு மணிக்கு மேல்தான் தூங்கினோம்
இதற்கிடையில் சியாமளாவும் என் துணைவியிடம் கைபேசியில் நன்றாகப் பேசினார்
இதெல்லாம் மிகவம் வியப்பாக் இருந்தது எனக்கு
ஒரு சில நாள் பார்த்த (பழகிய என்று சொல்ல முடியாது} ஒருவரிடம் இவ்வளவு அன்பாகப் பேச முடியுமா ,இது பெண்களில் , தாய்மையின் சிறப்பா என்று
காலையில் எழுந்து களைப்புத் தீர குளித்து , காபி காலை சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்பினேன்
பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார் சியாமளா
குடும்பத்கோடு வந்து ஒரு வாரமாவது தங்கி விட்டுப் போக அழைப்பு
“எனக்கு அழைப்பெல்லாம் தேவை இல்லை . அண்ணனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டால் தொலைபேசியில் தகவல் சொல்லி விட்டு வந்து விடுவோம் ´என்றார்
வண்டியில் உட்கார்ந்தால்
பின் இருக்கையில் பெரிய பை
இதுஒன்றுமில்லை உங்கள் துணைவிக்கு கொஞ்சம் பழங்கள் ,பலகாரங்கள் “ என்று நான் கேட்கு முன்பே சொல்லி விட்டார்
இனிய நினவுகளை மனதில் சுமந்தவனாய் வீடு நோக்கிப் பயணித்தேன்
எப்போதோ எதிலோ படித்த ஓன்று நினைவில் வந்தது
“To every journey there Is a return journey “
PS
“கதை நிறைவு பெறாமல் இருக்கிறது
உங்களுக்குத் தோன்றிய நிறைவுப்பகுதியை எழுதி அனுப்புங்கள்”
என்று நேற்றுக் கேட்டிருந்தேன்
யாரும் எழுதவில்லை
ஒரே ஒரு சகோவுக்கு ஒரே ஒரு கேள்வி
“இது உண்மை நிகழ்வா கற்பனையா “ என்று
“கற்பனையோ ,உண்மையோ
உனக்கு நல்ல கதை எழுதும் திறமை இருக்கிறது “ என்றார்
இது பாராட்டா வஞ்சப் புகழ்ச்சியா என்று தெரியவில்லை
கற்னைதான் இது
என்னைப் பொருத்த வரையில்
உங்களுக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படியே
வைத்துக் கொள்ளுங்க
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
28012024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment